அத்தியாயம்: 13, பாடம்: 19, ஹதீஸ் எண்: 1914

حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏وَعَمْرٌو النَّاقِدُ ‏ ‏جَمِيعًا ‏ ‏عَنْ ‏ ‏سُفْيَانَ ‏ ‏قَالَ ‏ ‏أَبُو بَكْرٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏ابْنُ عُيَيْنَةَ ‏ ‏عَنْ ‏ ‏عُبَيْدِ اللَّهِ بْنِ أَبِي يَزِيدَ ‏

‏سَمِعَ ‏ ‏ابْنَ عَبَّاسٍ ‏ ‏رَضِيَ اللَّهُ عَنْهُمَا ‏ ‏وَسُئِلَ عَنْ صِيَامِ يَوْمِ عَاشُورَاءَ فَقَالَ ‏ ‏مَا عَلِمْتُ أَنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏صَامَ يَوْمًا يَطْلُبُ فَضْلَهُ عَلَى الْأَيَّامِ إِلَّا هَذَا الْيَوْمَ وَلَا شَهْرًا إِلَّا هَذَا الشَّهْرَ ‏ ‏يَعْنِي رَمَضَانَ ‏

‏و حَدَّثَنِي ‏ ‏مُحَمَّدُ بْنُ رَافِعٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَبْدُ الرَّزَّاقِ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏ابْنُ جُرَيْجٍ ‏ ‏أَخْبَرَنِي ‏ ‏عُبَيْدُ اللَّهِ بْنُ أَبِي يَزِيدَ ‏ ‏فِي هَذَا الْإِسْنَادِ ‏ ‏بِمِثْلِهِ

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம் ஆஷூரா (முஹர்ரம் பத்தாவது) நாள் நோன்பு பற்றி வினவப்பட்டது. அதற்கு அவர்கள், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) நாட்களிலேயே இந்த (ஆஷூரா) நாளையும் மாதங்களிலேயே -ரமளான்- மாதத்தையும் தவிர வேறெதையும் சிறப்பாகத் தேர்ந்தெடுத்து நோன்பு நோற்றதாக நான் அறியவில்லை” என்று விடையளித்தார்கள்.

அறிவிப்பாளர் : இப்னு அப்பாஸ் (ரலி) வழியாக உபைதுல்லாஹ் பின் அபீயஸீத் (ரஹ்)

அத்தியாயம்: 13, பாடம்: 19, ஹதீஸ் எண்: 1913

و حَدَّثَنَاه ‏ ‏أَحْمَدُ بْنُ الْمُنْذِرِ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏حَمَّادُ بْنُ أُسَامَةَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبُو الْعُمَيْسِ ‏ ‏أَخْبَرَنِي ‏ ‏قَيْسٌ ‏ ‏فَذَكَرَ بِهَذَا الْإِسْنَادِ مِثْلَهُ وَزَادَ ‏ ‏قَالَ ‏ ‏أَبُو أُسَامَةَ ‏ ‏فَحَدَّثَنِي ‏ ‏صَدَقَةُ بْنُ أَبِي عِمْرَانَ ‏ ‏عَنْ ‏ ‏قَيْسِ بْنِ مُسْلِمٍ ‏ ‏عَنْ ‏ ‏طَارِقِ بْنِ شِهَابٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي مُوسَى ‏ ‏رَضِيَ اللَّهُ عَنْهُ ‏ ‏قَالَ ‏

‏كَانَ أَهْلُ ‏ ‏خَيْبَرَ ‏ ‏يَصُومُونَ يَوْمَ عَاشُورَاءَ يَتَّخِذُونَهُ عِيدًا وَيُلْبِسُونَ نِسَاءَهُمْ فِيهِ حُلِيَّهُمْ وَشَارَتَهُمْ فَقَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَصُومُوهُ أَنْتُمْ

கைபர்வாசிகள் (யூதர்கள்) ஆஷூரா (முஹர்ரம் பத்தாவது) நாளில் நோன்பு நோற்று வந்தனர்; அந்நாளை அவர்கள் பண்டிகை நாளாகக் கொண்டாடினர்; தங்களுடைய பெண்களுக்கு அந்நாளில் ஆபரணங்களையும் அழகிய ஆடைகளையும் அவர்கள் அணிவித்தனர். எனவே, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) (எங்களிடம்), “இந்நாளில் நீங்களும் நோன்பு நோறுங்கள்!” என்றார்கள்.

