அத்தியாயம்: 15, பாடம்: 26, ஹதீஸ் எண்: 2166

‏و حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ رُمْحٍ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏اللَّيْثُ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏قُتَيْبَةُ ‏ ‏وَاللَّفْظُ لَهُ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏لَيْثٌ ‏ ‏عَنْ ‏ ‏نَافِعٍ ‏
‏أَنَّ ‏ ‏ابْنَ عُمَرَ ‏ ‏أَرَادَ الْحَجَّ عَامَ نَزَلَ ‏ ‏الْحَجَّاجُ ‏ ‏بِابْنِ الزُّبَيْرِ ‏ ‏فَقِيلَ لَهُ إِنَّ النَّاسَ كَائِنٌ بَيْنَهُمْ قِتَالٌ وَإِنَّا نَخَافُ أَنْ يَصُدُّوكَ فَقَالَ ‏ ” ‏لَقَدْ كَانَ لَكُمْ فِي رَسُولِ اللَّهِ أُسْوَةٌ حَسَنَةٌ “‏ ‏أَصْنَعُ كَمَا صَنَعَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏إِنِّي أُشْهِدُكُمْ أَنِّي قَدْ ‏ ‏أَوْجَبْتُ ‏ ‏عُمْرَةً ثُمَّ خَرَجَ حَتَّى إِذَا كَانَ بِظَاهِرِ ‏ ‏الْبَيْدَاءِ ‏ ‏قَالَ مَا شَأْنُ الْحَجِّ وَالْعُمْرَةِ إِلَّا وَاحِدٌ اشْهَدُوا قَالَ ‏ ‏ابْنُ رُمْحٍ ‏ ‏أُشْهِدُكُمْ أَنِّي قَدْ ‏ ‏أَوْجَبْتُ ‏ ‏حَجًّا مَعَ عُمْرَتِي ‏ ‏وَأَهْدَى ‏ ‏هَدْيًا ‏ ‏اشْتَرَاهُ ‏ ‏بِقُدَيْدٍ ‏ ‏ثُمَّ انْطَلَقَ ‏ ‏يُهِلُّ ‏ ‏بِهِمَا جَمِيعًا حَتَّى قَدِمَ ‏ ‏مَكَّةَ ‏ ‏فَطَافَ ‏ ‏بِالْبَيْتِ ‏ ‏وَبِالصَّفَا ‏ ‏وَالْمَرْوَةِ ‏ ‏وَلَمْ يَزِدْ عَلَى ذَلِكَ وَلَمْ يَنْحَرْ وَلَمْ يَحْلِقْ وَلَمْ ‏ ‏يُقَصِّرْ ‏ ‏وَلَمْ يَحْلِلْ مِنْ شَيْءٍ حَرُمَ مِنْهُ حَتَّى كَانَ ‏ ‏يَوْمُ النَّحْرِ ‏ ‏فَنَحَرَ وَحَلَقَ وَرَأَى أَنْ قَدْ ‏ ‏قَضَى ‏ ‏طَوَافَ الْحَجِّ وَالْعُمْرَةِ بِطَوَافِهِ الْأَوَّلِ وَقَالَ ‏ ‏ابْنُ عُمَرَ ‏ ‏كَذَلِكَ فَعَلَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏
‏حَدَّثَنَا ‏ ‏أَبُو الرَّبِيعِ الزَّهْرَانِيُّ ‏ ‏وَأَبُو كَامِلٍ ‏ ‏قَالَا حَدَّثَنَا ‏ ‏حَمَّادٌ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنِي ‏ ‏زُهَيْرُ بْنُ حَرْبٍ ‏ ‏حَدَّثَنِي ‏ ‏إِسْمَعِيلُ ‏ ‏كِلَاهُمَا ‏ ‏عَنْ ‏ ‏أَيُّوبَ ‏ ‏عَنْ ‏ ‏نَافِعٍ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ عُمَرَ ‏ ‏بِهَذِهِ الْقِصَّةِ وَلَمْ يَذْكُرْ النَّبِيَّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏إِلَّا فِي أَوَّلِ الْحَدِيثِ حِينَ قِيلَ لَهُ يَصُدُّوكَ عَنْ ‏ ‏الْبَيْتِ ‏ ‏قَالَ إِذَنْ أَفْعَلَ كَمَا فَعَلَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏وَلَمْ يَذْكُرْ فِي آخِرِ الْحَدِيثِ هَكَذَا فَعَلَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏كَمَا ذَكَرَهُ ‏ ‏اللَّيْثُ

