அத்தியாயம்: 1, பாடம்: 83, ஹதீஸ் எண்: 274

حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَفَّانُ بْنُ مُسْلِمٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏حَمَّادُ بْنُ سَلَمَةَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏ثَابِتٌ ‏ ‏عَنْ ‏ ‏أَنَسٍ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ مَسْعُودٍ ‏:‏

أَنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَالَ ‏ ‏آخِرُ مَنْ يَدْخُلُ الْجَنَّةَ رَجُلٌ فَهْوَ يَمْشِي مَرَّةً ‏ ‏وَيَكْبُو ‏ ‏مَرَّةً وَتَسْفَعُهُ النَّارُ مَرَّةً فَإِذَا مَا جَاوَزَهَا الْتَفَتَ إِلَيْهَا فَقَالَ تَبَارَكَ الَّذِي نَجَّانِي مِنْكِ لَقَدْ أَعْطَانِي اللَّهُ شَيْئًا مَا أَعْطَاهُ أَحَدًا مِنْ الْأَوَّلِينَ وَالْآخِرِينَ فَتُرْفَعُ لَهُ شَجَرَةٌ فَيَقُولُ أَيْ رَبِّ أَدْنِنِي مِنْ هَذِهِ الشَّجَرَةِ فَلِأَسْتَظِلَّ بِظِلِّهَا وَأَشْرَبَ مِنْ مَائِهَا فَيَقُولُ اللَّهُ عَزَّ وَجَلَّ يَا ابْنَ ‏ ‏آدَمَ ‏ ‏لَعَلِّي إِنَّ أَعْطَيْتُكَهَا سَأَلْتَنِي غَيْرَهَا فَيَقُولُ لَا يَا رَبِّ وَيُعَاهِدُهُ أَنْ لَا يَسْأَلَهُ غَيْرَهَا وَرَبُّهُ يَعْذِرُهُ لِأَنَّهُ يَرَى مَا لَا صَبْرَ لَهُ عَلَيْهِ ‏ ‏فَيُدْنِيهِ ‏ ‏مِنْهَا فَيَسْتَظِلُّ بِظِلِّهَا وَيَشْرَبُ مِنْ مَائِهَا ثُمَّ تُرْفَعُ لَهُ شَجَرَةٌ هِيَ أَحْسَنُ مِنْ الْأُولَى فَيَقُولُ أَيْ رَبِّ أَدْنِنِي مِنْ هَذِهِ لِأَشْرَبَ مِنْ مَائِهَا وَأَسْتَظِلَّ بِظِلِّهَا لَا أَسْأَلُكَ غَيْرَهَا فَيَقُولُ يَا ابْنَ ‏ ‏آدَمَ ‏ ‏أَلَمْ تُعَاهِدْنِي أَنْ لَا تَسْأَلَنِي غَيْرَهَا فَيَقُولُ لَعَلِّي إِنْ أَدْنَيْتُكَ مِنْهَا تَسْأَلُنِي غَيْرَهَا فَيُعَاهِدُهُ أَنْ لَا يَسْأَلَهُ غَيْرَهَا وَرَبُّهُ يَعْذِرُهُ لِأَنَّهُ يَرَى مَا لَا صَبْرَ لَهُ عَلَيْهِ ‏ ‏فَيُدْنِيهِ مِنْهَا فَيَسْتَظِلُّ بِظِلِّهَا وَيَشْرَبُ مِنْ مَائِهَا ثُمَّ تُرْفَعُ لَهُ شَجَرَةٌ عِنْدَ بَابِ الْجَنَّةِ هِيَ أَحْسَنُ مِنْ الْأُولَيَيْنِ فَيَقُولُ أَيْ رَبِّ أَدْنِنِي مِنْ هَذِهِ لِأَسْتَظِلَّ بِظِلِّهَا وَأَشْرَبَ مِنْ مَائِهَا لَا أَسْأَلُكَ غَيْرَهَا فَيَقُولُ يَا ابْنَ ‏ ‏آدَمَ ‏ ‏أَلَمْ تُعَاهِدْنِي أَنْ لَا تَسْأَلَنِي غَيْرَهَا قَالَ بَلَى يَا رَبِّ هَذِهِ لَا أَسْأَلُكَ غَيْرَهَا وَرَبُّهُ يَعْذِرُهُ لِأَنَّهُ يَرَى مَا لَا صَبْرَ لَهُ عَلَيْهَا ‏ ‏فَيُدْنِيهِ مِنْهَا فَإِذَا أَدْنَاهُ مِنْهَا فَيَسْمَعُ أَصْوَاتَ أَهْلِ الْجَنَّةِ فَيَقُولُ أَيْ رَبِّ أَدْخِلْنِيهَا فَيَقُولُ يَا ابْنَ ‏ ‏آدَمَ ‏ ‏مَا ‏ ‏يَصْرِينِي مِنْكَ ‏ ‏أَيُرْضِيكَ أَنْ أُعْطِيَكَ الدُّنْيَا وَمِثْلَهَا مَعَهَا قَالَ يَا رَبِّ أَتَسْتَهْزِئُ مِنِّي وَأَنْتَ رَبُّ الْعَالَمِينَ ‏ ‏فَضَحِكَ ‏ ‏ابْنُ مَسْعُودٍ ‏ ‏فَقَالَ أَلَا تَسْأَلُونِي مِمَّ أَضْحَكُ فَقَالُوا مِمَّ تَضْحَكُ قَالَ هَكَذَا ضَحِكَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَقَالُوا مِمَّ تَضْحَكُ يَا رَسُولَ اللَّهِ قَالَ مِنْ ضِحْكِ رَبِّ الْعَالَمِينَ حِينَ قَالَ أَتَسْتَهْزِئُ مِنِّي وَأَنْتَ رَبُّ الْعَالَمِينَ فَيَقُولُ إِنِّي لَا أَسْتَهْزِئُ مِنْكَ وَلَكِنِّي عَلَى مَا أَشَاءُ قَادِرٌ

“இறுதியாகச் சொர்க்கத்தில் நுழையக் கூடிய ஒருவர், (நரகத்திலிருந்து வெளியேறி) ஒருபோது நடந்தும் ஒருபோது தவழ்ந்தும் வருவார். ஒருபோது நரக நெருப்பு அவரது முகத்தைத் தாக்கும். இந்நிலையில் அவர் நரகத்தைத் தாண்டியதும் அதைத் திரும்பிப் பார்த்து, ‘நற்பேறுகளுக்கு உரிய(என்னிறை)வன் உன்னிடமிருந்து என்னைக் காப்பாற்றி விட்டான். (எனக்கு) முன்-பின்னோர் எவருக்கும் வழங்காத பேற்றை அல்லாஹ் எனக்கு வழங்கினான்!’ என்று கூறுவார். அப்போது அவருக்கு ஒரு மரம் காட்டப்படும். உடனே அவர், ‘என் இறைவா! அந்த மரத்திடம் என்னைக் கொண்டு சேர்ப்பாயாக! அதனிடம் நிழலைப் பெற்றுக் கொள்வேன்; அதன் (கீழ் ஓடும்) நீரைப் பருகிக் கொள்வேன்’ என்று கூறுவார். ‘ஆதமின் மகனே! அதை நான் உனக்கு வழங்கினால் அதையன்றி வேறொன்றும் என்னிடம் கேட்க மாட்டாயே?’ என்று வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ் கேட்பான். அதற்கவர், ‘இல்லை; வேறெதையும் உன்னிடம் நான் கேட்க மாட்டேன் இறைவா!’ என்று வாக்குறுதி அளிப்பார். அவரது அவசரத்தைக் காணும் இறைவன், அவருக்கு வாய்ப்பளித்து, அவரை அந்த மரத்தின் அருகே கொண்டு சேர்ப்பான். அவர் அந்த மரத்தின் நிழலைப் பெறுவார்; அதன் (கீழ் ஓடும்) நீரைப் பருகிக் கொள்வார்.

