அத்தியாயம்: 15, பாடம்: 15.17, ஹதீஸ் எண்: 2120

و حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏ابْنُ عُلَيَّةَ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ عَوْنٍ ‏ ‏عَنْ ‏ ‏إِبْرَاهِيمَ ‏ ‏عَنْ ‏ ‏الْأَسْوَدِ ‏ ‏عَنْ ‏ ‏أُمِّ الْمُؤْمِنِينَ ‏ ‏ح ‏ ‏وَعَنْ ‏ ‏الْقَاسِمِ ‏ ‏عَنْ ‏ ‏أُمِّ الْمُؤْمِنِينَ ‏ ‏قَالَتْ ‏

‏قُلْتُ يَا رَسُولَ اللَّهِ ‏ ‏يَصْدُرُ ‏ ‏النَّاسُ ‏ ‏بِنُسُكَيْنِ ‏ ‏وَأَصْدُرُ بِنُسُكٍ وَاحِدٍ قَالَ ‏ ‏انْتَظِرِي فَإِذَا طَهَرْتِ فَاخْرُجِي إِلَى ‏ ‏التَّنْعِيمِ ‏ ‏فَأَهِلِّي مِنْهُ ثُمَّ الْقَيْنَا عِنْدَ كَذَا وَكَذَا قَالَ أَظُنُّهُ قَالَ غَدًا وَلَكِنَّهَا عَلَى قَدْرِ ‏ ‏نَصَبِكِ ‏ ‏أَوْ قَالَ نَفَقَتِكِ ‏

‏و حَدَّثَنَا ‏ ‏ابْنُ الْمُثَنَّى ‏ ‏حَدَّثَنَا ‏ ‏ابْنُ أَبِي عَدِيٍّ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ عَوْنٍ ‏ ‏عَنْ ‏ ‏الْقَاسِمِ ‏ ‏وَإِبْرَاهِيمَ ‏ ‏قَالَ ‏ ‏لَا أَعْرِفُ حَدِيثَ أَحَدِهِمَا مِنْ الْآخَرِ ‏ ‏أَنَّ ‏ ‏أُمَّ

நான் (நபி (ஸல்) அவர்களிடம்), “அல்லாஹ்வின் தூதரே! மக்கள் எல்லாரும் (ஹஜ், உம்ரா ஆகிய) இரு கடமைகளையும் நிறைவேற்றிவிட்டுத் திரும்புகின்றனர். நான் மட்டும் (ஹஜ் என்கிற) ஒரேயொரு கடமையை நிறைவேற்றிவிட்டுத் திரும்புகிறேனே?” என்று கேட்டேன். அதற்கு நபி (ஸல்), “நீ (சற்றுக்) காத்திருந்து, (மாதவிடாயிலிருந்து) தூய்மையடைந்ததும் தன்யீமுக்குச் சென்று, அங்கு உம்ராவிற்காக தல்பியா கூறிக்கொள். பிறகு நாளை நாம் இன்னின்ன இடத்தில் சந்திப்போம். ஆனால், உம்ராவிற்கான நற்பலன் (நீ ஏற்றுக்கொண்ட) உனது சிரமத்திற்கு அல்லது உனது பொருட் செலவிற்குத் தக்கவாறுதான் கிட்டும்!” என்றார்கள்.

அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி)


குறிப்பு : “இறை நம்பிக்கையாளர்களின் அன்னை அறிவித்த ‘அல்லாஹ்வின் தூதரே! மக்களெல்லாம் இரு கடமைகளை நிறைவேற்றித் திரும்புகின்றனர் …‘ என்று தொடங்கும் மேற்கண்ட ஹதீஸ் காசிம் பின் முஹம்மது (ரஹ்), இப்ராஹீம் பின் யஸீத் பின் கைஸ் (ரஹ்) ஆகிய இருவர் வழியாக இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் எது யாருடைய வழி அறிவிப்பு என்று எனக்குத் தெரியவில்லை” என்பதாக அப்துல்லாஹ் பின் அவ்னு (ரஹ்) குறிப்பிடுகின்றார்.

Share this Hadith:

Leave a Comment