அத்தியாயம்: 12, பாடம்: 49, ஹதீஸ் எண்: 1775

حَدَّثَنَا ‏ ‏شَيْبَانُ بْنُ فَرُّوخَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏سُلَيْمَانُ بْنُ الْمُغِيرَةِ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏حُمَيْدُ بْنُ هِلَالٍ ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ اللَّهِ بْنِ الصَّامِتِ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي ذَرٍّ ‏ ‏قَالَ ‏

‏قَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏إِنَّ بَعْدِي مِنْ أُمَّتِي أَوْ ‏ ‏سَيَكُونُ بَعْدِي مِنْ أُمَّتِي قَوْمٌ يَقْرَءُونَ الْقُرْآنَ ‏ ‏لَا يُجَاوِزُ ‏ ‏حَلَاقِيمَهُمْ يَخْرُجُونَ مِنْ الدِّينِ كَمَا يَخْرُجُ السَّهْمُ مِنْ ‏ ‏الرَّمِيَّةِ ‏ ‏ثُمَّ لَا يَعُودُونَ فِيهِ هُمْ شَرُّ الْخَلْقِ وَالْخَلِيقَةِ ‏

‏فَقَالَ ‏ ‏ابْنُ الصَّامِتِ ‏ ‏فَلَقِيتُ ‏ ‏رَافِعَ بْنَ عَمْرٍو الْغِفَارِيَّ ‏ ‏أَخَا ‏ ‏الْحَكَمِ الْغِفَارِيِّ ‏ ‏قُلْتُ مَا حَدِيثٌ سَمِعْتُهُ مِنْ ‏ ‏أَبِي ذَرٍّ ‏ ‏كَذَا وَكَذَا فَذَكَرْتُ لَهُ هَذَا الْحَدِيثَ فَقَالَ وَأَنَا سَمِعْتُهُ مِنْ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ

“எனக்குப் பின் என் சமுதாயத்தில் (அல்லது) எனக்குப் பின் விரைவில் என் சமுதாயத்தில் ஒரு கூட்டத்தார் தோன்றுவார்கள். அவர்கள் குர்ஆனை ஓதுவார்கள். ஆனால், அது அவர்களுடைய தொண்டைக் குழிகளைத் தாண்டிச் செல்லாது. வேட்டைப் பிராணியை(த் துளைத்து)விட்டு அம்பு வெளியேறிச் சென்றுவிடுவதைப் போன்று மார்க்கத்திலிருந்து அவர்கள் வெளியேறிச் சென்றுவிடுவார்கள். பிறகு அதன் பக்கம் திரும்பமாட்டார்கள். அவர்கள்தாம் படைப்பினங்களில் தீயவர்கள் ஆவர்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அபூதர் (ரலி)

குறிப்பு : “நான் ஹகம் அல்கிஃபாரீ (ரலி) அவர்களுடைய சகோதரர் ராஃபிஉ பின் அம்ரு அல்கிஃபாரீ (ரலி) அவர்களைச் சந்தித்தபோது, அபூதர் (ரலி) அவர்களிடமிருந்து இன்னின்ன ஹதீஸ்களைச் செவியுற்றிருக்கின்றேன் என்று சொல்லிவரும்போது, மேற்கண்ட ஹதீஸையும் அவர்களிடம் சொன்னேன். அப்போது ராஃபிஉ பின் அம்ரு (ரலி), ‘நானும் இந்த ஹதீஸை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து செவியுற்றேன்’ என்று சொன்னார்கள்” என்பதாக இந்த ஹதீஸை அபூதர் (ரலி) அவர்களிடமிருந்து அறிவிக்கும் அப்துல்லாஹ் பின் அஸ்ஸாமித் (ரஹ்) கூறினார்.

Share this Hadith:

Leave a Comment