அறிவிப்பாளர் : அபூமூஸா அல்அஷ்அரீ (ரலி)

அத்தியாயம்: 13, பாடம்: 19, ஹதீஸ் எண்: 1912

و حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏وَابْنُ نُمَيْرٍ ‏ ‏قَالَا حَدَّثَنَا ‏ ‏أَبُو أُسَامَةَ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي عُمَيْسٍ ‏ ‏عَنْ ‏ ‏قَيْسِ بْنِ مُسْلِمٍ ‏ ‏عَنْ ‏ ‏طَارِقِ بْنِ شِهَابٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي مُوسَى ‏ ‏رَضِيَ اللَّهُ عَنْهُ ‏ ‏قَالَ ‏

‏كَانَ يَوْمُ عَاشُورَاءَ يَوْمًا تُعَظِّمُهُ ‏ ‏الْيَهُودُ ‏ ‏وَتَتَّخِذُهُ عِيدًا فَقَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏صُومُوهُ أَنْتُمْ

ஆஷூரா (முஹர்ரம் பத்தாவது) நாளை யூதர்கள் கண்ணியப்படுத்தியும் பண்டிகை நாளாகக் கொண்டாடியும் வந்தனர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) (எங்களிடம்), “இந்நாளில் நீங்களும் நோன்பு நோறுங்கள்!” என்றார்கள்.

அறிவிப்பாளர் : அபூமூஸா அல்அஷ்அரீ (ரலி)

அத்தியாயம்: 13, பாடம்: 19, ஹதீஸ் எண்: 1911

و حَدَّثَنِي ‏ ‏ابْنُ أَبِي عُمَرَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏سُفْيَانُ ‏ ‏عَنْ ‏ ‏أَيُّوبَ ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ اللَّهِ بْنِ سَعِيدِ بْنِ جُبَيْرٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِيهِ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ عَبَّاسٍ ‏ ‏رَضِيَ اللَّهُ عَنْهُمَا ‏

‏أَنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَدِمَ ‏ ‏الْمَدِينَةَ ‏ ‏فَوَجَدَ ‏ ‏الْيَهُودَ ‏ ‏صِيَامًا يَوْمَ عَاشُورَاءَ فَقَالَ لَهُمْ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏مَا هَذَا الْيَوْمُ الَّذِي تَصُومُونَهُ فَقَالُوا هَذَا يَوْمٌ عَظِيمٌ أَنْجَى اللَّهُ فِيهِ ‏ ‏مُوسَى ‏ ‏وَقَوْمَهُ وَغَرَّقَ ‏ ‏فِرْعَوْنَ ‏ ‏وَقَوْمَهُ فَصَامَهُ ‏ ‏مُوسَى ‏ ‏شُكْرًا فَنَحْنُ نَصُومُهُ فَقَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَنَحْنُ أَحَقُّ وَأَوْلَى ‏ ‏بِمُوسَى ‏ ‏مِنْكُمْ فَصَامَهُ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏وَأَمَرَ بِصِيَامِهِ ‏

