அத்தியாயம்: 1, பாடம்: 83, ஹதீஸ் எண்: 273

و حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏وَأَبُو كُرَيْبٍ ‏ ‏وَاللَّفْظُ ‏ ‏لِأَبِي كُرَيْبٍ ‏ ‏قَالَا حَدَّثَنَا ‏ ‏أَبُو مُعَاوِيَةَ ‏ ‏عَنْ ‏ ‏الْأَعْمَشِ ‏ ‏عَنْ ‏ ‏إِبْرَاهِيمَ ‏ ‏عَنْ ‏ ‏عَبِيدَةَ ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ اللَّهِ ‏ ‏قَالَ :‏ ‏

قَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏إِنِّي لَأَعْرِفُ آخَرُ أَهْلِ النَّارِ خُرُوجًا مِنْ النَّارِ رَجُلٌ يَخْرُجُ مِنْهَا زَحْفًا فَيُقَالُ لَهُ انْطَلِقْ فَادْخُلْ الْجَنَّةَ قَالَ فَيَذْهَبُ فَيَدْخُلُ الْجَنَّةَ فَيَجِدُ النَّاسَ قَدْ أَخَذُوا الْمَنَازِلَ فَيُقَالُ لَهُ أَتَذْكُرُ الزَّمَانَ الَّذِي كُنْتَ فِيهِ فَيَقُولُ نَعَمْ فَيُقَالُ لَهُ تَمَنَّ فَيَتَمَنَّى فَيُقَالُ لَهُ لَكَ الَّذِي تَمَنَّيْتَ وَعَشَرَةَ أَضْعَافِ الدُّنْيَا قَالَ فَيَقُولُ أَتَسْخَرُ بِي وَأَنْتَ الْمَلِكُ قَالَ فَلَقَدْ رَأَيْتُ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏ضَحِكَ حَتَّى بَدَتْ ‏ ‏نَوَاجِذُهُ ‏

“நரகவாசிகளில் நரகத்திலிருந்து வெளியேறும் இறுதியானவரைப் பற்றி நான் நன்கறிவேன். (இறுதியானவராக) நரகத்திலிருந்து தவழ்ந்தபடி வெளியேறுகின்ற அவரிடம், ‘நீ போய் சொர்க்கத்தில் நுழைந்து கொள்!’ என்று கூறப்படும். அவர் சொர்க்கத்தில் நுழைந்து, அங்குள்ளவர்கள் தத்தம் தகுதிப்படி பதவிகளைப் பிடித்துக் கொண்டிருப்பதைக் காண்பார். ‘நீ கடந்த காலத்தை நினைத்துப் பார்க்கிறாயா?’ என்று அவரிடம் கேட்கப்படும். அவர், ‘ஆம்’ என்பார். ‘நீ இன்னின்னதை ஆசைப்படு!’ என்று அறிவுறுத்தப்படும். அவர் அவ்வாறே ஆசைப்படுவார். ‘நீ ஆசைப்பட்டதும் உலகத்தின் பத்து மடங்கும் உனக்குக் கிடைக்கும்’ என்று அவரிடம் (அல்லாஹ்வால்) கூறப்படும். அதற்கவர், ‘அரசனாகிய நீ என்னைக் கேலி செய்கின்றாயா?’ எனக் கேட்பார்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள். (இதைக் கூறும்போது) அவர்கள் தம் கடைவாய்ப் பற்கள் தெரியச் சிரித்ததை நான் பார்த்தேன்.

அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி)

Share this Hadith:

Leave a Comment