و حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى حَدَّثَنَا أَبُو عَاصِمٍ قَالَ سَمِعْتُ ابْنَ عَوْنٍ عَنْ إِبْرَاهِيمَ عَنْ الْأَسْوَدِ قَالَ
انْطَلَقْتُ أَنَا وَمَسْرُوقٌ إِلَى عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا فَقُلْنَا لَهَا أَكَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُبَاشِرُ وَهُوَ صَائِمٌ قَالَتْ نَعَمْ وَلَكِنَّهُ كَانَ أَمْلَكَكُمْ لِإِرْبِهِ
أَوْ مِنْ أَمْلَكِكُمْ لِإِرْبِهِ شَكَّ أَبُو عَاصِمٍ و حَدَّثَنِيهِ يَعْقُوبُ الدَّوْرَقِيُّ حَدَّثَنَا إِسْمَعِيلُ عَنْ ابْنِ عَوْنٍ عَنْ إِبْرَاهِيمَ عَنْ الْأَسْوَدِ وَمَسْرُوقٍ أَنَّهُمَا دَخَلَا عَلَى أُمِّ الْمُؤْمِنِينَ لِيَسْأَلَانِهَا فَذَكَرَ نَحْوَهُ
நானும் மஸ்ரூக் (ரஹ்) அவர்களும் ஆயிஷா (ரலி) அவர்களிடம் சென்று, “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) நோன்பு நோற்ற நிலையில் (தம் துணைவியரைக்) கட்டியணைப்பார்களா?” என்று கேட்டோம். அதற்கு அவர்கள், “ஆம். ஆயினும், அவர்கள் தம் உணர்ச்சிகளை, உங்களையெல்லாம்விட அதிகமாகக் கட்டுப்படுத்திக்கொள்பவர்களாக – கட்டுப்படுத்திக்கொள்பவர்களில் ஒருவராக இருந்தார்கள்” என்றார்கள்.
அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி) வழியாக அஸ்வத் பின் யஸீத் பின் கைஸ் (ரஹ்)
குறிப்பு : இஸ்மாயீல் (ரஹ்) வழி அறிவிப்பு, “நாங்கள் இருவரும் இறை நம்பிக்கையாளர்களின் அன்னை ஆயிஷா (ரலி) அவர்களிடம் (நோன்பு நோற்றுக் கொண்டு முத்தமிடுவது பற்றிக்) கேட்பதற்காகச் சென்றோம்” என்று அஸ்வத் (ரஹ்), மஸ்ரூக் (ரஹ்) ஆகிய இருவரும் கூறியதாகத் தொடங்குகிறது.