அத்தியாயம்: 15, பாடம்: 26, ஹதீஸ் எண்: 2166

‏و حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ رُمْحٍ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏اللَّيْثُ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏قُتَيْبَةُ ‏ ‏وَاللَّفْظُ لَهُ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏لَيْثٌ ‏ ‏عَنْ ‏ ‏نَافِعٍ ‏
‏أَنَّ ‏ ‏ابْنَ عُمَرَ ‏ ‏أَرَادَ الْحَجَّ عَامَ نَزَلَ ‏ ‏الْحَجَّاجُ ‏ ‏بِابْنِ الزُّبَيْرِ ‏ ‏فَقِيلَ لَهُ إِنَّ النَّاسَ كَائِنٌ بَيْنَهُمْ قِتَالٌ وَإِنَّا نَخَافُ أَنْ يَصُدُّوكَ فَقَالَ ‏ ” ‏لَقَدْ كَانَ لَكُمْ فِي رَسُولِ اللَّهِ أُسْوَةٌ حَسَنَةٌ “‏ ‏أَصْنَعُ كَمَا صَنَعَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏إِنِّي أُشْهِدُكُمْ أَنِّي قَدْ ‏ ‏أَوْجَبْتُ ‏ ‏عُمْرَةً ثُمَّ خَرَجَ حَتَّى إِذَا كَانَ بِظَاهِرِ ‏ ‏الْبَيْدَاءِ ‏ ‏قَالَ مَا شَأْنُ الْحَجِّ وَالْعُمْرَةِ إِلَّا وَاحِدٌ اشْهَدُوا قَالَ ‏ ‏ابْنُ رُمْحٍ ‏ ‏أُشْهِدُكُمْ أَنِّي قَدْ ‏ ‏أَوْجَبْتُ ‏ ‏حَجًّا مَعَ عُمْرَتِي ‏ ‏وَأَهْدَى ‏ ‏هَدْيًا ‏ ‏اشْتَرَاهُ ‏ ‏بِقُدَيْدٍ ‏ ‏ثُمَّ انْطَلَقَ ‏ ‏يُهِلُّ ‏ ‏بِهِمَا جَمِيعًا حَتَّى قَدِمَ ‏ ‏مَكَّةَ ‏ ‏فَطَافَ ‏ ‏بِالْبَيْتِ ‏ ‏وَبِالصَّفَا ‏ ‏وَالْمَرْوَةِ ‏ ‏وَلَمْ يَزِدْ عَلَى ذَلِكَ وَلَمْ يَنْحَرْ وَلَمْ يَحْلِقْ وَلَمْ ‏ ‏يُقَصِّرْ ‏ ‏وَلَمْ يَحْلِلْ مِنْ شَيْءٍ حَرُمَ مِنْهُ حَتَّى كَانَ ‏ ‏يَوْمُ النَّحْرِ ‏ ‏فَنَحَرَ وَحَلَقَ وَرَأَى أَنْ قَدْ ‏ ‏قَضَى ‏ ‏طَوَافَ الْحَجِّ وَالْعُمْرَةِ بِطَوَافِهِ الْأَوَّلِ وَقَالَ ‏ ‏ابْنُ عُمَرَ ‏ ‏كَذَلِكَ فَعَلَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏
‏حَدَّثَنَا ‏ ‏أَبُو الرَّبِيعِ الزَّهْرَانِيُّ ‏ ‏وَأَبُو كَامِلٍ ‏ ‏قَالَا حَدَّثَنَا ‏ ‏حَمَّادٌ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنِي ‏ ‏زُهَيْرُ بْنُ حَرْبٍ ‏ ‏حَدَّثَنِي ‏ ‏إِسْمَعِيلُ ‏ ‏كِلَاهُمَا ‏ ‏عَنْ ‏ ‏أَيُّوبَ ‏ ‏عَنْ ‏ ‏نَافِعٍ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ عُمَرَ ‏ ‏بِهَذِهِ الْقِصَّةِ وَلَمْ يَذْكُرْ النَّبِيَّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏إِلَّا فِي أَوَّلِ الْحَدِيثِ حِينَ قِيلَ لَهُ يَصُدُّوكَ عَنْ ‏ ‏الْبَيْتِ ‏ ‏قَالَ إِذَنْ أَفْعَلَ كَمَا فَعَلَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏وَلَمْ يَذْكُرْ فِي آخِرِ الْحَدِيثِ هَكَذَا فَعَلَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏كَمَا ذَكَرَهُ ‏ ‏اللَّيْثُ

அப்துல்லாஹ் பின் அஸ்ஸுபைர் (ரலி) அவர்களை ஹஜ்ஜாஜ் முற்றுகை இட்டிருந்தபோது, இப்னு உமர் (ரலி) ஹஜ் செய்ய விரும்பினார்கள். அப்போது அவர்களிடம், “மக்களிடையே போர் மூளும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, உங்களை ஹஜ் செய்யவிடாமல் அவர்கள் தடுப்பார்கள் என நாங்கள் அஞ்சுகிறோம்” என்று சொல்லப்பட்டது.

