و حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ حَدَّثَنَا جَرِيرٌ عَنْ بَيَانٍ عَنْ وَبَرَةَ قَالَ سَأَلَ رَجُلٌ ابْنَ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا أَطُوفُ بِالْبَيْتِ وَقَدْ أَحْرَمْتُ بِالْحَجِّ فَقَالَ وَمَا يَمْنَعُكَ قَالَ إِنِّي رَأَيْتُ ابْنَ فُلَانٍ يَكْرَهُهُ وَأَنْتَ أَحَبُّ إِلَيْنَا مِنْهُ رَأَيْنَاهُ قَدْ فَتَنَتْهُ الدُّنْيَا فَقَالَ وَأَيُّنَا أَوْ أَيُّكُمْ لَمْ تَفْتِنْهُ الدُّنْيَا ثُمَّ
قَالَ رَأَيْنَا رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَحْرَمَ بِالْحَجِّ وَطَافَ بِالْبَيْتِ وَسَعَى بَيْنَ الصَّفَا وَالْمَرْوَةِ
فَسُنَّةُ اللَّهِ وَسُنَّةُ رَسُولِهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَحَقُّ أَنْ تَتَّبِعَ مِنْ سُنَّةِ فُلَانٍ إِنْ كُنْتَ صَادِقًا
இப்னு உமர் (ரலி) அவர்களிடம் ஒருவர், “நான் ஹஜ்ஜுக்காக இஹ்ராம் பூண்டவுடன், கஅபாவைச் சுற்றி வரலாமா?” என்று கேட்டார். அதற்கு இப்னு உமர் (ரலி), “உமக்கு அதிலென்ன ஐயம்?” என்று கேட்டார்கள். அதற்கு அவர், “இன்னாரின் மகன் அவ்வாறு (தவாஃப்) செய்வதை வெறுப்பதாக நினைக்கிறேன். ஆனால், அவரைவிட நீங்களே எங்கள் அன்புக்குரியவர். அவர் உலகக் குழப்பத்தின் சோதனையில் சிக்கிக் கொண்டிருக்கின்றார்” என்று கூறினார்.
அதற்கு இப்னு உமர் (ரலி), “நம்மில் / உங்களில் யாரைத்தான் இவ்வுலகம் சோதிக்காமல் விட்டது?” என்று கூறிவிட்டுப் பின்னர், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) ஹஜ்ஜுக்காக இஹ்ராம் பூண்டவுடன் கஅபாவைச் சுற்றி வந்ததையும் ஸஃபா-மர்வாவுக்கிடையே ஓடி (ஸயீ) வந்ததையும் நாங்கள் கண்டோம்.
நீர் (அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைப் பின்பற்றுவதில்) உண்மையாளராய் இருந்தால், எவருடைய வழிமுறையையும்விட அல்லாஹ்வின் நெறியும் அவனுடைய தூதரின் வழிமுறையும்தாம் பின்பற்றுவதற்கு மிகவும் தகுதியானவையாகும்” என்று கூறினார்கள்.
அறிவிப்பாளர் : இபுனு உமர் (ரலி) வழியாக வபரா பின் அப்திர் ரஹ்மான் (ரஹ்)