‏و حَدَّثَنَا ‏ ‏إِسْحَقُ بْنُ إِبْرَاهِيمَ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏عَبْدُ الرَّزَّاقِ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏مَعْمَرٌ ‏ ‏عَنْ ‏ ‏أَيُّوبَ ‏ ‏بِهَذَا الْإِسْنَادِ ‏ ‏إِلَّا أَنَّهُ قَالَ عَنْ ‏ ‏ابْنِ سَعِيدِ بْنِ جُبَيْرٍ ‏ ‏لَمْ يُسَمِّهِ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) மதீனா வந்தபோது, யூதர்கள் ஆஷூரா (முஹர்ரம் பத்தாவது) நாளில் நோன்பு நோற்றிருப்பதைக் கண்டார்கள். “நீங்கள் நோன்பு நோற்றிருக்கும் இது என்ன நாள்?” என்று கேட்டார்கள். அதற்கு யூதர்கள், “இது ஒரு மகத்தான நாள்; இந்த நாளில்தான் மூஸாவையும் அவருடைய சமுதாயத்தாரையும் இறைவன் காப்பாற்றி, ஃபிர்அவ்னையும் அவனுடைய சமுதாயத்தாரையும் (செங்கடலில்) மூழ்கடித்தான். எனவே, மூஸா (அலை), (இறைவனுக்கு) நன்றி தெரிவிக்கும் முகமாக (இந்நாளில்) நோன்பு நோற்றார்கள். ஆகவே, நாங்களும் இந்நாளில் நோன்பு நோற்கிறோம்” என்று கூறினர். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “உங்களைவிட நாங்களே மூஸா (அலை) அவர்களுக்கு மிகவும் உரியவர்களும் நெருக்கமானவர்களும் ஆவோம்” என்று கூறினார்கள். பின்னர், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) தாமும் (அந்நாளில்) நோன்பு நோற்று, நோன்பு நோற்குமாறு (மக்களுக்கும்) கட்டளையிட்டார்கள்.

அறிவிப்பாளர் : இப்னு அப்பாஸ் (ரலி)

அத்தியாயம்: 13, பாடம்: 19, ஹதீஸ் எண்: 1910

حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ يَحْيَى ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏هُشَيْمٌ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي بِشْرٍ ‏ ‏عَنْ ‏
‏سَعِيدِ بْنِ جُبَيْرٍ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ عَبَّاسٍ ‏ ‏رَضِيَ اللَّهُ عَنْهُمَا ‏ ‏قَالَ ‏
‏قَدِمَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏الْمَدِينَةَ ‏ ‏فَوَجَدَ ‏ ‏الْيَهُودَ ‏ ‏يَصُومُونَ يَوْمَ عَاشُورَاءَ فَسُئِلُوا عَنْ ذَلِكَ فَقَالُوا هَذَا الْيَوْمُ الَّذِي أَظْهَرَ اللَّهُ فِيهِ ‏ ‏مُوسَى ‏ ‏وَبَنِي إِسْرَائِيلَ ‏ ‏عَلَى ‏ ‏فِرْعَوْنَ ‏ ‏فَنَحْنُ نَصُومُهُ تَعْظِيمًا لَهُ فَقَالَ النَّبِيُّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏نَحْنُ أَوْلَى ‏ ‏بِمُوسَى ‏ ‏مِنْكُمْ فَأَمَرَ بِصَوْمِهِ ‏

‏و حَدَّثَنَاه ‏ ‏ابْنُ بَشَّارٍ ‏ ‏وَأَبُو بَكْرِ بْنُ نَافِعٍ ‏ ‏جَمِيعًا ‏ ‏عَنْ ‏ ‏مُحَمَّدِ بْنِ جَعْفَرٍ ‏ ‏عَنْ ‏ ‏شُعْبَةَ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي بِشْرٍ ‏ ‏بِهَذَا الْإِسْنَادِ وَقَالَ ‏ ‏فَسَأَلَهُمْ عَنْ ذَلِكَ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) மதீனாவுக்கு (நாடு துறந்து) வந்தபோது, யூதர்கள் ஆஷூரா (முஹர்ரம் பத்தாவது) நாளில் நோன்பு நோற்பதைக் கண்டார்கள். இது குறித்து யூதர்களிடம் வினவப்பட்டபோது, “இந்த நாளில்தான் (இறைத்தூதர்) மூஸா (அலை) அவர்களுக்கும் பனூ இஸ்ராயீல் சமுதாயத்தாருக்கும் பிர்அவ்னுக்கெதிராக இறைவன் வெற்றியளித்தான். எனவே, இந்நாளைக் கண்ணியப்படுத்தும் முகமாகவே நாங்கள் இந்நாளில் நோன்பு நோற்கிறோம்” என யூதர்கள் கூறினர். அப்போது நபி (ஸல்), “உங்களைவிட மூஸாவுக்கு அதிக நெருக்கமுடையவர்கள் நாங்களே” என்று கூறிவிட்டு, ஆஷூரா நோன்பு நோற்குமாறு (முஸ்லிம்களுக்குக்) கட்டளையிட்டார்கள்.

