அத்தியாயம்: 13, பாடம்: 12, ஹதீஸ் எண்: 1863

حَدَّثَنِي ‏ ‏هَارُونُ بْنُ سَعِيدٍ الْأَيْلِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏ابْنُ وَهْبٍ ‏ ‏أَخْبَرَنِي ‏ ‏عَمْرٌو وَهُوَ ابْنُ الْحَارِثِ ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ رَبِّهِ بْنِ سَعِيدٍ ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ اللَّهِ بْنِ كَعْبٍ الْحِمْيَرِيِّ ‏ ‏عَنْ ‏ ‏عُمَرَ بْنِ أَبِي سَلَمَةَ ‏

‏أَنَّهُ سَأَلَ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏أَيُقَبِّلُ الصَّائِمُ فَقَالَ لَهُ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏سَلْ هَذِهِ ‏ ‏لِأُمِّ سَلَمَةَ ‏ ‏فَأَخْبَرَتْهُ أَنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يَصْنَعُ ذَلِكَ فَقَالَ يَا رَسُولَ اللَّهِ قَدْ غَفَرَ اللَّهُ لَكَ مَا تَقَدَّمَ مِنْ ذَنْبِكَ وَمَا تَأَخَّرَ فَقَالَ لَهُ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏أَمَا وَاللَّهِ إِنِّي لَأَتْقَاكُمْ لِلَّهِ ‏ ‏وَأَخْشَاكُمْ لَهُ

நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் “நோன்பாளி (மனைவியை) முத்தமிடலாமா?” என்று கேட்டேன். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “இது பற்றி நீ (உன் தாயார்) உம்மு ஸலமாவிடம் கேள்!” என்றார்கள். (அவ்வாறே நான் கேட்டபோது, என் தாயார்), “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவ்வாறு செய்வார்கள்” என்று என்னிடம் தெரிவித்தார்கள். நான், “அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ், தங்களுடைய முன்-பின் பாவங்களை மன்னித்து(விட்டதாக அறிவித்து)விட்டான்” என்று சொன்னேன். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “கவனி! அல்லாஹ்வின் மீதாணையாக! உங்களையெல்லாம்விட நான் அதிகமாக அல்லாஹ்வுக்கு அஞ்சி (பாவங்களிலிருந்து விலகி) வாழ்கிறேன்; அவனு(டைய தண்டனை)க்குப் பயந்து வாழ்கிறேன்” என்று சொன்னார்கள்.

அறிவிப்பாளர் : உமர் பின் அபீஸலமா (ரலி)

அத்தியாயம்: 13, பாடம்: 12, ஹதீஸ் எண்: 1862

و حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ يَحْيَى ‏ ‏وَأَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏وَأَبُو كُرَيْبٍ ‏ ‏قَالَ ‏ ‏يَحْيَى ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏و قَالَ ‏ ‏الْآخَرَانِ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبُو مُعَاوِيَةَ ‏ ‏عَنْ ‏ ‏الْأَعْمَشِ ‏ ‏عَنْ ‏ ‏مُسْلِمٍ ‏ ‏عَنْ ‏ ‏شُتَيْرِ بْنِ شَكَلٍ ‏ ‏عَنْ ‏ ‏حَفْصَةَ ‏ ‏رَضِيَ اللَّهُ عَنْهَا ‏ ‏قَالَتْ ‏

‏كَانَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يُقَبِّلُ وَهُوَ صَائِمٌ ‏
‏و حَدَّثَنَا ‏ ‏أَبُو الرَّبِيعِ الزَّهْرَانِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبُو عَوَانَةَ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏وَإِسْحَقُ بْنُ إِبْرَاهِيمَ ‏ ‏عَنْ ‏ ‏جَرِيرٍ ‏ ‏كِلَاهُمَا ‏ ‏عَنْ ‏ ‏مَنْصُورٍ ‏ ‏عَنْ ‏ ‏مُسْلِمٍ ‏ ‏عَنْ ‏ ‏شُتَيْرِ بْنِ شَكَلٍ ‏ ‏عَنْ ‏ ‏حَفْصَةَ ‏ ‏رَضِيَ اللَّهُ عَنْهَا ‏ ‏عَنْ النَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏بِمِثْلِهِ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) நோன்பு நோற்றிருந்த நிலையில் (தம் துணை வியரை) முத்தமிடுவார்கள்.

