அத்தியாயம்: 13, பாடம்: 09, ஹதீஸ் எண்: 1840

و حَدَّثَنَا ‏ ‏أَبُو كُرَيْبٍ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏ابْنُ أَبِي زَائِدَةَ ‏ ‏عَنْ ‏ ‏الْأَعْمَشِ ‏ ‏عَنْ ‏ ‏عُمَارَةَ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي عَطِيَّةَ ‏ ‏قَالَ ‏

‏دَخَلْتُ أَنَا ‏ ‏وَمَسْرُوقٌ ‏ ‏عَلَى ‏ ‏عَائِشَةَ ‏ ‏رَضِيَ اللَّهُ عَنْهَا ‏ ‏فَقَالَ لَهَا ‏ ‏مَسْرُوقٌ ‏ ‏رَجُلَانِ مِنْ أَصْحَابِ ‏ ‏مُحَمَّدٍ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏كِلَاهُمَا لَا ‏ ‏يَأْلُو ‏ ‏عَنْ الْخَيْرِ أَحَدُهُمَا يُعَجِّلُ الْمَغْرِبَ وَالْإِفْطَارَ وَالْآخَرُ يُؤَخِّرُ الْمَغْرِبَ وَالْإِفْطَارَ فَقَالَتْ مَنْ يُعَجِّلُ الْمَغْرِبَ وَالْإِفْطَارَ قَالَ ‏ ‏عَبْدُ اللَّهِ ‏ ‏فَقَالَتْ هَكَذَا كَانَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يَصْنَعُ

நானும் மஸ்ரூக் (ரஹ்) அவர்களும் ஆயிஷா (ரலி) அவர்களிடம் சென்றோம். அப்போது மஸ்ரூக், ஆயிஷா (ரலி) அவர்களிடம், “முஹம்மது (ஸல்) அவர்களின் தோழர்களில் நன்மையில் குறைவைக்காத இருவர் உள்ளனர். அவ்விருவரில் ஒருவர் மஃக்ரிப் தொழுகையையும் நோன்பு துறப்பதையும் விரைவாகவே செய்கின்றார். மற்றொருவர் அவ்விரண்டையுமே தாமதப்படுத்துகிறார்” என்று கூறினார். அப்போது, “நோன்பு துறப்பதையும் மஃக்ரிபையும் விரைவு படுத்துபவர் யார்?” என்று ஆயிஷா (ரலி) கேட்டார்கள். அதற்கு, “அப்துல்லாஹ் பின் மஸ்ஊத்” என்றார் மஸ்ரூக். ஆயிஷா (ரலி), “இவ்வாறே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) செய்வார்கள்” என்று விடையளித்தார்கள்.

அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி) வழியாக அபூஅத்திய்யா மாலிக் பின் ஆமிர் (ரஹ்)

அத்தியாயம்: 13, பாடம்: 09, ஹதீஸ் எண்: 1839

حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ يَحْيَى ‏ ‏وَأَبُو كُرَيْبٍ مُحَمَّدُ بْنُ الْعَلَاءِ ‏ ‏قَالَا أَخْبَرَنَا ‏ ‏أَبُو مُعَاوِيَةَ ‏ ‏عَنْ ‏ ‏الْأَعْمَشِ ‏ ‏عَنْ ‏ ‏عُمَارَةَ بْنِ عُمَيْرٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي عَطِيَّةَ ‏ ‏قَالَ ‏

‏دَخَلْتُ أَنَا ‏ ‏وَمَسْرُوقٌ ‏ ‏عَلَى ‏ ‏عَائِشَةَ ‏ ‏فَقُلْنَا يَا أُمَّ الْمُؤْمِنِينَ رَجُلَانِ مِنْ أَصْحَابِ ‏ ‏مُحَمَّدٍ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏أَحَدُهُمَا يُعَجِّلُ الْإِفْطَارَ وَيُعَجِّلُ الصَّلَاةَ وَالْآخَرُ يُؤَخِّرُ الْإِفْطَارَ وَيُؤَخِّرُ الصَّلَاةَ قَالَتْ أَيُّهُمَا الَّذِي يُعَجِّلُ الْإِفْطَارَ وَيُعَجِّلُ الصَّلَاةَ قَالَ قُلْنَا ‏ ‏عَبْدُ اللَّهِ يَعْنِي ابْنَ مَسْعُودٍ ‏ ‏قَالَتْ كَذَلِكَ كَانَ يَصْنَعُ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏

‏زَادَ ‏ ‏أَبُو كُرَيْبٍ ‏ ‏وَالْآخَرُ ‏ ‏أَبُو مُوسَى

நானும் மஸ்ரூக் (ரஹ்) அவர்களும் ஆயிஷா (ரலி) அவர்களிடம் சென்றோம். “இறைநம்பிக்கையாளர்களின் அன்னையே! முஹம்மது (ஸல்) அவர்களின் இரு தோழர்களில் ஒருவர் (நேரம் வந்தவுடன்) தாமதிக்காமல் விரைந்து நோன்பு துறக்கின்றார்; (மஃக்ரிப் தொழுகையை) விரைந்து தொழுகின்றார். இன்னொருவர், நோன்பு துறப்பதையும் தாமதப்படுத்துகின்றார்; தொழுகையையும் தாமதப்படுத்துகிறார் (இவ்விருவரில் யார் செய்வது சரி?)” என்று கேட்டோம். அதற்கு ஆயிஷா (ரலி), “விரைந்து நோன்பு துறந்து, விரைந்து தொழுபவர் யார்?” என்று கேட்டார்கள். நாங்கள், “அப்துல்லாஹ் பின் மஸ்ஊத்” என்றோம். அதற்கு, “இவ்வாறே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) செய்வார்கள்” என்று ஆயிஷா (ரலி) விடையளித்தார்கள்.

அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி) வழியாக அபூஅத்திய்யா மாலிக் பின் ஆமிர் (ரஹ்)

குறிப்பு : அபூகுறைப் (ரஹ்) வழி அறிவிப்பில், “இன்னொரு நபித்தோழர் அபூமூஸா (ரலி) ஆவார்” என அதிகப்படியாக இடம் பெற்றுள்ளது.

அத்தியாயம்: 13, பாடம்: 09, ஹதீஸ் எண்: 1838

حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ يَحْيَى ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏عَبْدُ الْعَزِيزِ بْنُ أَبِي حَازِمٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِيهِ ‏ ‏عَنْ ‏ ‏سَهْلِ بْنِ سَعْدٍ ‏ ‏رَضِيَ اللَّهُ عَنْهُ ‏

‏أَنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَالَ ‏ ‏لَا يَزَالُ النَّاسُ بِخَيْرٍ مَا عَجَّلُوا الْفِطْرَ ‏

‏و حَدَّثَنَاه ‏ ‏قُتَيْبَةُ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏يَعْقُوبُ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنِي ‏ ‏زُهَيْرُ بْنُ حَرْبٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَبْدُ الرَّحْمَنِ بْنُ مَهْدِيٍّ ‏ ‏عَنْ ‏ ‏سُفْيَانَ ‏ ‏كِلَاهُمَا ‏ ‏عَنْ ‏ ‏أَبِي حَازِمٍ ‏ ‏عَنْ ‏ ‏سَهْلِ بْنِ سَعْدٍ ‏ ‏رَضِيَ اللَّهُ عَنْهُ ‏ ‏عَنْ النَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏بِمِثْلِهِ

“நோன்பு துறப்பதை விரைவுபடுத்தும் காலமெல்லாம் மக்கள் நன்மையில் நிலைத்திருப்பார்கள்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர்: ஸஹ்லு பின் ஸஅத் (ரலி)

அத்தியாயம்: 13, பாடம்: 09, ஹதீஸ் எண்: 1837

حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏وَكِيعٌ ‏ ‏عَنْ ‏ ‏هِشَامٍ ‏ ‏عَنْ ‏ ‏قَتَادَةَ ‏ ‏عَنْ ‏ ‏أَنَسٍ ‏ ‏عَنْ ‏ ‏زَيْدِ بْنِ ثَابِتٍ ‏ ‏رَضِيَ اللَّهُ عَنْهُ ‏ ‏قَالَ ‏

‏تَسَحَّرْنَا مَعَ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏ثُمَّ قُمْنَا إِلَى الصَّلَاةِ قُلْتُ كَمْ كَانَ قَدْرُ مَا بَيْنَهُمَا قَالَ خَمْسِينَ آيَةً ‏

‏و حَدَّثَنَا ‏ ‏عَمْرٌو النَّاقِدُ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏يَزِيدُ بْنُ هَارُونَ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏هَمَّامٌ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏ابْنُ الْمُثَنَّى ‏ ‏حَدَّثَنَا ‏ ‏سَالِمُ بْنُ نُوحٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عُمَرُ بْنُ عَامِرٍ ‏ ‏كِلَاهُمَا ‏ ‏عَنْ ‏ ‏قَتَادَةَ ‏ ‏بِهَذَا الْإِسْنَادِ

“நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களோடு ஸஹர் செய்துவிட்டுப் பின்னர் (ஃபஜ்ருத்) தொழுகைக்குத் தயாராவோம்” என்று ஸைத் பின் ஸாபித் (ரலி) அவர்கள் கூறியபோது நான், “ஸஹருக்கும் (ஃபஜ்ருத்) தொழுகைக்குமிடையே நேர இடைவெளி எவ்வளவு இருக்கும்?” என்று கேட்டேன். அதற்கு ஸைத் பின் ஸாபித் (ரலி), “(குர்ஆனில்) ஐம்பது வசனங்கள் (ஓதும் நேரம்)” என்று பதிலளித்தார்கள்.

அறிவிப்பாளர் : அனஸ் (ரலி)

அத்தியாயம்: 13, பாடம்: 09, ஹதீஸ் எண்: 1836

حَدَّثَنَا ‏ ‏قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏لَيْثٌ ‏ ‏عَنْ ‏ ‏مُوسَى بْنِ عُلَيٍّ ‏ ‏عَنْ ‏ ‏أَبِيهِ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي قَيْسٍ ‏ ‏مَوْلَى ‏ ‏عَمْرِو بْنِ الْعَاصِ ‏ ‏عَنْ ‏ ‏عَمْرِو بْنِ الْعَاصِ ‏

‏أَنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَالَ ‏ ‏فَصْلُ ‏ ‏مَا بَيْنَ صِيَامِنَا وَصِيَامِ ‏ ‏أَهْلِ الْكِتَابِ ‏ ‏أَكْلَةُ السَّحَرِ ‏

‏و حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ يَحْيَى ‏ ‏وَأَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏جَمِيعًا ‏ ‏عَنْ ‏ ‏وَكِيعٍ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنِيهِ ‏ ‏أَبُو الطَّاهِرِ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏ابْنُ وَهْبٍ ‏ ‏كِلَاهُمَا ‏ ‏عَنْ ‏ ‏مُوسَى بْنِ عُلَيٍّ ‏ ‏بِهَذَا الْإِسْنَادِ

“நமது நோன்பிற்கும் வேதக்காரர்களின் நோன்பிற்கும் இடையில் உள்ள வேறுபாடு ஸஹர் நேரத்தில் உண்பதுதான்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அம்ரு பின் அல்ஆஸ் (ரலி)

அத்தியாயம்: 13, பாடம்: 09, ஹதீஸ் எண்: 1835

حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ يَحْيَى ‏ ‏قَالَ أَخْبَرَنَا ‏ ‏هُشَيْمٌ ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ الْعَزِيزِ بْنِ صُهَيْبٍ ‏ ‏عَنْ ‏ ‏أَنَسٍ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏وَزُهَيْرُ بْنُ حَرْبٍ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ عُلَيَّةَ ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ الْعَزِيزِ ‏ ‏عَنْ ‏ ‏أَنَسٍ ‏ ‏رَضِيَ اللَّهُ عَنْهُ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبُو عَوَانَةَ ‏ ‏عَنْ ‏ ‏قَتَادَةَ ‏ ‏وَعَبْدِ الْعَزِيزِ بْنِ صُهَيْبٍ ‏ ‏عَنْ ‏ ‏أَنَسٍ ‏ ‏رَضِيَ اللَّهُ عَنْهُ ‏ ‏قَالَ ‏

‏قَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏تَسَحَّرُوا فَإِنَّ فِي السُّحُورِ بَرَكَةً

“ஸஹர் செய்யுங்கள். ஏனெனில், ஸஹர் செய்வதில் அருள் வளம் (பரக்கத்) உள்ளது” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அனஸ் (ரலி)