அறிவிப்பாளர் : இப்னு அப்பாஸ் (ரலி)

குறிப்பு : ஷுஅபா (ரஹ்) வழி அறிவிப்பில், “…எனவே யூதர்களிடம் அது பற்றி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கேட்டார்கள்” என இடம் பெற்றுள்ளது.

அத்தியாயம்: 13, பாடம்: 19, ஹதீஸ் எண்: 1909

حَدَّثَنِي ‏ ‏حَرْمَلَةُ بْنُ يَحْيَى ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏ابْنُ وَهْبٍ ‏ ‏أَخْبَرَنِي ‏ ‏يُونُسُ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ شِهَابٍ ‏ ‏أَخْبَرَنِي ‏ ‏حُمَيْدُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ ‏
‏أَنَّهُ سَمِعَ ‏ ‏مُعَاوِيَةَ بْنَ أَبِي سُفْيَانَ ‏ ‏خَطِيبًا ‏ ‏بِالْمَدِينَةِ ‏ ‏يَعْنِي فِي قَدْمَةٍ قَدِمَهَا خَطَبَهُمْ يَوْمَ عَاشُورَاءَ فَقَالَ أَيْنَ عُلَمَاؤُكُمْ يَا أَهْلَ ‏ ‏الْمَدِينَةِ ‏ ‏سَمِعْتُ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يَقُولُ لِهَذَا الْيَوْمِ ‏ ‏هَذَا يَوْمُ عَاشُورَاءَ وَلَمْ يَكْتُبْ اللَّهُ عَلَيْكُمْ صِيَامَهُ وَأَنَا صَائِمٌ فَمَنْ أَحَبَّ مِنْكُمْ أَنْ يَصُومَ فَلْيَصُمْ وَمَنْ أَحَبَّ أَنْ يُفْطِرَ فَلْيُفْطِرْ ‏

‏حَدَّثَنِي ‏ ‏أَبُو الطَّاهِرِ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَبْدُ اللَّهِ بْنُ وَهْبٍ ‏ ‏أَخْبَرَنِي ‏ ‏مَالِكُ بْنُ أَنَسٍ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ شِهَابٍ ‏ ‏فِي هَذَا الْإِسْنَادِ ‏ ‏بِمِثْلِهِ ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏ابْنُ أَبِي عُمَرَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ ‏ ‏عَنْ ‏ ‏الزُّهْرِيِّ ‏ ‏بِهَذَا الْإِسْنَادِ سَمِعَ النَّبِيَّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يَقُولُ فِي مِثْلِ هَذَا الْيَوْمِ ‏ ‏إِنِّي صَائِمٌ فَمَنْ شَاءَ أَنْ يَصُومَ فَلْيَصُمْ وَلَمْ يَذْكُرْ بَاقِي حَدِيثِ ‏ ‏مَالِكٍ ‏ ‏وَيُونُسَ

