அத்தியாயம்: 15, பாடம்: 29, ஹதீஸ் எண்: 2173

‏حَدَّثَنِي ‏ ‏هَارُونُ بْنُ سَعِيدٍ الْأَيْلِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏ابْنُ وَهْبٍ ‏ ‏أَخْبَرَنِي ‏ ‏عَمْرٌو وَهُوَ ابْنُ الْحَارِثِ ‏ ‏عَنْ ‏ ‏مُحَمَّدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ ‏ ‏أَنَّ رَجُلًا مِنْ أَهْلِ ‏ ‏الْعِرَاقِ ‏ ‏قَالَ لَهُ سَلْ لِي ‏ ‏عُرْوَةَ بْنَ الزُّبَيْرِ ‏ ‏عَنْ رَجُلٍ يُهِلُّ بِالْحَجِّ فَإِذَا طَافَ ‏ ‏بِالْبَيْتِ ‏ ‏أَيَحِلُّ أَمْ لَا فَإِنْ قَالَ لَكَ لَا يَحِلُّ فَقُلْ لَهُ إِنَّ رَجُلًا يَقُولُ ذَلِكَ ‏
‏قَالَ ‏ ‏فَسَأَلْتُهُ فَقَالَ ‏ ‏لَا يَحِلُّ مَنْ ‏ ‏أَهَلَّ ‏ ‏بِالْحَجِّ إِلَّا بِالْحَجِّ قُلْتُ فَإِنَّ رَجُلًا كَانَ يَقُولُ ذَلِكَ قَالَ بِئْسَ مَا قَالَ فَتَصَدَّانِي الرَّجُلُ فَسَأَلَنِي فَحَدَّثْتُهُ فَقَالَ فَقُلْ لَهُ فَإِنَّ رَجُلًا كَانَ يُخْبِرُ أَنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَدْ فَعَلَ ذَلِكَ وَمَا شَأْنُ ‏ ‏أَسْمَاءَ ‏ ‏وَالزُّبَيْرِ ‏ ‏قَدْ فَعَلَا ذَلِكَ قَالَ فَجِئْتُهُ فَذَكَرْتُ لَهُ ذَلِكَ فَقَالَ مَنْ هَذَا فَقُلْتُ لَا أَدْرِي قَالَ فَمَا بَالُهُ لَا يَأْتِينِي بِنَفْسِهِ يَسْأَلُنِي أَظُنُّهُ عِرَاقِيًّا قُلْتُ لَا أَدْرِي قَالَ فَإِنَّهُ قَدْ كَذَبَ قَدْ حَجَّ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَأَخْبَرَتْنِي ‏ ‏عَائِشَةُ ‏ ‏رَضِيَ اللَّهُ عَنْهَا ‏ ‏أَنَّ أَوَّلَ شَيْءٍ بَدَأَ بِهِ حِينَ قَدِمَ ‏ ‏مَكَّةَ ‏ ‏أَنَّهُ تَوَضَّأَ ثُمَّ طَافَ ‏ ‏بِالْبَيْتِ ‏
‏ثُمَّ حَجَّ ‏ ‏أَبُو بَكْرٍ ‏ ‏فَكَانَ أَوَّلَ شَيْءٍ بَدَأَ بِهِ الطَّوَافُ ‏ ‏بِالْبَيْتِ ‏ ‏ثُمَّ لَمْ يَكُنْ غَيْرُهُ ‏ ‏ثُمَّ ‏ ‏عُمَرُ ‏ ‏مِثْلُ ذَلِكَ ثُمَّ حَجَّ ‏ ‏عُثْمَانُ ‏ ‏فَرَأَيْتُهُ أَوَّلُ شَيْءٍ بَدَأَ بِهِ الطَّوَافُ ‏ ‏بِالْبَيْتِ ‏ ‏ثُمَّ لَمْ يَكُنْ غَيْرُهُ ثُمَّ ‏ ‏مُعَاوِيَةُ ‏ ‏وَعَبْدُ اللَّهِ بْنُ عُمَرَ ‏ ‏ثُمَّ حَجَجْتُ مَعَ أَبِي ‏ ‏الزُّبَيْرِ بْنِ الْعَوَّامِ ‏ ‏فَكَانَ أَوَّلَ شَيْءٍ بَدَأَ بِهِ الطَّوَافُ ‏ ‏بِالْبَيْتِ ‏ ‏ثُمَّ لَمْ يَكُنْ غَيْرُهُ ثُمَّ رَأَيْتُ ‏ ‏الْمُهَاجِرِينَ ‏ ‏وَالْأَنْصَارَ ‏ ‏يَفْعَلُونَ ذَلِكَ ثُمَّ لَمْ يَكُنْ غَيْرُهُ ثُمَّ آخِرُ مَنْ رَأَيْتُ فَعَلَ ذَلِكَ ‏ ‏ابْنُ عُمَرَ ‏ ‏ثُمَّ لَمْ يَنْقُضْهَا بِعُمْرَةٍ وَهَذَا ‏ ‏ابْنُ عُمَرَ ‏ ‏عِنْدَهُمْ أَفَلَا يَسْأَلُونَهُ وَلَا أَحَدٌ مِمَّنْ مَضَى مَا كَانُوا يَبْدَءُونَ بِشَيْءٍ حِينَ يَضَعُونَ أَقْدَامَهُمْ أَوَّلَ مِنْ الطَّوَافِ ‏ ‏بِالْبَيْتِ ‏ ‏ثُمَّ لَا يَحِلُّونَ وَقَدْ رَأَيْتُ ‏ ‏أُمِّي ‏ ‏وَخَالَتِي حِينَ تَقْدَمَانِ لَا تَبْدَأَانِ بِشَيْءٍ أَوَّلَ مِنْ ‏ ‏الْبَيْتِ ‏ ‏تَطُوفَانِ بِهِ ثُمَّ لَا تَحِلَّانِ وَقَدْ أَخْبَرَتْنِي أُمِّي أَنَّهَا أَقْبَلَتْ هِيَ ‏ ‏وَأُخْتُهَا ‏ ‏وَالزُّبَيْرُ ‏ ‏وَفُلَانٌ وَفُلَانٌ بِعُمْرَةٍ قَطُّ فَلَمَّا مَسَحُوا الرُّكْنَ حَلُّوا وَقَدْ كَذَبَ فِيمَا ذَكَرَ مِنْ ذَلِكَ