அதற்கு இப்னு உமர் (ரலி), “உங்களுக்கு அல்லாஹ்வின் தூதரிடம் அழகிய முன்மாதிரி இருக்கிறது. (அவ்வாறு நான் தடுக்கப் பட்டால்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) செய்ததைப் போன்று நானும் செய்வேன். நான் உம்ராச் செய்ய முடிவு செய்து விட்டேன் என்பதற்கு உங்களைச் சாட்சியாக்குகின்றேன்” என்று கூறியபடி புறப்பட்டார்கள்.

‘பைதாஉ’ எனும் இடத்திற்கு வெளியே வந்ததும், “உம்ராவும் ஹஜ்ஜும் (தடுக்கப்படும் விஷயத்தில்) ஒரே மாதிரிதான். நான் உம்ராவுடன் ஹஜ்ஜும் செய்ய முடிவு செய்துவிட்டேன் என்பதற்கு நீங்கள் சாட்சியாக இருங்கள்” என்று கூறினார்கள். மேலும், ‘குதைத்’ எனுமிடத்தில் பலிப் பிராணியை விலைக்கு வாங்கி, அதைத் தம்முடன் கொண்டு சென்றார்கள். பின்னர் உம்ரா, ஹஜ் இரண்டிற்கும் சேர்த்துத் தல்பியாச் சொன்னார்கள்.

மக்காவிற்கு வந்ததும் கஅபாவையும் ஸஃபா-மர்வாவையும் சுற்றி வந்தார்கள். (உம்ரா, ஹஜ் இரண்டிற்கும் சேர்த்து ஏழு சுற்று கொண்ட ஒரு தவாஃபே செய்தார்கள்.) அதைவிடக் கூடுதலாகச் செய்யவில்லை. (துல்ஹஜ் பத்தாவது நாள்வரை) பலியிடவில்லை; தலையை மழிக்கவுமில்லை; முடியைக் குறைக்கவுமில்லை; இஹ்ராமிலிருந்து விடுபடவுமில்லை.

துல்ஹஜ் பத்தாவது நாள் வந்த பிறகே அறுத்துப் பலியிட்டார்கள்; தலையை மழித்துக் கொண்டார்கள். ஆரம்பத்தில் செய்த தவாஃபே உம்ரா, ஹஜ் இரண்டிற்கும் போதும் என்று கருதினார்கள். மேலும், “இவ்வாறே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) செய்தார்கள்” என்றும் குறிப்பிட்டார்கள்.

அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) வழியாக நாஃபிஉ (ரஹ்)


குறிப்பு :

இப்னு ரும்ஹு (ரஹ்) வழி அறிவிப்பில், “… நான் உம்ராவுடன் ஹஜ்ஜும் செய்ய முடிவு செய்துவிட்டேன் என்பதற்கு நீங்கள் சாட்சியாக இருங்கள்” என்பதற்கு பதிலாக “… உங்களைச் சாட்சியாக்குகின்றேன்” என இடம்பெற்றுள்ளது).

அய்யூப் (ரஹ்) வழி அறிவிப்பில், இப்னு உமர் (ரலி) அவர்களிடம் “அவர்கள் உங்களை இறையில்லத்துக்குச் செல்லவிடாமல் தடுப்பார்கள்” என்று சொல்லப்பட்டபோது, “அப்போது நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) செய்ததைப் போன்று செய்வேன் என்று கூறினார்கள்” என இடம் பெற்றுள்ளது.

ஹதீஸின் இறுதியில், “இவ்வாறே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) செய்தார்கள்” என இப்னு உமர் (ரலி) கூறியது இடம்பெறவில்லை.

