அத்தியாயம்: 11, பாடம்: 24, ஹதீஸ் எண்: 1596

حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏غُنْدَرٌ ‏ ‏عَنْ ‏ ‏شُعْبَةَ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى ‏ ‏وَابْنُ بَشَّارٍ ‏ ‏قَالَا حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏شُعْبَةُ ‏ ‏عَنْ ‏ ‏عَمْرِو بْنِ مُرَّةَ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ أَبِي لَيْلَى ‏

‏أَنَّ ‏ ‏قَيْسَ بْنَ سَعْدٍ ‏ ‏وَسَهْلَ بْنَ حُنَيْفٍ ‏ ‏كَانَا ‏ ‏بِالْقَادِسِيَّةِ ‏ ‏فَمَرَّتْ بِهِمَا جَنَازَةٌ فَقَامَا فَقِيلَ لَهُمَا إِنَّهَا مِنْ أَهْلِ الْأَرْضِ فَقَالَا إِنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏مَرَّتْ بِهِ جَنَازَةٌ فَقَامَ فَقِيلَ إِنَّهُ يَهُودِيٌّ فَقَالَ ‏ ‏أَلَيْسَتْ نَفْسًا ‏

‏و حَدَّثَنِيهِ ‏ ‏الْقَاسِمُ بْنُ زَكَرِيَّاءَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عُبَيْدُ اللَّهِ بْنُ مُوسَى ‏ ‏عَنْ ‏ ‏شَيْبَانَ ‏ ‏عَنْ ‏ ‏الْأَعْمَشِ ‏ ‏عَنْ ‏ ‏عَمْرِو بْنِ مُرَّةَ ‏ ‏بِهَذَا الْإِسْنَادِ وَفِيهِ فَقَالَا ‏ ‏كُنَّا مَعَ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَمَرَّتْ عَلَيْنَا جَنَازَةٌ

கைஸ் பின் ஸஅத் (ரலி), ஸஹ்ல் பின் ஹுனைஃப் (ரலி) ஆகியோர் (இராக் நாட்டிலுள்ள) ‘காதிஸிய்யா’ எனும் இடத்தில் இருந்தபோது, ஒரு பிரேத(ஊர்வல)ம் அவர்களைக் கடந்து சென்றது. உடனே அவர்கள் இருவரும் எழுந்து நின்றனர். அப்போது அவர்களிடம், “இது இந்த நாட்டு (முஸ்லிமல்லாத) பிரஜையின் பிரேதமாயிற்றே?” என்று கூறப்பட்டது. அதற்கு அவ்விருவரும், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைக் கடந்து ஒரு பிரேதம் கொண்டு செல்லப்பட்டபோது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) எழுந்து நின்றார்கள். அப்போது அவர்களிடம், ’அது யூதரின் பிரேதம்’ எனக் கூறப்பட்டது. அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) ‘அது ஓர் ஆத்மாவல்லவா?’ என்று (திருப்பிக்) கேட்டார்கள்” என்றனர்.

அறிவிப்பாளர்கள் : கைஸ் பின் ஸஅத் (ரலி), ஸஹ்ல் பின் ஹுனைஃப் (ரலி) வழியாக, அப்துர் ரஹ்மான் பின் அபீலைலா (ரஹ்).

குறிப்பு : அல் அஃமஷ் (ரஹ்) வழி அறிவிப்பில், “நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் இருந்தோம். அப்போது ஒரு பிரேத (ஊர்வல)ம் எங்களைக் கடந்து சென்றது” என்று கைஸ் பின் ஸஅத் (ரலி), ஸஹ்ல் பின் ஹுனைஃப் (ரலி) ஆகிய இருவரும் கூறியதாக ஹதீஸ் தொடர்கிறது.

Share this Hadith:

Leave a Comment