இராக்வாசிகளில் ஒருவர் என்னிடம் வந்து, “நீங்கள் உர்வா பின் அஸ்ஸுபைர் (ரஹ்) அவர்களிடம், ‘ஒருவர் ஹஜ்ஜுக்காக இஹ்ராம் பூண்டு, (மக்காவிற்கு வந்ததும்) கஅபாவைச் சுற்றி (தவாஃபுல் குதூம்) வந்த பிறகு அவர் இஹ்ராமிலிருந்து விடுபட்டுக்கொள்ளலாமா, கூடாதா?’ என்று கேளுங்கள். உர்வா (ரஹ்) ‘இஹ்ராமிலிருந்து விடுபடக்கூடது’ என்று பதிலளித்தால், ‘விடுபடலாம் என ஒருவர் கூறுகிறாரே?’ என்று (மீண்டும்) கேளுங்கள்” என்றார்.

அவ்வாறே நான் உர்வா (ரஹ்) அவர்களிடம் (சென்று) கேட்டபோது, “ஹஜ்ஜுக்காக இஹ்ராம் பூண்டவர் ஹஜ்ஜை முடிக்காமல் இஹ்ராமிலிருந்து விடுபடலாகாது” என்று விடையளித்தார்கள். நான் “அப்படியானால், விடுபடலாம் என ஒருவர் கூறுகிறாரே?” என்று கேட்டேன். அதற்கு உர்வா (ரஹ்), “அவர் சொன்னது தவறு” என்றார்கள்.

பின்னர் அந்த இராக்வாசி என் எதிரே வந்து அ(வர் கூறியனுப்பிய)து பற்றி என்னிடம் கேட்டார். அ(ப்போது உர்வா (ரஹ்) கூறிய)தை நான் அவரிடம் தெரிவித்தேன். அதற்கு அவர் என்னிடம், “அப்படியானால் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவ்வாறு செய்துள்ளதாக அந்த ஒருவர் தெரிவித்து வந்தாரே? அஸ்மா (ரலி), ஸுபைர் (ரலி) ஆகியோரின் நிலை என்ன? அவர்களும் அவ்வாறு செய்துள்ளனரே?’ என்று உர்வா (ரஹ்) அவர்களிடம் நீங்கள் கேளுங்கள்” என்றார்.

அவ்வாறே நான் (மீண்டும்) உர்வா (ரஹ்) அவர்களிடம் வந்து அதைத் தெரிவித்தேன். அப்போது உர்வா (ரஹ்), “யார் அவர்?” என்று கேட்டார்கள். நான், “எனக்குத் தெரியாது” என்றேன். அதற்கு உர்வா (ரஹ்), “என்னிடம் நேரடியாக வந்து கேட்பதில் அவருக்கு என்ன பிரச்சினை? அவர் இராக்வாசியாக இருக்கக்கூடும் என்றே நான் கருதுகிறேன்” என்றார்கள். நான், “எனக்குத் தெரியாது” என்று (மீண்டும்) சொன்னேன்.