அப்துல்லாஹ் பின் அஸ்ஸுபைர் (ரலி) அவர்களை ஹஜ்ஜாஜ் முற்றுகை இட்டிருந்தபோது, இப்னு உமர் (ரலி) ஹஜ் செய்ய விரும்பினார்கள். அப்போது அவர்களிடம், “மக்களிடையே போர் மூளும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, உங்களை ஹஜ் செய்யவிடாமல் அவர்கள் தடுப்பார்கள் என நாங்கள் அஞ்சுகிறோம்” என்று சொல்லப்பட்டது.

அதற்கு இப்னு உமர் (ரலி), “உங்களுக்கு அல்லாஹ்வின் தூதரிடம் அழகிய முன்மாதிரி இருக்கிறது. (அவ்வாறு நான் தடுக்கப் பட்டால்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) செய்ததைப் போன்று நானும் செய்வேன். நான் உம்ராச் செய்ய முடிவு செய்து விட்டேன் என்பதற்கு உங்களைச் சாட்சியாக்குகின்றேன்” என்று கூறியபடி புறப்பட்டார்கள்.

‘பைதாஉ’ எனும் இடத்திற்கு வெளியே வந்ததும், “உம்ராவும் ஹஜ்ஜும் (தடுக்கப்படும் விஷயத்தில்) ஒரே மாதிரிதான். நான் உம்ராவுடன் ஹஜ்ஜும் செய்ய முடிவு செய்துவிட்டேன் என்பதற்கு நீங்கள் சாட்சியாக இருங்கள்” என்று கூறினார்கள். மேலும், ‘குதைத்’ எனுமிடத்தில் பலிப் பிராணியை விலைக்கு வாங்கி, அதைத் தம்முடன் கொண்டு சென்றார்கள். பின்னர் உம்ரா, ஹஜ் இரண்டிற்கும் சேர்த்துத் தல்பியாச் சொன்னார்கள்.

மக்காவிற்கு வந்ததும் கஅபாவையும் ஸஃபா-மர்வாவையும் சுற்றி வந்தார்கள். (உம்ரா, ஹஜ் இரண்டிற்கும் சேர்த்து ஏழு சுற்று கொண்ட ஒரு தவாஃபே செய்தார்கள்.) அதைவிடக் கூடுதலாகச் செய்யவில்லை. (துல்ஹஜ் பத்தாவது நாள்வரை) பலியிடவில்லை; தலையை மழிக்கவுமில்லை; முடியைக் குறைக்கவுமில்லை; இஹ்ராமிலிருந்து விடுபடவுமில்லை.

துல்ஹஜ் பத்தாவது நாள் வந்த பிறகே அறுத்துப் பலியிட்டார்கள்; தலையை மழித்துக் கொண்டார்கள். ஆரம்பத்தில் செய்த தவாஃபே உம்ரா, ஹஜ் இரண்டிற்கும் போதும் என்று கருதினார்கள். மேலும், “இவ்வாறே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) செய்தார்கள்” என்றும் குறிப்பிட்டார்கள்.

அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) வழியாக நாஃபிஉ (ரஹ்)


குறிப்பு :

இப்னு ரும்ஹு (ரஹ்) வழி அறிவிப்பில், “… நான் உம்ராவுடன் ஹஜ்ஜும் செய்ய முடிவு செய்துவிட்டேன் என்பதற்கு நீங்கள் சாட்சியாக இருங்கள்” என்பதற்கு பதிலாக “… உங்களைச் சாட்சியாக்குகின்றேன்” என இடம்பெற்றுள்ளது).

அய்யூப் (ரஹ்) வழி அறிவிப்பில், இப்னு உமர் (ரலி) அவர்களிடம் “அவர்கள் உங்களை இறையில்லத்துக்குச் செல்லவிடாமல் தடுப்பார்கள்” என்று சொல்லப்பட்டபோது, “அப்போது நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) செய்ததைப் போன்று செய்வேன் என்று கூறினார்கள்” என இடம் பெற்றுள்ளது.

ஹதீஸின் இறுதியில், “இவ்வாறே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) செய்தார்கள்” என இப்னு உமர் (ரலி) கூறியது இடம்பெறவில்லை.

Share this Hadith: