அத்தியாயம்: 11, பாடம்: 27, ஹதீஸ் எண்: 1603

و حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى ‏ ‏وَعُقْبَةُ بْنُ مُكْرَمٍ الْعَمِّيُّ ‏ ‏قَالَا حَدَّثَنَا ‏ ‏ابْنُ أَبِي عَدِيٍّ ‏ ‏عَنْ ‏ ‏حُسَيْنٍ ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ اللَّهِ بْنِ بُرَيْدَةَ ‏ ‏قَالَ ‏

‏قَالَ ‏ ‏سَمُرَةُ بْنُ جُنْدُبٍ ‏ ‏لَقَدْ كُنْتُ عَلَى عَهْدِ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏غُلَامًا فَكُنْتُ أَحْفَظُ عَنْهُ فَمَا يَمْنَعُنِي مِنْ الْقَوْلِ إِلَّا أَنَّ هَا هُنَا رِجَالًا هُمْ ‏ ‏أَسَنُّ ‏ ‏مِنِّي وَقَدْ ‏ ‏صَلَّيْتُ وَرَاءَ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏عَلَى ‏ ‏امْرَأَةٍ ‏ ‏مَاتَتْ فِي نِفَاسِهَا فَقَامَ عَلَيْهَا رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فِي الصَّلَاةِ وَسَطَهَا ‏

‏وَفِي رِوَايَةِ ‏ ‏ابْنِ الْمُثَنَّى ‏ ‏قَالَ حَدَّثَنِي ‏ ‏عَبْدُ اللَّهِ بْنُ بُرَيْدَةَ ‏ ‏قَالَ فَقَامَ عَلَيْهَا لِلصَّلَاةِ وَسَطَهَا

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) காலத்தில் நான் சிறுவனாக இருந்தேன். நபி (ஸல்) அவர்களிடமிருந்து (பல தகவல்களை) மனனமிட்டுவந்தேன். அவற்றைச் சொல்லவிடாமல் என்னைத் தடுத்தது, இங்கு என்னைவிட வயதில் பெரியவர்கள் இருந்தனர் என்பதே. நான் (ஒரு முறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்குப் பின்னால் நின்று ஒரு பெண்ணிற்காக ஜனாஸாத் தொழுகை தொழுதிருக்கிறேன். அப்பெண் பிரசவ இரத்தப்போக்கில் மரணித்திருந்தார். அத்தொழுகையில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்), அந்த மையித்தின் நடுப் பகுதிக்கு நேராக நின்று தொழுவித்தார்கள்.

அறிவிப்பாளர் : ஸமுரா பின் ஜுன்துப் (ரலி).

குறிப்பு: முஹம்மத் பின் அல்முஸன்னா (ரஹ்), அப்துல்லாஹ் பின் புரைதா (ரஹ்) அவர்களிடமிருந்து அறிவிக்கும் அறிவிப்பில் “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அப்பெண்ணிற்காக தொழுவித்தபோது, மையித்தின் நடுப் பகுதிக்கு நேராக நின்றார்கள்” என்று ஸமுரா (ரலி) கூறியதாக இடம்பெற்றுள்ளது.

Share this Hadith:

Leave a Comment