உர்வா (ரஹ்), “அவர் பொய்யுரைத்து விட்டார்; அல்லாஹ்வின் தூதர் (ஸல்) செய்த ஹஜ்ஜைப் பற்றி ஆயிஷா (ரலி) என்னிடம் தெரிவித்துள்ளார்கள்; அல்லாஹ்வின் தூதர் (ஸல்) மக்காவிற்கு வந்ததும் முதல் வேலையாக உளூச் செய்தார்கள். பிறகு கஅபாவைச் சுற்றி (தவாஃபுல் குதூம்) வந்தார்கள்.

அபூபக்ரு (ரலி) ஹஜ்ஜுக்கு வந்தபோது, முதல் வேலையாக கஅபாவைச் சுற்றிவந்தார்கள். பின்னர் அதைத் தவிர வேறெதுவும் நிகழவில்லை. உமர் (ரலி) ஹஜ்ஜுக்கு வந்தபோதும், அ(பூபக்ரு (ரலி) செய்த)தைப் போன்றே செய்தார்கள். பின்னர் உஸ்மான் (ரலி) ஹஜ் செய்தார்கள். அவர்கள் (மக்காவிற்கு வந்ததும்) முதல் வேலையாக கஅபாவைச் சுற்றி வந்ததையே நான் கண்டேன்; பின்னர் அதைத் தவிர (ஹஜ்ஜை உம்ராவாக மாற்றுதல், ஹஜ்ஜோடு உம்ராவைச் சேர்த்தல் போன்ற) வேறெதுவும் நிகழவில்லை.

முஆவியா (ரலி), அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) ஆகியோரும் (அவ்வாறே செய்தனர்.) பின்னர் என் தந்தை ஸுபைர் பின் அல்அவ்வாம் (ரலி) அவர்களுடன் நான் ஹஜ் செய்தேன். அவர்களின் முதல் வேலையாக இருந்ததும் கஅபாவைச் சுற்றுவதாகத்தான் இருந்தது. அதைத் தவிர வேறொன்றும் நடக்கவில்லை. பின்னர் முஹாஜிர்களும் அன்ஸாரிகளும் அவ்வாறு செய்வதையே நான் கண்டேன்; அதைத் தவிர வேறெதுவும் நிகழவில்லை.

அவ்வாறு செய்தவர்களில் இறுதியானவராக இப்னு உமர் (ரலி) அவர்களையே நான் கண்டேன். அவர்கள் ஹஜ்ஜை உம்ராவாக மாற்றவில்லை. இதோ அவர்களுடன் இப்னு உமர் (ரலி) அவர்களே இருக்கிறார்கள். அவர்களிடமே மக்கள் கேட்க வேண்டியதுதானே! முன்னோர்களில் எவரும் தம் பாதங்களை (மக்காவில்) பதித்ததும் முதல் வேலையாக கஅபாவைச் சுற்றிவராமல் இருந்ததில்லை. பின்னர் (ஹஜ்ஜை முடிக்காமல்) இஹ்ராமிலிருந்து விடுபடமாட்டார்கள். என் தாயார் (அஸ்மா -ரலி), என் சிறிய தாயார் (ஆயிஷா -ரலி) ஆகியோர் (மக்காவிற்கு) வந்ததும் முதல் வேலையாக இறையில்லம் கஅபாவைச் சுற்றிவராமல் வேறெதையும் தொடங்கமாட்டார்கள். பின்னர் (ஹஜ்ஜை முடிக்கும்வரை) இஹ்ராமிலிருந்து விடுபடாமல் இருப்பார்கள்.

என் தாயார் (அஸ்மா -ரலி) என்னிடம், “நானும் என் சகோதரி (ஆயிஷா -ரலி) அவர்களும் (உன் தந்தை) ஸுபைர் (ரலி) அவர்களும் மற்றும் இன்னின்னவரும் உம்ராவிற்குச் சென்றபோது ஹஜருல் அஸ்வதைத் தொட்டதும் (அதாவது தவாஃபும் ஸயீயும் செய்து முடித்ததும்) இஹ்ராமிலிருந்து விடுபட்டுவிட்டோம்” என்று தெரிவித்தார்கள். (எனவே இராக்வாசியான) அந்த மனிதர் பொய்யான தகவலையே குறிப்பிட்டுள்ளார்” என்று உர்வா (ரஹ்) விடையளித்தார்கள்.

அறிவிப்பாளர் : அஸ்மா (ரலி), உர்வா (ரஹ்) வழியாக முஹம்மது பின் அப்திர் ரஹ்மான் (ரஹ்)

Share this Hadith: