அத்தியாயம்: 11, பாடம்: 12, ஹதீஸ் எண்: 1557

و حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ يَحْيَى ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏يَزِيدُ بْنُ زُرَيْعٍ ‏ ‏عَنْ ‏ ‏أَيُّوبَ ‏ ‏عَنْ ‏ ‏مُحَمَّدِ بْنِ سِيرِينَ ‏ ‏عَنْ ‏ ‏أُمِّ عَطِيَّةَ ‏ ‏قَالَتْ :‏‏

‏دَخَلَ عَلَيْنَا النَّبِيُّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏وَنَحْنُ نَغْسِلُ ‏ ‏ابْنَتَهُ ‏ ‏فَقَالَ ‏ ‏اغْسِلْنَهَا ثَلَاثًا أَوْ خَمْسًا أَوْ أَكْثَرَ مِنْ ذَلِكَ إِنْ رَأَيْتُنَّ ذَلِكَ بِمَاءٍ وَسِدْرٍ وَاجْعَلْنَ فِي الْآخِرَةِ كَافُورًا أَوْ شَيْئًا مِنْ كَافُورٍ فَإِذَا فَرَغْتُنَّ ‏ ‏فَآذِنَّنِي ‏ ‏فَلَمَّا فَرَغْنَا ‏ ‏آذَنَّاهُ ‏ ‏فَأَلْقَى إِلَيْنَا ‏ ‏حَقْوَهُ ‏ ‏فَقَالَ ‏ ‏أَشْعِرْنَهَا ‏ ‏إِيَّاهُ ‏


‏و حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ يَحْيَى ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏يَزِيدُ بْنُ زُرَيْعٍ ‏ ‏عَنْ ‏ ‏أَيُّوبَ ‏ ‏عَنْ ‏ ‏مُحَمَّدِ بْنِ سِيرِينَ ‏ ‏عَنْ ‏ ‏حَفْصَةَ بِنْتِ سِيرِينَ ‏ ‏عَنْ ‏ ‏أُمِّ عَطِيَّةَ ‏ ‏قَالَتْ ‏ ‏مَشَطْنَاهَا ثَلَاثَةَ ‏ ‏قُرُونٍ ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ ‏ ‏عَنْ ‏ ‏مَالِكِ بْنِ أَنَسٍ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏أَبُو الرَّبِيعِ الزَّهْرَانِيُّ ‏ ‏وَقُتَيْبَةُ بْنُ سَعِيدٍ ‏ ‏قَالَا حَدَّثَنَا ‏ ‏حَمَّادٌ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ أَيُّوبَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏ابْنُ عُلَيَّةَ ‏ ‏كُلُّهُمْ ‏ ‏عَنْ ‏ ‏أَيُّوبَ ‏ ‏عَنْ ‏ ‏مُحَمَّدٍ ‏ ‏عَنْ ‏ ‏أُمِّ عَطِيَّةَ ‏ ‏قَالَتْ ‏ ‏تُوُفِّيَتْ إِحْدَى بَنَاتِ النَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏وَفِي حَدِيثِ ‏ ‏ابْنِ عُلَيَّةَ ‏ ‏قَالَتْ أَتَانَا رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏وَنَحْنُ نَغْسِلُ ابْنَتَهُ ‏ ‏وَفِي حَدِيثِ ‏ ‏مَالِكٍ ‏ ‏قَالَتْ دَخَلَ عَلَيْنَا رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏حِينَ تُوُفِّيَتْ ابْنَتُهُ بِمِثْلِ حَدِيثِ ‏ ‏يَزِيدَ بْنِ زُرَيْعٍ ‏ ‏عَنْ ‏ ‏أَيُّوبَ ‏ ‏عَنْ ‏ ‏مُحَمَّدٍ ‏ ‏عَنْ ‏ ‏أُمِّ عَطِيَّةَ ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏حَمَّادٌ ‏ ‏عَنْ ‏ ‏أَيُّوبَ ‏ ‏عَنْ ‏ ‏حَفْصَةَ ‏ ‏عَنْ ‏ ‏أُمِّ عَطِيَّةَ ‏ ‏بِنَحْوِهِ غَيْرَ أَنَّهُ قَالَ ثَلَاثًا أَوْ خَمْسًا أَوْ سَبْعًا أَوْ أَكْثَرَ مِنْ ذَلِكِ إِنْ رَأَيْتُنَّ ذَلِكِ فَقَالَتْ ‏ ‏حَفْصَةُ ‏ ‏عَنْ ‏ ‏أُمِّ عَطِيَّةَ ‏ ‏وَجَعَلْنَا رَأْسَهَا ثَلَاثَةَ ‏ ‏قُرُونٍ

நபி (ஸல்) அவர்களின் மகள் இறந்து விட்டபோது அவரது பிரேதத்தை நாங்கள் குளிப்பாட்டிக்கொண்டிருந்தோம். அப்போது நபி (ஸல்) எங்களிடம் வந்து, “இலந்தை இலை கலந்த நீரால் மூன்று, அல்லது ஐந்து, அல்லது தேவையெனக் கருதினால் அதற்கதிகமான தடவைகள் அவரைக் குளிப்பாட்டுங்கள்; இறுதியில் (சிறிது) கற்பூரத்தைச் சேர்த்துக்கொள்ளுங்கள். இவற்றை முடித்ததும் எனக்கு அறிவியுங்கள்” என்று கூறினார்கள். நாங்கள் குளிப்பாட்டி முடித்ததும் அவர்களுக்கு அறிவித்தோம். அவர்கள் தமது கீழாடையை எங்களிடம் போட்டு “இதை அவரது உடலில் போர்த்துங்கள்” என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் : உம்மு அத்திய்யா (ரலி) வழியாக முஹம்மது பின் ஸீரீன் (ரஹ்)


குறிப்புகள்:

“நாங்கள் அவருக்குத் தலைவாரி மூன்று பின்னல்கள் இட்டோம்” என்று ஹஃப்ஸா பின்த்தி ஸீரீன் அறிவிப்பில் இடம்பெற்றுள்ளது.

அபூ ரபீஉ அஸ்ஸஹ்ரானி (ரஹ்) வழி அறிவிப்பு, “நபி (ஸல்) அவர்களுடைய மகள்களுள் ஒருவர் இறந்தபோது …” என்று தொடங்குகிறது.

இப்னு உலைய்யா (ரஹ்) வழி அறிவிப்பு, “எங்களிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) வந்தார்கள். அப்போது நாங்கள் அவர்களுடைய மகளைக் குளிப்பாட்டிக் கொண்டிருந்தோம் என்று உம்மு அத்திய்யா (ரலி) கூறினார்கள் …“ எனத் தொடங்குகிறது.

மாலிக் பின் அனஸ் (ரஹ்) அறிவிப்பு, “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் மகள் இறந்துவிட்டபோது அவர்கள் எங்களிடம் வந்தார்கள் …” என்று தொடங்குகிறது.

அய்யூப் (ரஹ்) வழி அறிவிப்பில், “இலந்தை இலை கலந்த நீரால் மூன்று, அல்லது ஐந்து, அல்லது ஏழு, அல்லது தேவையெனக் கருதினால் அதற்கதிகமான தடவைகள் அவரை நீராட்டுங்கள் என்று நபி (ஸல்) கூறினார்கள்” என்றும் “அவர்களது தலையில் மூன்று பின்னல்கள் இட்டோம்” என்றும் உம்மு அத்திய்யா (ரலி) கூறியதாகவும் இடம்பெற்றுள்ளது.

Share this Hadith:

Leave a Comment