و حَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى التَّمِيمِيُّ أَخْبَرَنَا عَبْدُ الْوَارِثِ بْنُ سَعِيدٍ عَنْ حُسَيْنِ بْنِ ذَكْوَانَ قَالَ حَدَّثَنِي عَبْدُ اللَّهِ بْنُ بُرَيْدَةَ عَنْ سَمُرَةَ بْنِ جُنْدُبٍ قَالَ
صَلَّيْتُ خَلْفَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَصَلَّى عَلَى أُمِّ كَعْبٍ مَاتَتْ وَهِيَ نُفَسَاءُ فَقَامَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لِلصَّلَاةِ عَلَيْهَا وَسَطَهَا
و حَدَّثَنَاه أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ حَدَّثَنَا ابْنُ الْمُبَارَكِ وَيَزِيدُ بْنُ هَارُونَ ح و حَدَّثَنِي عَلِيُّ بْنُ حُجْرٍ أَخْبَرَنَا ابْنُ الْمُبَارَكِ وَالْفَضْلُ بْنُ مُوسَى كُلُّهُمْ عَنْ حُسَيْنٍ بِهَذَا الْإِسْنَادِ وَلَمْ يَذْكُرُوا أُمَّ كَعْبٍ
உம்மு கஅப் (ரலி) எனும் பெண்மணி பிரசவ இரத்தப்போக்கு ஏற்பட்டிருந்த நிலையில் இறந்துவிட்டார். அவருக்காக நபி (ஸல்) ஜனாஸாத் தொழுகை தொழுவித்தார்கள். அப்போது அவர்களைப் பின்பற்றி நானும் தொழுதேன். அத்தொழுகையில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) மையித்தின் நடுப் பகுதிக்கு நேராக நின்று தொழுவித்தார்கள்.
அறிவிப்பாளர் : ஸமுரா பின் ஜுன்துப் (ரலி)
குறிப்பு : ஹுஸைன் பின் தக்வான் (ரஹ்) வழி வரும் பிற அறிவிப்புகளில் நபித் தோழியின் பெயரான உம்மு கஅப் என்பது இடம்பெறவில்லை.