முஆவியா பின் அபீஸுஃப்யான் (ரலி) ஒரு முறை (ஸிரியாவிலிருந்து) மதீனாவிற்கு வந்தபோது, ஆஷூரா (முஹர்ரம் பத்தாவது) நாளன்று மக்களுக்கு உரையாற்றினார்கள். அப்போது “மதீனாவாசிகளே!, உங்கள் அறிஞர்கள் எங்கே?”
“இது, ஆஷூரா (முஹர்ரம் பத்தாவது) நாளாகும்; இந்நாளில் நோன்பு நோற்பதை அல்லாஹ் உங்களுக்குக் கடமையாக்கவில்லை. நான் நோன்பு நோற்றிருக்கிறேன். உங்களில் நோன்பு நோற்க விரும்புகின்றவர் நோன்பு நோற்கட்டும்; விட்டுவிட விரும்புகின்றவர் விட்டுவிடட்டும்!” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறியதை நான் செவியுற்றுள்ளேன் என்றார்கள்.

அறிவிப்பாளர் : அபூஸுஃப்யான் (ரலி) வழியாக ஹுமைத் பின் அப்திர் ரஹ்மான் (ரஹ்)

குறிப்பு : மாலிக் பின் அனஸ் (ரஹ்) வழி அறிவிப்பில், “இது போன்ற (ஆஷூரா) நாளில் நான் நோன்பு நோற்றுள்ளேன். எனவே, நோன்பு நோற்க விரும்புகின்றவர் நோன்பு நோற்கட்டும்” என்று நபி (ஸல்) கூறியதாக இடம் பெற்றுள்ளது. மற்ற தகவல்கள் காணப்படவில்லை.

அத்தியாயம்: 13, பாடம்: 19, ஹதீஸ் எண்: 1908

حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عُبَيْدُ اللَّهِ بْنُ مُوسَى ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏شَيْبَانُ ‏ ‏عَنْ ‏ ‏أَشْعَثَ بْنِ أَبِي الشَّعْثَاءِ ‏ ‏عَنْ ‏ ‏جَعْفَرِ بْنِ أَبِي ثَوْرٍ ‏ ‏عَنْ ‏ ‏جَابِرِ بْنِ سَمُرَةَ ‏ ‏رَضِيَ اللَّهُ عَنْهُ ‏ ‏قَالَ ‏

‏كَانَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يَأْمُرُنَا بِصِيَامِ يَوْمِ عَاشُورَاءَ وَيَحُثُّنَا عَلَيْهِ وَيَتَعَاهَدُنَا عِنْدَهُ فَلَمَّا فُرِضَ رَمَضَانُ لَمْ يَأْمُرْنَا وَلَمْ يَنْهَنَا وَلَمْ يَتَعَاهَدْنَا عِنْدَهُ

ஆஷூரா (முஹர்ரம் பத்தாவது) நாளில் நோன்பு நோற்குமாறு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) எங்களுக்குக் கட்டளையிட்டு வந்தார்கள்; அந்நோன்பை நோற்குமாறு எங்களை ஊக்குவித்தார்கள். அந்த நாளில் (நாங்கள் நோன்பு நோற்கிறோமா என) எங்களைக் கண்காணித்தார்கள். ரமளான் நோன்பு கடமையாக்கப்பட்டபோது, (ஆஷூரா நோன்பு நோற்குமாறு) எங்களுக்குக் கட்டளையிடவுமில்லை; எங்களுக்குத் தடை விதிக்கவுமில்லை; அந்த நாளில் எங்களைக் கண்காணிக்கவுமில்லை.

அறிவிப்பாளார் : ஜாபிர் பின் ஸமுரா (ரலி)

அத்தியாயம்: 13, பாடம்: 19, ஹதீஸ் எண்: 1907

و حَدَّثَنِي ‏ ‏مُحَمَّدُ بْنُ حَاتِمٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏إِسْحَقُ بْنُ مَنْصُورٍ ‏ ‏حَدَّثَنَا ‏
‏إِسْرَائِيلُ ‏ ‏عَنْ ‏ ‏مَنْصُورٍ ‏ ‏عَنْ ‏ ‏إِبْرَاهِيمَ ‏ ‏عَنْ ‏ ‏عَلْقَمَةَ ‏ ‏قَالَ ‏
‏دَخَلَ ‏ ‏الْأَشْعَثُ بْنُ قَيْسٍ ‏ ‏عَلَى ‏ ‏ابْنِ مَسْعُودٍ ‏ ‏وَهُوَ يَأْكُلُ يَوْمَ عَاشُورَاءَ فَقَالَ يَا ‏ ‏أَبَا عَبْدِ الرَّحْمَنِ ‏ ‏إِنَّ الْيَوْمَ يَوْمُ عَاشُورَاءَ فَقَالَ قَدْ ‏ ‏كَانَ يُصَامُ قَبْلَ أَنْ يَنْزِلَ رَمَضَانُ فَلَمَّا نَزَلَ رَمَضَانُ تُرِكَ فَإِنْ كُنْتَ مُفْطِرًا فَاطْعَمْ

நான் ஆஷூரா (முஹர்ரம் பத்தாவது) நாளன்று அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்களிடம் சென்றேன். அப்போது அவர்கள் சாப்பிட்டுக்கொண்டிருந்தார்கள். நான், “அபூஅப்திர் ரஹ்மான்!, இன்று ஆஷூரா (முஹர்ரம் பத்தாவது) நாள் ஆயிற்றே?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “ரமளான் நோன்பு கடமையாவதற்கு முன்பு (ஆஷூரா) நோன்பு நோற்கப்பட்டுவந்தது. ரமளான் நோன்பு கடமையானபோது அந்த (ஆஷூரா) நோன்பு கைவிடப்பட்டது. ஆகவே, நீங்கள் நோன்பை விட்டுவிட விரும்பினால் நீங்களும் (என்னுடன்) சாப்பிடலாம்” என்றார்கள்.

அறிவிப்பாளர் : இப்னு மஸ்ஊத் (ரலி) வழியாக அஷ்அஸ் பின் கைஸ் (ரஹ்)

அத்தியாயம்: 13, பாடம்: 19, ஹதீஸ் எண்: 1906

و حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏وَكِيعٌ ‏ ‏وَيَحْيَى بْنُ سَعِيدٍ الْقَطَّانُ ‏ ‏عَنْ ‏ ‏سُفْيَانَ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنِي ‏ ‏مُحَمَّدُ بْنُ حَاتِمٍ ‏ ‏وَاللَّفْظُ لَهُ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ سَعِيدٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏سُفْيَانُ ‏ ‏حَدَّثَنِي ‏ ‏زُبَيْدٌ الْيَامِيُّ ‏ ‏عَنْ ‏ ‏عُمَارَةَ بْنِ عُمَيْرٍ ‏ ‏عَنْ ‏ ‏قَيْسِ بْنِ سَكَنٍ ‏

‏أَنَّ ‏ ‏الْأَشْعَثَ بْنَ قَيْسٍ ‏ ‏دَخَلَ عَلَى ‏ ‏عَبْدِ اللَّهِ ‏ ‏يَوْمَ عَاشُورَاءَ وَهُوَ يَأْكُلُ فَقَالَ يَا ‏ ‏أَبَا مُحَمَّدٍ ‏ ‏ادْنُ فَكُلْ قَالَ إِنِّي صَائِمٌ قَالَ ‏ ‏كُنَّا نَصُومُهُ ثُمَّ تُرِكَ

ஆஷூரா (முஹர்ரம் பத்தாவது) நாளன்று நான் அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்களிடம் சென்றேன். அப்போது அவர்கள் சாப்பிட்டுக்கொண்டிருந்தார்கள். (என்னைக் கண்டதும்) அவர்கள், “அபூமுஹம்மதே, அருகில் வந்து நீங்களும் உண்ணுங்கள்” என்றார்கள். “நான் நோன்பு நோற்றிருக்கிறேன்” என்று சொன்னேன். அவர்கள், “நாங்கள் (ஆரம்பக் காலத்தில்) அந்நாளில் நோன்பு நோற்றோம். பின்னர் அந்த நோன்பு கைவிடப்பட்டது” என்றார்கள்.

