அத்தியாயம்: 13, பாடம்: 12, ஹதீஸ் எண்: 1863

حَدَّثَنِي ‏ ‏هَارُونُ بْنُ سَعِيدٍ الْأَيْلِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏ابْنُ وَهْبٍ ‏ ‏أَخْبَرَنِي ‏ ‏عَمْرٌو وَهُوَ ابْنُ الْحَارِثِ ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ رَبِّهِ بْنِ سَعِيدٍ ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ اللَّهِ بْنِ كَعْبٍ الْحِمْيَرِيِّ ‏ ‏عَنْ ‏ ‏عُمَرَ بْنِ أَبِي سَلَمَةَ ‏

‏أَنَّهُ سَأَلَ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏أَيُقَبِّلُ الصَّائِمُ فَقَالَ لَهُ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏سَلْ هَذِهِ ‏ ‏لِأُمِّ سَلَمَةَ ‏ ‏فَأَخْبَرَتْهُ أَنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يَصْنَعُ ذَلِكَ فَقَالَ يَا رَسُولَ اللَّهِ قَدْ غَفَرَ اللَّهُ لَكَ مَا تَقَدَّمَ مِنْ ذَنْبِكَ وَمَا تَأَخَّرَ فَقَالَ لَهُ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏أَمَا وَاللَّهِ إِنِّي لَأَتْقَاكُمْ لِلَّهِ ‏ ‏وَأَخْشَاكُمْ لَهُ

நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் “நோன்பாளி (மனைவியை) முத்தமிடலாமா?” என்று கேட்டேன். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “இது பற்றி நீ (உன் தாயார்) உம்மு ஸலமாவிடம் கேள்!” என்றார்கள். (அவ்வாறே நான் கேட்டபோது, என் தாயார்), “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவ்வாறு செய்வார்கள்” என்று என்னிடம் தெரிவித்தார்கள். நான், “அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ், தங்களுடைய முன்-பின் பாவங்களை மன்னித்து(விட்டதாக அறிவித்து)விட்டான்” என்று சொன்னேன். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “கவனி! அல்லாஹ்வின் மீதாணையாக! உங்களையெல்லாம்விட நான் அதிகமாக அல்லாஹ்வுக்கு அஞ்சி (பாவங்களிலிருந்து விலகி) வாழ்கிறேன்; அவனு(டைய தண்டனை)க்குப் பயந்து வாழ்கிறேன்” என்று சொன்னார்கள்.

அறிவிப்பாளர் : உமர் பின் அபீஸலமா (ரலி)

Share this Hadith:

Leave a Comment