அத்தியாயம்: 13, பாடம்: 27, ஹதீஸ் எண்: 1937

و حَدَّثَنِي ‏ ‏أَحْمَدُ بْنُ عُمَرَ الْوَكِيعِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏حُسَيْنُ بْنُ عَلِيٍّ ‏ ‏عَنْ ‏ ‏زَائِدَةَ ‏ ‏عَنْ ‏ ‏سُلَيْمَانَ ‏ ‏عَنْ ‏ ‏مُسْلِمٍ الْبَطِينِ ‏ ‏عَنْ ‏ ‏سَعِيدِ بْنِ جُبَيْرٍ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ عَبَّاسٍ ‏ ‏رَضِيَ اللَّهُ عَنْهُمَا ‏ ‏قَالَ ‏

‏جَاءَ رَجُلٌ إِلَى النَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَقَالَ يَا رَسُولَ اللَّهِ إِنَّ أُمِّي مَاتَتْ وَعَلَيْهَا صَوْمُ شَهْرٍ أَفَأَقْضِيهِ عَنْهَا فَقَالَ ‏ ‏لَوْ كَانَ عَلَى أُمِّكَ دَيْنٌ أَكُنْتَ قَاضِيَهُ عَنْهَا قَالَ نَعَمْ قَالَ فَدَيْنُ اللَّهِ أَحَقُّ أَنْ ‏ ‏يُقْضَى ‏

‏قَالَ ‏ ‏سُلَيْمَانُ ‏ ‏فَقَالَ ‏ ‏الْحَكَمُ ‏ ‏وَسَلَمَةُ بْنُ كُهَيْلٍ ‏ ‏جَمِيعًا وَنَحْنُ جُلُوسٌ حِينَ حَدَّثَ ‏ ‏مُسْلِمٌ ‏ ‏بِهَذَا الْحَدِيثِ فَقَالَا سَمِعْنَا ‏ ‏مُجَاهِدًا ‏ ‏يَذْكُرُ هَذَا عَنْ ‏ ‏ابْنِ عَبَّاسٍ ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏أَبُو سَعِيدٍ الْأَشَجُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبُو خَالِدٍ الْأَحْمَرُ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏الْأَعْمَشُ ‏ ‏عَنْ ‏ ‏سَلَمَةَ بْنِ كُهَيْلٍ ‏ ‏وَالْحَكَمِ بْنِ عُتَيْبَةَ ‏ ‏وَمُسْلِمٍ الْبَطِينِ ‏ ‏عَنْ ‏ ‏سَعِيدِ بْنِ جُبَيْرٍ ‏ ‏وَمُجَاهِدٍ ‏ ‏وَعَطَاءٍ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ عَبَّاسٍ ‏ ‏رَضِيَ اللَّهُ عَنْهُمَا ‏ ‏عَنْ النَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏بِهَذَا الْحَدِيثِ

ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, “அல்லாஹ்வின் தூதரே! ஒரு மாத நோன்பு கடமையாக இருந்த நிலையில் என் தாயார் இறந்துவிட்டார். அதை அவர் சார்பாக நான் நிறைவேற்றலாமா?” என்று கேட்டார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “உன் தாயார்மீது கடனேதும் இருந்தால், அவர் சார்பாக அதை நீ நிறைவேற்றுவாய் அல்லவா?” என்று கேட்டார்கள். அவர் “ஆம்” என்றார். “அவ்வாறாயின், நிறைவேற்றப்படுவதற்கு மிகவும் தகுதி வாய்ந்தது அல்லாஹ்வின் கடனே” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : இப்னு அப்பாஸ் (ரலி)

குறிப்பு : “முஸ்லிம் பின் இம்ரான் அல்பத்தீன் (ரஹ்) இந்த ஹதீஸை எங்களுக்கு அறிவித்தபோது, அல்ஹகம் பின் உதைபா (ரஹ்) மற்றும் ஸலமா பின் குஹைல் (ரஹ்) ஆகிய இருவரும், ‘இந்த ஹதீஸை இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடமிருந்து முஜாஹித் (ரஹ்) அறிவித்ததை நாங்கள் செவியுற்றுள்ளோம். அப்போது அங்கு நாங்களும் அமர்ந்திருந்தோம்’ என்று கூறினர்” என்பதாக இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான சுலைமான் அல்அஃமஷ் (ரஹ்) குறிப்பிட்டுள்ளார்.

Share this Hadith:

Leave a Comment