حَدَّثَنَا إِسْحَقُ بْنُ إِبْرَاهِيمَ أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ بَكْرٍ أَخْبَرَنَا ابْنُ جُرَيْجٍ ح و حَدَّثَنِي زُهَيْرُ بْنُ حَرْبٍ وَاللَّفْظُ لَهُ حَدَّثَنَا رَوْحُ بْنُ عُبَادَةَ حَدَّثَنَا ابْنُ جُرَيْجٍ حَدَّثَنِي مَنْصُورُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ عَنْ أُمِّهِ صَفِيَّةَ بِنْتِ شَيْبَةَ عَنْ أَسْمَاءَ بِنْتِ أَبِي بَكْرٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا قَالَتْ
خَرَجْنَا مُحْرِمِينَ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَنْ كَانَ مَعَهُ هَدْيٌ فَلْيَقُمْ عَلَى إِحْرَامِهِ وَمَنْ لَمْ يَكُنْ مَعَهُ هَدْيٌ فَلْيَحْلِلْ فَلَمْ يَكُنْ مَعِي هَدْيٌ فَحَلَلْتُ وَكَانَ مَعَ الزُّبَيْرِ هَدْيٌ فَلَمْ يَحْلِلْ قَالَتْ فَلَبِسْتُ ثِيَابِي ثُمَّ خَرَجْتُ فَجَلَسْتُ إِلَى الزُّبَيْرِ فَقَالَ قُومِي عَنِّي فَقُلْتُ أَتَخْشَى أَنْ أَثِبَ عَلَيْكَ
و حَدَّثَنِي عَبَّاسُ بْنُ عَبْدِ الْعَظِيمِ الْعَنْبَرِيُّ حَدَّثَنَا أَبُو هِشَامٍ الْمُغِيرَةُ بْنُ سَلَمَةَ الْمَخْزُومِيُّ حَدَّثَنَا وُهَيْبٌ حَدَّثَنَا مَنْصُورُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ عَنْ أُمِّهِ عَنْ أَسْمَاءَ بِنْتِ أَبِي بَكْرٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا قَالَتْ قَدِمْنَا مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مُهِلِّينَ بِالْحَجِّ ثُمَّ ذَكَرَ بِمِثْلِ حَدِيثِ ابْنِ جُرَيْجٍ غَيْرَ أَنَّهُ قَالَ فَقَالَ اسْتَرْخِي عَنِّي اسْتَرْخِي عَنِّي فَقُلْتُ أَتَخْشَى أَنْ أَثِبَ عَلَيْكَ
நாங்கள் இஹ்ராம் பூண்டவர்களாக(ஹஜ்ஜுக்கு)ப் புறப்பட்டோம். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “தம்முடன் பலிப் பிராணியைக் கொண்டு வந்திருப்பவர் தமது இஹ்ராமிலேயே நீடிக்கட்டும்; பலிப் பிராணியைக் கொண்டு வராதவர் இஹ்ராமிலிருந்து விடுபடட்டும்” என்று சொன்னார்கள்.
அப்போது என்னுடன் பலிப் பிராணி இல்லாததால் நான் இஹ்ராமிலிருந்து விடுபட்டு விட்டேன். (என் கணவர்) ஸுபைர் (ரலி) அவர்களுடன் பலிப் பிராணி இருந்ததால் அவர்கள் இஹ்ராமிலிருந்து விடுபட வில்லை.
அப்போது நான் எனது ஆடையை அணிந்து புறப்பட்டேன்; ஸுபைர் (ரலி) அருகில் சென்றமர்ந்தேன். உடனே அவர்கள், “என்னை விட்டு எழுந்து (சென்று) விடு” என்றார்கள். அதற்கு நான், “உங்களை வீழ்த்தி விடுவேன் என அஞ்சுகின்றீர்களா?” என்று (கேலியாகக்) கேட்டேன்.
அறிவிப்பாளர் : அஸ்மா பின்த்தி அபீபக்ரு (ரலி)
குறிப்பு :
வுஹைப் (ரஹ்) வழி அறிவிப்பு, “நாங்கள் ஹஜ்ஜுக்காக இஹ்ராம் பூண்டவர்களாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் புறப்பட்டோம் …” என்று தொடங்குகிறது. மற்ற விவரங்கள் மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம்பெற்றுள்ளன. ஆனால், (“என்னிடமிருந்து எழுந்துவிடு” என்பதற்குப் பதிலாக) “என்னைவிட்டு விலகிச் சென்றுவிடு” என்று ஸுபைர் (ரலி) கூறினார்கள். அதற்கு நான், “உங்களை வீழ்த்தி விடுவேன் என அஞ்சுகின்றீர்களா? என்று (கேலியாகக்) கேட்டேன்” என்பதாக இடம் பெற்றுள்ளது.