அத்தியாயம்: 15, பாடம்: 26, ஹதீஸ் எண்: 2165

‏و حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى ‏ ‏حَدَّثَنَا ‏ ‏يَحْيَى وَهُوَ الْقَطَّانُ ‏ ‏عَنْ ‏ ‏عُبَيْدِ اللَّهِ ‏ ‏حَدَّثَنِي ‏ ‏نَافِعٌ ‏ ‏أَنَّ ‏ ‏عَبْدَ اللَّهِ بْنَ عَبْدِ اللَّهِ ‏ ‏وَسَالِمَ بْنَ عَبْدِ اللَّهِ ‏
‏كَلَّمَا ‏ ‏عَبْدَ اللَّهِ ‏ ‏حِينَ نَزَلَ ‏ ‏الْحَجَّاجُ ‏ ‏لِقِتَالِ ‏ ‏ابْنِ الزُّبَيْرِ ‏ ‏قَالَا لَا يَضُرُّكَ أَنْ لَا تَحُجَّ الْعَامَ فَإِنَّا ‏ ‏نَخْشَى أَنْ يَكُونَ بَيْنَ النَّاسِ قِتَالٌ يُحَالُ بَيْنَكَ وَبَيْنَ ‏ ‏الْبَيْتِ ‏ ‏قَالَ ‏ ‏فَإِنْ حِيلَ بَيْنِي وَبَيْنَهُ فَعَلْتُ كَمَا فَعَلَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏وَأَنَا مَعَهُ حِينَ حَالَتْ كُفَّارُ ‏ ‏قُرَيْشٍ ‏ ‏بَيْنَهُ وَبَيْنَ ‏ ‏الْبَيْتِ ‏ ‏أُشْهِدُكُمْ أَنِّي قَدْ ‏ ‏أَوْجَبْتُ ‏ ‏عُمْرَةً فَانْطَلَقَ حَتَّى أَتَى ‏ ‏ذَا الْحُلَيْفَةِ ‏ ‏فَلَبَّى بِالْعُمْرَةِ ثُمَّ قَالَ إِنْ خُلِّيَ سَبِيلِي قَضَيْتُ عُمْرَتِي وَإِنْ حِيلَ بَيْنِي وَبَيْنَهُ فَعَلْتُ كَمَا فَعَلَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏وَأَنَا مَعَهُ ثُمَّ تَلَا ‏ ” ‏لَقَدْ كَانَ لَكُمْ فِي رَسُولِ اللَّهِ أُسْوَةٌ حَسَنَةٌ “‏ ‏ثُمَّ سَارَ حَتَّى إِذَا كَانَ بِظَهْرِ ‏ ‏الْبَيْدَاءِ ‏ ‏قَالَ مَا أَمْرُهُمَا إِلَّا وَاحِدٌ إِنْ حِيلَ بَيْنِي وَبَيْنَ الْعُمْرَةِ حِيلَ بَيْنِي وَبَيْنَ الْحَجِّ أُشْهِدُكُمْ أَنِّي قَدْ ‏ ‏أَوْجَبْتُ ‏ ‏حَجَّةً مَعَ عُمْرَةٍ فَانْطَلَقَ حَتَّى ‏ ‏ابْتَاعَ ‏ ‏بِقُدَيْدٍ ‏ ‏هَدْيًا ‏ ‏ثُمَّ طَافَ لَهُمَا طَوَافًا وَاحِدًا ‏ ‏بِالْبَيْتِ ‏ ‏وَبَيْنَ ‏ ‏الصَّفَا ‏ ‏وَالْمَرْوَةِ ‏ ‏ثُمَّ لَمْ يَحِلَّ مِنْهُمَا حَتَّى حَلَّ مِنْهُمَا بِحَجَّةٍ ‏ ‏يَوْمَ النَّحْرِ ‏
‏و حَدَّثَنَاه ‏ ‏ابْنُ نُمَيْرٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبِي ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عُبَيْدُ اللَّهِ ‏ ‏عَنْ ‏ ‏نَافِعٍ ‏ ‏قَالَ ‏ ‏أَرَادَ ‏ ‏ابْنُ عُمَرَ ‏ ‏الْحَجَّ حِينَ نَزَلَ الْحَجَّاجُ ‏ ‏بِابْنِ الزُّبَيْرِ ‏ ‏وَاقْتَصَّ الْحَدِيثَ ‏ ‏بِمِثْلِ هَذِهِ الْقِصَّةِ وَقَالَ فِي آخِرِ الْحَدِيثِ وَكَانَ يَقُولُ مَنْ جَمَعَ بَيْنَ الْحَجِّ وَالْعُمْرَةِ كَفَاهُ طَوَافٌ وَاحِدٌ وَلَمْ يَحِلَّ حَتَّى يَحِلَّ مِنْهُمَا جَمِيعًا

