அத்தியாயம்: 12, பாடம்: 09, ஹதீஸ் எண்: 1654

حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ يَحْيَى ‏ ‏وَأَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏وَابْنُ نُمَيْرٍ ‏ ‏وَأَبُو كُرَيْبٍ ‏ ‏كُلُّهُمْ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي مُعَاوِيَةَ ‏ ‏قَالَ ‏ ‏يَحْيَى ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏أَبُو مُعَاوِيَةَ ‏ ‏عَنْ ‏ ‏الْأَعْمَشِ ‏ ‏عَنْ ‏ ‏زَيْدِ بْنِ وَهْبٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي ذَرٍّ ‏ ‏قَالَ ‏

‏كُنْتُ أَمْشِي مَعَ النَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فِي ‏ ‏حَرَّةِ الْمَدِينَةِ ‏ ‏عِشَاءً وَنَحْنُ نَنْظُرُ إِلَى ‏ ‏أُحُدٍ ‏ ‏فَقَالَ لِي رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يَا ‏ ‏أَبَا ذَرٍّ ‏ ‏قَالَ قُلْتُ لَبَّيْكَ يَا رَسُولَ اللَّهِ قَالَ مَا أُحِبُّ أَنَّ ‏ ‏أُحُدًا ‏ ‏ذَاكَ عِنْدِي ذَهَبٌ أَمْسَى ثَالِثَةً عِنْدِي مِنْهُ دِينَارٌ إِلَّا دِينَارًا ‏ ‏أَرْصُدُهُ ‏ ‏لِدَيْنٍ إِلَّا أَنْ أَقُولَ بِهِ فِي عِبَادِ اللَّهِ هَكَذَا ‏ ‏حَثَا ‏ ‏بَيْنَ يَدَيْهِ وَهَكَذَا عَنْ يَمِينِهِ وَهَكَذَا عَنْ شِمَالِهِ قَالَ ثُمَّ مَشَيْنَا فَقَالَ يَا ‏ ‏أَبَا ذَرٍّ ‏ ‏قَالَ قُلْتُ لَبَّيْكَ يَا رَسُولَ اللَّهِ قَالَ إِنَّ الْأَكْثَرِينَ هُمْ الْأَقَلُّونَ يَوْمَ الْقِيَامَةِ إِلَّا مَنْ قَالَ هَكَذَا وَهَكَذَا وَهَكَذَا مِثْلَ مَا صَنَعَ فِي الْمَرَّةِ الْأُولَى قَالَ ثُمَّ مَشَيْنَا قَالَ يَا ‏ ‏أَبَا ذَرٍّ ‏ ‏كَمَا أَنْتَ حَتَّى آتِيَكَ قَالَ فَانْطَلَقَ حَتَّى ‏ ‏تَوَارَى ‏ ‏عَنِّي قَالَ سَمِعْتُ ‏ ‏لَغَطًا ‏ ‏وَسَمِعْتُ صَوْتًا قَالَ فَقُلْتُ لَعَلَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏عُرِضَ ‏ ‏لَهُ قَالَ فَهَمَمْتُ أَنْ أَتَّبِعَهُ قَالَ ثُمَّ ذَكَرْتُ قَوْلَهُ لَا ‏ ‏تَبْرَحْ ‏ ‏حَتَّى آتِيَكَ قَالَ فَانْتَظَرْتُهُ فَلَمَّا جَاءَ ذَكَرْتُ لَهُ الَّذِي سَمِعْتُ قَالَ فَقَالَ ذَاكَ ‏ ‏جِبْرِيلُ ‏ ‏أَتَانِي فَقَالَ ‏ ‏مَنْ مَاتَ مِنْ أُمَّتِكَ لَا يُشْرِكُ بِاللَّهِ شَيْئًا دَخَلَ الْجَنَّةَ قَالَ قُلْتُ وَإِنْ زَنَى وَإِنْ سَرَقَ قَالَ وَإِنْ زَنَى وَإِنْ سَرَقَ

நான் ஓர் இரவு நேரத்தில் நபி (ஸல்) அவர்களுடன் மதீனாவின் (பாறைகள் நிறைந்த) ‘ஹர்ரா’ப் பகுதியில் (எதிரிலிருந்த) உஹுத் மலையைப் பார்த்தவாறே நடந்துசென்று கொண்டிருந்தேன். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “அபூதர்ரே!” என்று என்னை அழைத்தார்கள். நான் “பணிந்தேன் அல்லாஹ்வின் தூதரே!” என்றேன். நபி (ஸல்), “இந்த உஹுத் மலை அளவிற்கு என்னிடம் தங்கம் இருந்து, கடனை அடைப்பதற்காக நான் எடுத்துவைக்கும் பொற்காசைத் தவிர அதிலிருந்து ஒரேயொரு பொற்காசு என்னிடம் (எஞ்சி) இருந்தாலும் அதை அல்லாஹ்வின் அடியார்களிடையே இப்படி, இப்படி, இப்படியெல்லாம் செலவிடாமல் மூன்று இரவுகள்கூட கழிந்துசெல்வதை நான் விரும்பமாட்டேன்” என்று கூறி, வாரி இறைப்பதைப் போன்று தமது முன் பக்கமும் வலப் பக்கமும் இடப் பக்கமும் சைகை செய்தார்கள்.

பிறகு (சிறிது தூரம்) நாங்கள் நடந்தோம். அப்போது நபி (ஸல்), “அபூதர்ரே!” என்று (மீண்டும்) அழைத்தார்கள். நான், “பணிந்தேன் அல்லாஹ்வின் தூதரே!” என்றேன். நபி ஸல்), “அதிகமான(செல்வம் இவ்வுலகில் உள்ள)வர்கள் மறுமை நாளில் (நற்பலன்) குறைந்தவர்கள் ஆவர்” என்று கூறிவிட்டு, முன்பு செய்ததைப் போன்றே செய்து, “இப்படி, இப்படி, இப்படி (நல்வழியில்) செலவு செய்தவர்கள் தவிர” என்று கூறினார்கள்.

பிறகு, (இன்னும் சிறிது தூரம்) நாங்கள் சென்றதும் நபி (ஸல்) என்னிடம், “அபூதர்! நான் வரும்வரை இங்கேயே இருங்கள்!” என்று கூறிவிட்டு (இருளுக்குள் நடந்து) என்னைவிட்டும் மறைந்துவிட்டார்கள். அப்போது உரத்த சப்தம் ஒன்றை நான் கேட்டேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு ஏதோவோர் இடர் ஏற்பட்டுவிட்டதோ என்றெண்ணி, அவர்களைப் பின்தொடரத் துணிந்தேன். ஆனால், என்னிடம் நபி (ஸல்), “நான் வரும்வரை இங்கேயே இருங்கள்” என்று சொன்னது என் நினைவுக்கு வந்தது. ஆதலால், அவர்கள் என்னிடம் வரும்வரை அவர்களை எதிர்பார்த்துக் காத்திருந்தேன். அவர்கள் வந்ததும் நான் கேட்ட சப்தத்தைப் பற்றி அவர்களிடம் பேச்செடுத்தேன்.

அப்போது நபி (ஸல்), “அது (வானவர்) ஜிப்ரீல்தாம். அவர் என்னிடம் வந்து, ‘உங்கள் சமுதாயத்தாரில் யார் அல்லாஹ்வுக்கு எதையும் இணைவைக்காமல் (வாழ்ந்து) இறந்துவிடுகிறாரோ அவர் சொர்க்கம் செல்வார்’ என்றார். நான் (ஜிப்ரீலிடம்), அவர் விபச்சாரம் புரிந்தாலும் திருடினாலுமா (சொர்க்கம் புகுவார்)?’ என்று கேட்டேன். அவர், ‘(ஆம்) விபச்சாரம் புரிந்தாலும் திருடினாலும் சரியே’ என்று பதிலளித்தார்” என நபி (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அபூதர் (ரலி).

Share this Hadith:

Leave a Comment