அறிவிப்பாளர் : அன்னை ஹஃப்ஸா (ரலி) வழியாக ஷுதைர் பின் ஷகல் (ரஹ்)

அத்தியாயம்: 13, பாடம்: 12, ஹதீஸ் எண்: 1861

و حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ بَشَّارٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَبْدُ الرَّحْمَنِ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏سُفْيَانُ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي الزِّنَادِ ‏ ‏عَنْ ‏ ‏عَلِيِّ بْنِ الْحُسَيْنِ ‏ ‏عَنْ ‏ ‏عَائِشَةَ ‏ ‏رَضِيَ اللَّهُ عَنْهَا ‏

‏أَنَّ النَّبِيَّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏كَانَ ‏ ‏يُقَبِّلُ وَهُوَ صَائِمٌ

நபி (ஸல்) நோன்பு நோற்றிருந்த நிலையில் (தம் துணைவியரை) முத்தமிடுவார்கள்.

அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி) வழியாக அலீ பின் அல்ஹுஸைன் (ரஹ்)

அத்தியாயம்: 13, பாடம்: 12, ஹதீஸ் எண்: 1860

و حَدَّثَنِي ‏ ‏مُحَمَّدُ بْنُ حَاتِمٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏بَهْزُ بْنُ أَسَدٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرٍ النَّهْشَلِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏زِيَادُ بْنُ عِلَاقَةَ ‏ ‏عَنْ ‏ ‏عَمْرِو بْنِ مَيْمُونٍ ‏ ‏عَنْ ‏ ‏عَائِشَةَ ‏ ‏رَضِيَ اللَّهُ عَنْهَا ‏ ‏قَالَتْ ‏

‏كَانَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يُقَبِّلُ فِي رَمَضَانَ وَهُوَ صَائِمٌ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) ரமளான் மாதத்தில் நோன்பு நோற்றிருந்த நிலையில் (தம் துணைவியரை) முத்தமிடுவார்கள்.

அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி) வழியாக அம்ரு பின் மைமூன் (ரஹ்)

அத்தியாயம்: 13, பாடம்: 12, ஹதீஸ் எண்: 1859

حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ يَحْيَى ‏ ‏وَقُتَيْبَةُ بْنُ سَعِيدٍ ‏ ‏وَأَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏قَالَ ‏ ‏يَحْيَى ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏و قَالَ ‏ ‏الْآخَرَانِ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبُو الْأَحْوَصِ ‏ ‏عَنْ ‏ ‏زِيَادِ بْنِ عِلَاقَةَ ‏ ‏عَنْ ‏ ‏عَمْرِو بْنِ مَيْمُونٍ ‏ ‏عَنْ ‏ ‏عَائِشَةَ ‏ ‏رَضِيَ اللَّهُ عَنْهَا ‏ ‏قَالَتْ ‏

‏كَانَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يُقَبِّلُ فِي شَهْرِ الصَّوْمِ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) நோன்பு மாதத்தில் (தம் துணைவியரை) முத்தமிடுவார்கள்.

அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி) வழியாக அம்ரு பின் மைமூன் (ரஹ்)

அத்தியாயம்: 13, பாடம்: 12, ஹதீஸ் எண்: 1858

حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏الْحَسَنُ بْنُ مُوسَى ‏ ‏حَدَّثَنَا ‏ ‏شَيْبَانُ ‏ ‏عَنْ ‏ ‏يَحْيَى بْنِ أَبِي كَثِيرٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي سَلَمَةَ ‏ ‏أَنَّ ‏ ‏عُمَرَ بْنَ عَبْدِ الْعَزِيزِ ‏ ‏أَخْبَرَهُ أَنَّ ‏ ‏عُرْوَةَ بْنَ الزُّبَيْرِ ‏ ‏أَخْبَرَهُ أَنَّ ‏ ‏عَائِشَةَ أُمَّ الْمُؤْمِنِينَ ‏ ‏رَضِيَ اللَّهُ عَنْهَا ‏ ‏أَخْبَرَتْهُ ‏
‏أَنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏كَانَ ‏ ‏يُقَبِّلُهَا وَهُوَ صَائِمٌ ‏
‏و حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ بِشْرٍ الْحَرِيرِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏مُعَاوِيَةُ يَعْنِي ابْنَ سَلَّامٍ ‏ ‏عَنْ ‏ ‏يَحْيَى بْنِ أَبِي كَثِيرٍ ‏ ‏بِهَذَا الْإِسْنَادِ ‏ ‏مِثْلَهُ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) நோன்பு நோற்றிருந்த நிலையில் என்னை முத்தமிடுவார்கள்.

அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி) வழியாக உர்வா பின் அஸ்ஸுபைர் (ரஹ்)

அத்தியாயம்: 13, பாடம்: 12, ஹதீஸ் எண்: 1857

و حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبُو عَاصِمٍ ‏ ‏قَالَ سَمِعْتُ ‏ ‏ابْنَ عَوْنٍ ‏ ‏عَنْ ‏ ‏إِبْرَاهِيمَ ‏ ‏عَنْ ‏ ‏الْأَسْوَدِ ‏ ‏قَالَ ‏

‏انْطَلَقْتُ أَنَا ‏ ‏وَمَسْرُوقٌ ‏ ‏إِلَى ‏ ‏عَائِشَةَ ‏ ‏رَضِيَ اللَّهُ عَنْهَا ‏ ‏فَقُلْنَا لَهَا أَكَانَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يُبَاشِرُ وَهُوَ صَائِمٌ قَالَتْ نَعَمْ وَلَكِنَّهُ كَانَ أَمْلَكَكُمْ ‏ ‏لِإِرْبِهِ ‏

‏أَوْ مِنْ ‏ ‏أَمْلَكِكُمْ لِإِرْبِهِ شَكَّ ‏ ‏أَبُو عَاصِمٍ ‏ ‏و حَدَّثَنِيهِ ‏ ‏يَعْقُوبُ الدَّوْرَقِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏إِسْمَعِيلُ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ عَوْنٍ ‏ ‏عَنْ ‏ ‏إِبْرَاهِيمَ ‏ ‏عَنْ ‏ ‏الْأَسْوَدِ ‏ ‏وَمَسْرُوقٍ ‏ ‏أَنَّهُمَا دَخَلَا عَلَى أُمِّ الْمُؤْمِنِينَ لِيَسْأَلَانِهَا فَذَكَرَ ‏ ‏نَحْوَهُ

நானும் மஸ்ரூக் (ரஹ்) அவர்களும் ஆயிஷா (ரலி) அவர்களிடம் சென்று, “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) நோன்பு நோற்ற நிலையில் (தம் துணைவியரைக்) கட்டியணைப்பார்களா?” என்று கேட்டோம். அதற்கு அவர்கள், “ஆம். ஆயினும், அவர்கள் தம் உணர்ச்சிகளை, உங்களையெல்லாம்விட அதிகமாகக் கட்டுப்படுத்திக்கொள்பவர்களாக – கட்டுப்படுத்திக்கொள்பவர்களில் ஒருவராக இருந்தார்கள்” என்றார்கள்.

அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி) வழியாக அஸ்வத் பின் யஸீத் பின் கைஸ் (ரஹ்)

குறிப்பு : இஸ்மாயீல் (ரஹ்) வழி அறிவிப்பு, “நாங்கள் இருவரும் இறை நம்பிக்கையாளர்களின் அன்னை ஆயிஷா (ரலி) அவர்களிடம் (நோன்பு நோற்றுக் கொண்டு முத்தமிடுவது பற்றிக்) கேட்பதற்காகச் சென்றோம்” என்று அஸ்வத் (ரஹ்), மஸ்ரூக் (ரஹ்) ஆகிய இருவரும் கூறியதாகத் தொடங்குகிறது.

அத்தியாயம்: 13, பாடம்: 12, ஹதீஸ் எண்: 1856

و حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى ‏ ‏وَابْنُ بَشَّارٍ ‏ ‏قَالَا حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏شُعْبَةُ ‏ ‏عَنْ ‏ ‏مَنْصُورٍ ‏ ‏عَنْ ‏ ‏إِبْرَاهِيمَ ‏ ‏عَنْ ‏ ‏عَلْقَمَةَ ‏ ‏عَنْ ‏ ‏عَائِشَةَ ‏ ‏رَضِيَ اللَّهُ عَنْهَا ‏

‏أَنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏كَانَ ‏ ‏يُبَاشِرُ ‏ ‏وَهُوَ صَائِمٌ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) நோன்பு நோற்றிருந்த நிலையில் (தம் துணைவியைக்) கட்டியணைப்பார்கள்.

அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி) வழியாக அல்கமா பின் கைஸ் (ரஹ்)

அத்தியாயம்: 13, பாடம்: 12, ஹதீஸ் எண்: 1855

حَدَّثَنِي ‏ ‏عَلِيُّ بْنُ حُجْرٍ ‏ ‏وَزُهَيْرُ بْنُ حَرْبٍ ‏ ‏قَالَا حَدَّثَنَا ‏ ‏سُفْيَانُ ‏ ‏عَنْ ‏ ‏مَنْصُورٍ ‏ ‏عَنْ ‏ ‏إِبْرَاهِيمَ ‏ ‏عَنْ ‏ ‏عَلْقَمَةَ ‏ ‏عَنْ ‏ ‏عَائِشَةَ ‏ ‏رَضِيَ اللَّهُ عَنْهَا ‏

‏أَنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏كَانَ ‏ ‏يُقَبِّلُ وَهُوَ صَائِمٌ وَكَانَ أَمْلَكَكُمْ ‏ ‏لِإِرْبِهِ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) நோன்பு நோற்றிருந்த நிலையில் (தம் துணைவியை) முத்தமிடுவார்கள்; (அதே நேரத்தில்) அவர்கள் தம் உணர்ச்சிகளை, உங்களையெல்லாம்விட அதிகமாகக் கட்டுப்படுத்திக் கொள்பவர்களாக இருந்தார்கள்.

அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி) வழியாக அல்கமா பின் கைஸ் (ரஹ்)

அத்தியாயம்: 13, பாடம்: 12, ஹதீஸ் எண்: 1854

حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ يَحْيَى ‏ ‏وَأَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏وَأَبُو كُرَيْبٍ ‏ ‏قَالَ ‏ ‏يَحْيَى ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏و قَالَ ‏ ‏الْآخَرَانِ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبُو مُعَاوِيَةَ ‏ ‏عَنْ ‏ ‏الْأَعْمَشِ ‏ ‏عَنْ ‏ ‏إِبْرَاهِيمَ ‏ ‏عَنْ ‏ ‏الْأَسْوَدِ ‏ ‏وَعَلْقَمَةَ ‏ ‏عَنْ ‏ ‏عَائِشَةَ ‏ ‏رَضِيَ اللَّهُ عَنْهَا ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏شُجَاعُ بْنُ مَخْلَدٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ أَبِي زَائِدَةَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏الْأَعْمَشُ ‏ ‏عَنْ ‏ ‏مُسْلِمٍ ‏ ‏عَنْ ‏ ‏مَسْرُوقٍ ‏ ‏عَنْ ‏ ‏عَائِشَةَ ‏ ‏رَضِيَ اللَّهُ عَنْهَا ‏ ‏قَالَتْ ‏

‏كَانَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يُقَبِّلُ وَهُوَ صَائِمٌ ‏ ‏وَيُبَاشِرُ ‏ ‏وَهُوَ صَائِمٌ وَلَكِنَّهُ ‏ ‏أَمْلَكُكُمْ لِإِرْبِهِ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) நோன்பு நோற்றிருந்த நிலையில் (தம் துணை வியை) முத்தமிடுவார்கள்; நோன்பு நோற்றிருந்த நிலையில் கட்டியணைப்பார்கள். ஆயினும், அவர்கள் தம் உணர்ச்சிகளை, உங்களையெல்லாம்விட அதிகமாகக் கட்டுப் படுத்திக்கொள்பவர்களாக இருந்தார்கள்.

அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி) வழியாக மஸ்ரூக் பின் அல்அஜ்தஉ (ரஹ்)