அப்துல்லாஹ் பின் அஸ்ஸுபைர் (ரலி) அவர்களுக்கு எதிராகப் போரிடுவதற்காக ஹஜ்ஜாஜ் பின் யூஸுஃப் (மக்காவை) முற்றுகையிட்டிருந்த காலகட்டத்தில், (ஹஜ்ஜுக்குச் செல்லத் திட்டமிட்டிருந்த) அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்களிடம் (அவர்களின் புதல்வர்களான) அப்துல்லாஹ் பின் அப்தில்லாஹ் (ரஹ்), ஸாலிம் பின் அப்தில்லாஹ் (ரஹ்) ஆகியோர், “இந்த ஆண்டு நீங்கள் ஹஜ் செய்யாமலிருப்பதால் உங்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்பட்டுவிடப் போவதில்லை. மக்களிடையே (உள் நாட்டுப்) போர் மூண்டு இறையில்லம் கஅபாவிற்குச் செல்ல முடியாமல் நீங்கள் தடுக்கப்படக் கூடும் என்று நாங்கள் அஞ்சுகிறோம்” என்று கூறினர்.

அதற்கு அப்துல்லாஹ் பின் உமர் (ரலி), “அங்குச் செல்ல முடியாமல் நான் தடுக்கப்பட்டால், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் நான் இருந்தபோது, அவர்களைக் குறைஷி இறைமறுப்பாளர்கள் கஅபாவிற்குச் செல்லவிடாமல் தடுத்தவேளையில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) செய்ததைப் போன்றே நானும் செய்வேன்” என்று கூறிவிட்டு, “நான் உம்ராச் செய்ய முடிவு செய்துள்ளேன் என்பதற்கு உங்களைச் சாட்சியாக்குகிறேன்” என்று கூறினார்கள்.

பிறகு புறப்பட்டு ‘துல்ஹுலைஃபா’விற்குச் சென்றதும் உம்ராவிற்காகத் தல்பியாச் சொன்னார்கள். மேலும், “கஅபாவிற்குச் செல்ல எனக்கு வழி விடப்பட்டால் நான் உம்ராச் செய்து முடிப்பேன். அங்குச் செல்ல முடியாமல் நான் தடுக்கப்பட்டால் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் நான் இருந்தபோது அவர்கள் செய்ததைப் போன்று நானும் செய்வேன்” என்று கூறிவிட்டு, “உங்களுக்கு அல்லாஹ்வின் தூதரிடம் அழகிய முன்மாதிரி இருக்கிறது” எனும் (33:21ஆவது) வசனத்தை ஓதிக்காட்டினார்கள்.

தொடர்ந்து பயணம் செய்து ‘பைதாஉ’ எனும் இடத்தை அடைந்தபோது, “உம்ராவிற்குச் செல்ல முடியாமல் நான் தடுக்கப்படுவது, ஹஜ்ஜுக்குச் செல்ல முடியாமல் நான் தடுக்கப்படுவதைப் போன்றுதான். (உம்ரா, ஹஜ்) அவ்விரண்டின் நிலையும் ஒன்றே; நான் உம்ராவுடன் ஹஜ்ஜும் செய்ய முடிவு செய்துள்ளேன் என்பதற்கு உங்களைச் சாட்சியாக்குகிறேன்” என்று கூறிவிட்டுச் சென்று ‘குதைத்’ எனுமிடத்தில் ஒரு பலிப் பிராணியை விலைக்கு வாங்கினார்கள்.

பிறகு உம்ரா, ஹஜ் இரண்டிற்கும் சேர்த்து ஒரேயொரு தடவை (ஏழு முறை) கஅபாவையும், (ஏழு முறை) ஸஃபா-மர்வாவுக்குமிடையேயும் சுற்றி வந்தார்கள். பின்னர் துல்ஹஜ் பத்தாவது நாளன்று ஹஜ்ஜை நிறைவு செய்து, உம்ரா, ஹஜ் ஆகிய இரண்டிலிருந்தும் விடுபட்டார்கள்.

அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) வழியாக நாஃபிஉ (ரஹ்)


குறிப்பு :

நுமைர் (ரஹ்) வழி அறிவிப்பில், “ஹஜ்ஜாஜ் பின் யூஸுஃப், அப்துல்லாஹ் பின் அஸ்ஸுபைர் (ரலி) அவர்களை முற்றுகை இட்டிருந்தபோது, இப்னு உமர் (ரலி) ஹஜ் செய்ய விரும்பினார்கள்” என்று இச்செய்தி துவங்குகிறது. மற்ற விவரங்கள் மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம் பெற்றுள்ளன. அதன் இறுதியில், “உம்ராவையும் ஹஜ்ஜையும் சேர்த்துச் செய்பவருக்கு ஒரு தவாஃபே போதும்” என்று இப்னு உமர் (ரலி) கூறுவார்கள் என்றும், “அவ்விரண்டிலிருந்தும் முழுமையாக விடுபடாத வரை அவர்கள் இஹ்ராமிலிருந்து விடுபடுவதில்லை” என்றும் இடம்பெற்றுள்ளது.

அத்தியாயம்: 15, பாடம்: 26, ஹதீஸ் எண்: 2164

‏و حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ يَحْيَى ‏ ‏قَالَ قَرَأْتُ عَلَى ‏ ‏مَالِكٍ ‏ ‏عَنْ ‏ ‏نَافِعٍ ‏
‏أَنَّ ‏ ‏عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ ‏ ‏رَضِيَ اللَّهُ عَنْهُمَا ‏ ‏خَرَجَ فِي الْفِتْنَةِ مُعْتَمِرًا وَقَالَ ‏ ‏إِنْ صُدِدْتُ عَنْ ‏ ‏الْبَيْتِ ‏ ‏صَنَعْنَا كَمَا صَنَعْنَا مَعَ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَخَرَجَ ‏ ‏فَأَهَلَّ ‏ ‏بِعُمْرَةٍ وَسَارَ حَتَّى إِذَا ‏ ‏ظَهَرَ ‏ ‏عَلَى ‏ ‏الْبَيْدَاءِ ‏ ‏الْتَفَتَ إِلَى أَصْحَابِهِ فَقَالَ مَا أَمْرُهُمَا إِلَّا وَاحِدٌ أُشْهِدُكُمْ أَنِّي قَدْ ‏ ‏أَوْجَبْتُ ‏ ‏الْحَجَّ مَعَ الْعُمْرَةِ فَخَرَجَ حَتَّى إِذَا جَاءَ ‏ ‏الْبَيْتَ ‏ ‏طَافَ بِهِ سَبْعًا وَبَيْنَ ‏ ‏الصَّفَا ‏ ‏وَالْمَرْوَةِ ‏ ‏سَبْعًا لَمْ يَزِدْ عَلَيْهِ وَرَأَى أَنَّهُ مُجْزِئٌ عَنْهُ ‏ ‏وَأَهْدَى

அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) (மக்காவை ஹஜ்ஜாஜ் பின் யூஸுஃப் முற்றுகை இட்டிருந்த) குழப்பமான காலகட்டத்தில் உம்ராவிற்காகப் புறப்பட்டுச் சென்றார்கள்.

அப்போது அவர்கள், “நான் கஅபாவிற்குச் செல்ல முடியாதவாறு தடுக்கப்பட்டால், (ஹுதைபியா உடன்படிக்கையின்போது) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் நாங்கள் செய்ததைப் போன்று செய்வோம்” என்று கூறிவிட்டு, உம்ராவிற்காகத் தல்பியாச் சொல்லிப் புறப்பட்டார்கள்.

‘பைதாஉ’ எனும் இடம் வந்ததும் தம் தோழர்களை நோக்கி, “உம்ராவும் ஹஜ்ஜும் (தடுக்கப்படும்போது இஹ்ராமிலிருந்து விடுபடலாம் என்பதில்) ஒன்றுதான். நான் உம்ராவுடன் ஹஜ் செய்ய முடிவு செய்துவிட்டேன் என்பதற்கு உங்களைச் சாட்சியாக்குகிறேன்” என்று கூறினார்கள்.

பிறகு இறையில்லம் கஅபாவிற்கு வந்து, அதை ஏழு முறை சுற்றி (தவாஃப்) வந்தார்கள்; ஸஃபா-மர்வா இடையேயும் ஏழு முறை சுற்றி (ஸயீ) வந்தார்கள். அதைவிடக் கூடுதலாக்க வில்லை. அதுவே (உம்ராவிற்கும் ஹஜ்ஜுக்கும்) போதுமானதாகும் என்று கருதினார்கள். மேலும், பலிப் பிராணியை அறுத்துப் பலியிட்டார்கள்.

அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) வழியாக நாஃபிஉ (ரஹ்)