அறிவிப்பாளர் : இப்னு மஸ்ஊத் (ரலி) வழியாக அஷ்அஸ் பின் கைஸ் (ரஹ்)

அத்தியாயம்: 13, பாடம்: 19, ஹதீஸ் எண்: 1905

حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏وَأَبُو كُرَيْبٍ ‏ ‏جَمِيعًا ‏ ‏عَنْ ‏ ‏أَبِي مُعَاوِيَةَ ‏ ‏قَالَ ‏ ‏أَبُو بَكْرٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبُو مُعَاوِيَةَ ‏ ‏عَنْ ‏ ‏الْأَعْمَشِ ‏ ‏عَنْ ‏ ‏عُمَارَةَ ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ الرَّحْمَنِ بْنِ يَزِيدَ ‏ ‏قَالَ ‏

‏دَخَلَ ‏ ‏الْأَشْعَثُ بْنُ قَيْسٍ ‏ ‏عَلَى ‏ ‏عَبْدِ اللَّهِ ‏ ‏وَهُوَ يَتَغَدَّى فَقَالَ يَا ‏ ‏أَبَا مُحَمَّدٍ ‏ ‏ادْنُ إِلَى الْغَدَاءِ فَقَالَ أَوَلَيْسَ الْيَوْمُ يَوْمَ عَاشُورَاءَ قَالَ وَهَلْ تَدْرِي مَا يَوْمُ عَاشُورَاءَ قَالَ وَمَا هُوَ قَالَ إِنَّمَا ‏ ‏هُوَ يَوْمٌ كَانَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يَصُومُهُ قَبْلَ أَنْ يَنْزِلَ شَهْرُ رَمَضَانَ فَلَمَّا نَزَلَ شَهْرُ رَمَضَانَ تُرِكَ ‏

‏و قَالَ ‏ ‏أَبُو كُرَيْبٍ ‏ ‏تَرَكَهُ ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏زُهَيْرُ بْنُ حَرْبٍ ‏ ‏وَعُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏قَالَا حَدَّثَنَا ‏ ‏جَرِيرٌ ‏ ‏عَنْ ‏ ‏الْأَعْمَشِ ‏ ‏بِهَذَا الْإِسْنَادِ وَقَالَا ‏ ‏فَلَمَّا نَزَلَ رَمَضَانُ تَرَكَهُ

நான் அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்களிடம் சென்றேன். அப்போது அவர்கள் பகலுணவு உண்டுகொண்டிருந்தார்கள். மேலும், “அபூமுஹம்மதே, சாப்பிட வாருங்கள்” என்று (என்னை) அழைத்தார்கள். நான், “இன்று ஆஷூரா (முஹர்ரம் பத்தாவது) நாளல்லவா?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “ஆஷூரா நாள் எ(த்தகைய)து என்று நீர் அறிவீரா?” என்று கேட்டார்கள். “அது எத்தகையது?” என்று கேட்டேன். அவர்கள், “அது ரமளான் நோன்பு கடமையாவதற்கு முன்பு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) நோன்பு நோற்றுவந்த நாளாகும். ரமளான் நோன்பு கடமையானபோது, அந்த நோன்பு கைவிடப்பட்டது” என்று சொன்னார்கள்.

அறிவிப்பாளர் : இப்னு மஸ்ஊத் (ரலி) வழியாக அஷ்அஸ் பின் கைஸ் (ரஹ்)

குறிப்பு : அபூகுறைப் (ரஹ்) வழி அறிவிப்பில் “அந்த நோன்பை (அல்லாஹ்வின் தூதர்-ஸல்) அவர்கள் கைவிட்டார்கள்” என்று இடம்பெற்றுள்ளது.
ஜரீர் (ரஹ்) வழி அறிவிப்பில்,“ரமளான் நோன்பு கடமையானபோது, அந்த (ஆஷூரா) நோன்பை (அல்லாஹ்வின் தூதர் – ஸல்) கைவிட்டார்கள்” என்று இடம்பெற்றுள்ளது.