அத்தியாயம்: 13, பாடம்: 27, ஹதீஸ் எண்: 1938

و حَدَّثَنَا ‏ ‏إِسْحَقُ بْنُ مَنْصُورٍ ‏ ‏وَابْنُ أَبِي خَلَفٍ ‏ ‏وَعَبْدُ بْنُ حُمَيْدٍ ‏ ‏جَمِيعًا ‏ ‏عَنْ ‏ ‏زَكَرِيَّاءَ بْنِ عَدِيٍّ ‏ ‏قَالَ ‏ ‏عَبْدٌ ‏ ‏حَدَّثَنِي ‏ ‏زَكَرِيَّاءُ بْنُ عَدِيٍّ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏عُبَيْدُ اللَّهِ بْنُ عَمْرٍو ‏ ‏عَنْ ‏ ‏زَيْدِ بْنِ أَبِي أُنَيْسَةَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏الْحَكَمُ بْنُ عُتَيْبَةَ ‏ ‏عَنْ ‏ ‏سَعِيدِ بْنِ جُبَيْرٍ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ عَبَّاسٍ ‏ ‏رَضِيَ اللَّهُ عَنْهُمَا ‏ ‏قَالَ ‏

‏جَاءَتْ امْرَأَةٌ إِلَى رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَقَالَتْ يَا رَسُولَ اللَّهِ إِنَّ أُمِّي مَاتَتْ وَعَلَيْهَا صَوْمُ نَذْرٍ أَفَأَصُومُ عَنْهَا قَالَ ‏ ‏أَرَأَيْتِ لَوْ كَانَ عَلَى أُمِّكِ دَيْنٌ ‏ ‏فَقَضَيْتِيهِ أَكَانَ يُؤَدِّي ذَلِكِ عَنْهَا قَالَتْ نَعَمْ قَالَ فَصُومِي عَنْ أُمِّكِ

ஒரு பெண்மணி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, “அல்லாஹ்வின் தூதரே! என் தாயார், தம்மீது நேர்ச்சை நோன்பு கடமையாகியிருந்த நிலையில் இறந்துவிட்டார். அவர் சார்பாக நான் நோன்பு நோற்கலாமா?” என்று கேட்டார். அதற்கு, “உன் தாயார்மீது கடனிருந்த நிலையில் அவர் மரணித்து, அதை நீ நிறைவேற்றினால், அவர் சார்பாக அக்கடன் நிறைவேறிவிடுமல்லவா?” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கேட்டார்கள். அப்பெண்மணி, “ஆம்” என்றார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “உன் தாயார் சார்பாக நோன்பு நோற்றுக்கொள்” என்றார்கள்.

அறிவிப்பாளர் : இப்னு அப்பாஸ் (ரலி)

Share this Hadith:

Leave a Comment