பின்னர், முதலில் காட்டப்பட்ட மரத்தைவிட மிகவும் அழகான மற்றொரு மரம் அவருக்குக் காட்டப்படும். (அதைக் காணும்) அவர், ‘என் இறைவா! அதனிடம் என்னைக் கொண்டு சேர்ப்பாயாக! நான் அதன் நீரைப் பருகி அதன் நிழலை அடைந்துக் கொள்வேன்! அதையன்றி வேறெதையும் உன்னிடம் கேட்க மாட்டேன்’ என்று கூறுவார். ‘ஆதமின் மகனே! வேறெதையும் கேட்கமாட்டேன் என்று என்னிடம் நீ (முன்பு) வாக்குறுதி கொடுத்தாயே! அதனிடம் உன்னை நான் கொண்டு சேர்த்தால் அதையன்றி வேறொன்றும் என்னிடம் கேட்க மாட்டாயே?’ என்று அல்லாஹ் கேட்பான். அவர், ‘வேறெதையும் கேட்க மாட்டேன்’ என்று (மீண்டும்) வாக்குறுதி அளிப்பார். அவரது அவசரத்தைக் காணும் இறைவன், அவருக்கு (இன்னொரு) வாய்ப்பளித்து, அவரை அந்த (அழகிய) மரத்தின் அருகே கொண்டு சேர்ப்பான். அவர் அந்த மரத்தின் நிழலைப் பெறுவார்; அதன் (கீழ் ஓடும்) நீரைப் பருகிக் கொள்வார்.

பிறகு முதலிரண்டு மரங்களை விடவும் பேரழகான, சொர்க்க வாசலில் உள்ள ஒரு மரம் அவருக்குக் காட்டப்படும். (அதைக் கண்ட) அவர், ‘என் இறைவா! அதனிடம் என்னைக் கொண்டு சேர்ப்பாயாக! நான் அதன் நீரைப் பருகி அதன் நிழலை அடைந்துக் கொள்வேன்! அதையன்றி வேறெதையும் உன்னிடம் கேட்க மாட்டேன்’ என்று கூறுவார். ‘ஆதமின் மகனே! வேறெதையும் கேட்கமாட்டேன் என்று என்னிடம் நீ (முன்பு இருமுறை) வாக்குறுதி கொடுத்தாயே! என்று கேட்பான். அதற்கு அவர், ‘ஆம்; என் இறைவா! இந்தத் தடவை அதையன்றி வேறெதையும் உன்னிடம் கேட்கமாட்டேன்’ என்று கூறுவார். அவரது அவசரத்தைக் காணும் இறைவன், அவருக்கு வாய்ப்பளித்து, அவரை அந்த மரத்தின் அருகே கொண்டு சேர்ப்பான். அவர் அந்த மரத்தை நெருங்கும்போது சொர்க்கவாசிகளின் குரல்கள் அவருக்குக் கேட்கும். உடனே அவர், ‘என் இறைவா! சொர்க்கத்தின் உள்ளே என்னை அனுப்புவாயாக!’ என்று கேட்பார். அதற்கு இறைவன், ‘ஆதமின் மகனே! ஏன் என்னிடம் கோருவதை நிறுத்திக் கொண்டாய்? உலகத்தையும் அதைப் போன்ற இன்னொரு மடங்கையும் உனக்கு நான் வழங்கினால் நீ மனநிறைவு கொள்வாய் அல்லவா?’ என்று கேட்பான். அதற்கு அவர், ‘என் இறைவா! அகிலத்தின் அதிபதியே! நீ என்னைக் கேலி செய்கிறாயா?’ என்று கேட்பார்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி)


குறிப்பு :

இதை அறிவித்தபோது அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) சிரித்தார்கள். பிறகு, “நான் ஏன் சிரித்தேன் என்று என்னிடம் நீங்கள் கேட்கமாட்டீர்களா?” என்று மக்களைக் கேட்டார்கள். அப்போது மக்கள், “ஏன் சிரிக்கின்றீர்கள்?” என்று கேட்டார்கள். அதற்கு அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி), “இவ்வாறுதான் (இதைக் கூறும்போது) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) சிரித்தார்கள். அப்போது நபித்தோழர்கள், “ஏன் சிரித்தீர்கள்?, அல்லாஹ்வின் தூதரே?” என்று கேட்டார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “அகிலத்தின் அதிபதியாகிய நீ என்னைக் கேலி செய்கிறாயா?” என்று அந்த மனிதர் கூறும்போது அதைக் கேட்டு அல்லாஹ் சிரிப்பான். (அதனால் தான் நானும் சிரித்தேன்.) மேலும், “நான் உன்னைப் பரிகாசம் செய்யவில்லை. மாறாக, நாடியதைச் செய்கின்ற ஆற்றல் உள்ளவன் நான்” என இறைவன் கூறுவான் என்றும் அல்லாஹ்வின் தூதர்(ஸல்) சொன்னார்கள் என்று அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) கூறினார்கள்.

அத்தியாயம்: 1, பாடம்: 83, ஹதீஸ் எண்: 273

و حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏وَأَبُو كُرَيْبٍ ‏ ‏وَاللَّفْظُ ‏ ‏لِأَبِي كُرَيْبٍ ‏ ‏قَالَا حَدَّثَنَا ‏ ‏أَبُو مُعَاوِيَةَ ‏ ‏عَنْ ‏ ‏الْأَعْمَشِ ‏ ‏عَنْ ‏ ‏إِبْرَاهِيمَ ‏ ‏عَنْ ‏ ‏عَبِيدَةَ ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ اللَّهِ ‏ ‏قَالَ :‏ ‏

قَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏إِنِّي لَأَعْرِفُ آخَرُ أَهْلِ النَّارِ خُرُوجًا مِنْ النَّارِ رَجُلٌ يَخْرُجُ مِنْهَا زَحْفًا فَيُقَالُ لَهُ انْطَلِقْ فَادْخُلْ الْجَنَّةَ قَالَ فَيَذْهَبُ فَيَدْخُلُ الْجَنَّةَ فَيَجِدُ النَّاسَ قَدْ أَخَذُوا الْمَنَازِلَ فَيُقَالُ لَهُ أَتَذْكُرُ الزَّمَانَ الَّذِي كُنْتَ فِيهِ فَيَقُولُ نَعَمْ فَيُقَالُ لَهُ تَمَنَّ فَيَتَمَنَّى فَيُقَالُ لَهُ لَكَ الَّذِي تَمَنَّيْتَ وَعَشَرَةَ أَضْعَافِ الدُّنْيَا قَالَ فَيَقُولُ أَتَسْخَرُ بِي وَأَنْتَ الْمَلِكُ قَالَ فَلَقَدْ رَأَيْتُ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏ضَحِكَ حَتَّى بَدَتْ ‏ ‏نَوَاجِذُهُ ‏

“நரகவாசிகளில் நரகத்திலிருந்து வெளியேறும் இறுதியானவரைப் பற்றி நான் நன்கறிவேன். (இறுதியானவராக) நரகத்திலிருந்து தவழ்ந்தபடி வெளியேறுகின்ற அவரிடம், ‘நீ போய் சொர்க்கத்தில் நுழைந்து கொள்!’ என்று கூறப்படும். அவர் சொர்க்கத்தில் நுழைந்து, அங்குள்ளவர்கள் தத்தம் தகுதிப்படி பதவிகளைப் பிடித்துக் கொண்டிருப்பதைக் காண்பார். ‘நீ கடந்த காலத்தை நினைத்துப் பார்க்கிறாயா?’ என்று அவரிடம் கேட்கப்படும். அவர், ‘ஆம்’ என்பார். ‘நீ இன்னின்னதை ஆசைப்படு!’ என்று அறிவுறுத்தப்படும். அவர் அவ்வாறே ஆசைப்படுவார். ‘நீ ஆசைப்பட்டதும் உலகத்தின் பத்து மடங்கும் உனக்குக் கிடைக்கும்’ என்று அவரிடம் (அல்லாஹ்வால்) கூறப்படும். அதற்கவர், ‘அரசனாகிய நீ என்னைக் கேலி செய்கின்றாயா?’ எனக் கேட்பார்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள். (இதைக் கூறும்போது) அவர்கள் தம் கடைவாய்ப் பற்கள் தெரியச் சிரித்ததை நான் பார்த்தேன்.

அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி)

அத்தியாயம்: 1, பாடம்: 83, ஹதீஸ் எண்: 272

حَدَّثَنَا ‏ ‏عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏وَإِسْحَقُ بْنُ إِبْرَاهِيمَ الْحَنْظَلِيُّ ‏ ‏كِلَاهُمَا ‏ ‏عَنْ ‏ ‏جَرِيرٍ ‏ ‏قَالَ ‏ ‏عُثْمَانُ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏جَرِيرٌ ‏ ‏عَنْ ‏ ‏مَنْصُورٍ ‏ ‏عَنْ ‏ ‏إِبْرَاهِيمَ ‏ ‏عَنْ ‏ ‏عَبِيدَةَ ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍ ‏ ‏قَالَ :‏ ‏

قَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏إِنِّي لَأَعْلَمُ آخِرَ أَهْلِ النَّارِ خُرُوجًا مِنْهَا وَآخِرَ أَهْلِ الْجَنَّةِ دُخُولًا الْجَنَّةَ رَجُلٌ يَخْرُجُ مِنْ النَّارِ حَبْوًا فَيَقُولُ اللَّهُ تَبَارَكَ وَتَعَالَى لَهُ اذْهَبْ فَادْخُلْ الْجَنَّةَ فَيَأْتِيهَا فَيُخَيَّلُ إِلَيْهِ أَنَّهَا مَلْأَى فَيَرْجِعُ فَيَقُولُ يَا رَبِّ وَجَدْتُهَا مَلْأَى فَيَقُولُ اللَّهُ تَبَارَكَ وَتَعَالَى لَهُ اذْهَبْ فَادْخُلْ الْجَنَّةَ قَالَ فَيَأْتِيهَا فَيُخَيَّلُ إِلَيْهِ أَنَّهَا مَلْأَى فَيَرْجِعُ فَيَقُولُ يَا رَبِّ وَجَدْتُهَا مَلْأَى فَيَقُولُ اللَّهُ لَهُ اذْهَبْ فَادْخُلْ الْجَنَّةَ فَإِنَّ لَكَ مِثْلَ الدُّنْيَا وَعَشَرَةَ أَمْثَالِهَا ‏ ‏أَوْ إِنَّ لَكَ عَشَرَةَ أَمْثَالِ الدُّنْيَا ‏ ‏قَالَ فَيَقُولُ أَتَسْخَرُ بِي ‏ ‏أَوْ أَتَضْحَكُ بِي ‏ ‏وَأَنْتَ الْمَلِكُ قَالَ لَقَدْ رَأَيْتُ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏ضَحِكَ حَتَّى بَدَتْ ‏ ‏نَوَاجِذُهُ ‏ ‏قَالَ فَكَانَ يُقَالُ ذَاكَ أَدْنَى أَهْلِ الْجَنَّةِ مَنْزِلَةً ‏

“நரகவாசிகளில் நரகத்திலிருந்து வெளியேறும் இறுதியானவரைப் பற்றியும் சொர்க்கவாசிகளில் சொர்க்கத்தில் நுழையும் இறுதியானவரைப் பற்றியும் நான் நன்கறிவேன். (இறுதியானவராக) நரகத்திலிருந்து தவழ்ந்தபடி வெளியேறுகின்ற ஒருவரிடம் நற்பேறுகளுக்கு உரியவனும் மிக்குயர்ந்தோனுமாகிய அல்லாஹ், ‘நீ போய் சொர்க்கத்தில் நுழைந்து கொள்!’ என்பான். அவர் சொர்க்கத்திற்குச் சென்று பார்க்கும்போது அது நிரம்பியிருப்பதைப் போன்று அவருக்குத் தோன்றும். உடனே அவர் திரும்பி வந்து, ‘என் இறைவா! அது நிரம்பியிருக்கக் கண்டேன்’ என்று கூறுவார். அதற்கு நற்பேறுகளுக்கு உரியவனும் மிக்குயர்ந்தோனுமாகிய அல்லாஹ், ‘நீ சென்று சொர்க்கத்தில் நுழைந்து கொள்!’ என்று (மீண்டும்) சொல்வான். அவர் சொர்க்கத்திற்குச் சென்று பார்க்கும்போது அது நிரம்பியிருப்பதைப் போன்று அவருக்குத் தோன்றும். ஆகவே, அவர் திரும்பி வந்து, ‘என் இறைவா! அது நிரம்பியிருக்கக் கண்டேன்’ என்று கூறுவார். அதற்கு, ‘நீ சென்று சொர்க்கத்தில் நுழைந்து கொள். ஏனெனில், உலகம் மற்றும் அதைப் போன்று பத்து மடங்கு – அல்லது – உலகத்தைப் போன்று பத்து மடங்கு (இடம் சொர்க்கத்தில்) உனக்கு உண்டு’ என்று அல்லாஹ் சொல்வான். அதற்கு அவர், ‘அரசனாகிய நீ என்னைக் கேலி செய்கிறாயா? – அல்லது – என்னை(ப் பார்த்து) நகைக்கின்றாயா?’ என்று கேட்பார்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள். (இதைக் கூறும்போது) தம் கடைவாய்ப் பற்கள் தெரிய அவர்கள் சிரித்ததை நான் பார்த்தேன்.

அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி)