و حَدَّثَنَا أَبُو كُرَيْبٍ مُحَمَّدُ بْنُ الْعَلَاءِ حَدَّثَنَا أَبُو أُسَامَةَ عَنْ هِشَامٍ عَنْ أَبِيهِ عَنْ أَسْمَاءَ بِنْتِ أَبِي بَكْرٍ قَالَتْ :
قَدِمَتْ عَلَيَّ أُمِّي وَهِيَ مُشْرِكَةٌ فِي عَهْدِ قُرَيْشٍ إِذْ عَاهَدَهُمْ فَاسْتَفْتَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقُلْتُ يَا رَسُولَ اللَّهِ قَدِمَتْ عَلَيَّ أُمِّي وَهِيَ رَاغِبَةٌ أَفَأَصِلُ أُمِّي قَالَ نَعَمْ صِلِي أُمَّكِ
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) குறைஷியருடன் சமாதான உடன்படிக்கை செய்திருந்த காலத்தில் இணைவைப்பவராக இருந்த என் தாயார் என்னிடம் வந்தார். நான், “அல்லாஹ்வின் தூதரே! என் தாயார் என்னிடம் ஆசையுடன் வந்துள்ளார்; நான் என் தாயாருடன் உறவு கொண்டாடலாமா?” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் தீர்ப்புக் கேட்டேன். அவர்கள், “ஆம். நீ உன் தாயின் உறவைப் பேணி நடந்துகொள்” என்று சொன்னார்கள்.
அறிவிப்பாளர் : அஸ்மா பின்த்தி அபீபக்ரு (ரலி)