அத்தியாயம்: 15, பாடம்: 28, ஹதீஸ் எண்: 2170

‏حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ يَحْيَى ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏عَبْثَرٌ ‏ ‏عَنْ ‏ ‏إِسْمَعِيلَ بْنِ أَبِي خَالِدٍ ‏ ‏عَنْ ‏ ‏وَبَرَةَ ‏ ‏قَالَ ‏ ‏كُنْتُ جَالِسًا عِنْدَ ‏ ‏ابْنِ عُمَرَ ‏ ‏فَجَاءَهُ رَجُلٌ فَقَالَ أَيَصْلُحُ لِي أَنْ أَطُوفَ ‏ ‏بِالْبَيْتِ ‏ ‏قَبْلَ أَنْ آتِيَ الْمَوْقِفَ فَقَالَ نَعَمْ فَقَالَ فَإِنَّ ‏ ‏ابْنَ عَبَّاسٍ ‏ ‏يَقُولُ لَا تَطُفْ ‏ ‏بِالْبَيْتِ ‏ ‏حَتَّى تَأْتِيَ الْمَوْقِفَ ‏
‏فَقَالَ ‏ ‏ابْنُ عُمَرَ ‏ ‏فَقَدْ ‏ ‏حَجَّ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَطَافَ ‏ ‏بِالْبَيْتِ ‏ ‏قَبْلَ أَنْ يَأْتِيَ الْمَوْقِفَ ‏
‏فَبِقَوْلِ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏أَحَقُّ أَنْ تَأْخُذَ أَوْ بِقَوْلِ ‏ ‏ابْنِ عَبَّاسٍ ‏ ‏إِنْ كُنْتَ صَادِقًا

நான் (ஒரு முறை) இப்னு உமர் (ரலி) அவர்களுடன் அமர்ந்திருந்தேன். அப்போது அவர்களிடம் ஒருவர் வந்து, “நான் (ஹஜ்ஜின்போது) அரஃபாவுக்குச் செல்வதற்கு முன் கஅபாவைச் சுற்றிவருவது சரிதானா?” என்று கேட்டார்.

அதற்கு இப்னு உமர் (ரலி), “ஆம் (சரிதான்)” என்றார்கள். அதற்கு அவர், “நீ அரஃபாவுக்குச் செல்வதற்கு முன் கஅபாவைச் சுற்றிவராதே! என்று இப்னு அப்பாஸ் (ரலி) கூறியிருக்கின்றாரே?” என்று கேட்டார்.

இப்னு உமர் (ரலி), “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஹஜ் செய்துள்ளார்கள். அப்போது அவர்கள் அரஃபாவுக்குச் செல்வதற்கு முன் கஅபாவைச் சுற்றினார்கள். நீர் (அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைப் பின்பற்றுவதில்) உண்மையாளராய் இருந்தால், நீர் கடைப்பிடிப்பதற்குத் தகுதியானது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் சொல்லா? அல்லது இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களின் சொல்லா?” என்று கேட்டார்கள்.

அறிவிப்பாளர் : இபுனு உமர் (ரலி) வழியாக வபரா பின் அப்திர் ரஹ்மான் (ரஹ்)

Share this Hadith: