அத்தியாயம்: 15, பாடம்: 30, ஹதீஸ் எண்: 2176

‏حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ حَاتِمٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏رَوْحُ بْنُ عُبَادَةَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏شُعْبَةُ ‏ ‏عَنْ ‏ ‏مُسْلِمٍ الْقُرِّيِّ ‏ ‏قَالَ ‏ ‏سَأَلْتُ ‏
‏ابْنَ عَبَّاسٍ ‏ ‏رَضِيَ اللَّهُ عَنْهُمَا ‏ ‏عَنْ ‏ ‏مُتْعَةِ الْحَجِّ ‏ ‏فَرَخَّصَ فِيهَا وَكَانَ ‏ ‏ابْنُ الزُّبَيْرِ ‏ ‏يَنْهَى عَنْهَا ‏
‏فَقَالَ ‏ ‏هَذِهِ ‏ ‏أُمُّ ابْنِ الزُّبَيْرِ ‏ ‏تُحَدِّثُ ‏
‏أَنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏رَخَّصَ فِيهَا فَادْخُلُوا عَلَيْهَا فَاسْأَلُوهَا قَالَ فَدَخَلْنَا عَلَيْهَا فَإِذَا امْرَأَةٌ
ضَخْمَةٌ عَمْيَاءُ فَقَالَتْ قَدْ رَخَّصَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فِيهَا ‏
‏و حَدَّثَنَاه ‏ ‏ابْنُ الْمُثَنَّى ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَبْدُ الرَّحْمَنِ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَاه ‏ ‏ابْنُ بَشَّارٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدٌ يَعْنِي ابْنَ
جَعْفَرٍ ‏ ‏جَمِيعًا ‏ ‏عَنْ ‏ ‏شُعْبَةَ ‏ ‏بِهَذَا الْإِسْنَادِ ‏ ‏فَأَمَّا ‏ ‏عَبْدُ الرَّحْمَنِ ‏ ‏فَفِي حَدِيثِهِ ‏ ‏الْمُتْعَةُ ‏ ‏وَلَمْ يَقُلْ ‏
‏مُتْعَةُ الْحَجِّ ‏ ‏وَأَمَّا ‏ ‏ابْنُ جَعْفَرٍ ‏ ‏فَقَالَ قَالَ ‏ ‏شُعْبَةُ ‏ ‏قَالَ ‏ ‏مُسْلِمٌ ‏ ‏لَا أَدْرِي ‏ ‏مُتْعَةُ الْحَجِّ ‏ ‏أَوْ ‏ ‏مُتْعَةُ
النِّسَاءِ

நான் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம், தமத்துஉ ஹஜ் (செய்வது) பற்றிக் கேட்டேன். அதற்கு அவர்கள் அனுமதி அளித்தார்கள். இப்னுஸ் ஸுபைர் (ரலி) அதற்குத் தடை விதிப்பவர்களாக இருந்தார்கள். எனவே, இப்னு அப்பாஸ் (ரலி),
“இதோ இப்னுஸ் ஸுபைர் (ரலி) அவர்களின் தாயார் (அஸ்மா ரலி)), ‘அல்லாஹ்வின் தூதர் (ஸல்) தமத்துஉ செய்யத் தம்மை அனுமதித்தார்கள்’ எனக் கூறுகின்றார். ஆகவே, அவரிடம் சென்று அதைப் பற்றிக் கேளுங்கள்” என்றார்கள்.

அவ்வாறே அவர்களிடம் நாங்கள் சென்றோம். அவர்கள் கனத்த உடலுடைய, கண் பார்வையற்ற பெண்மணியாக இருந்தார்கள். அவர்கள், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) தமத்துஉ செய்வதற்கு அனுமதியளித்தார்கள்” எனக் குறிப்பிட்டார்கள்.

அறிவிப்பாளர் : இப்னு அப்பாஸ் (ரலி) வழியாக முஸ்லிம் அல்குர்ரீ (ரஹ்)


குறிப்பு :

இபுனு பஷ்ஷார் (ரஹ்) வழி அறிவிப்பில், தமத்துஉ எனும் சொல்தான் காணப்படுகிறது. ‘தமத்துஉ முறை ஹஜ்’ என இடம் பெறவில்லை. முஹம்மது பின் ஜஅஃபர் (ரஹ்) வழி அறிவிப்பில், “இப்னு அப்பாஸ் (ரலி) ‘முத்அத்துல் ஹஜ்’ பற்றிக் கூறினார்களா? அல்லது ‘முத்அத்துந் நிஸா’ (இடைக்காலத் திருமணம்) பற்றிக் கூறினார்களா? என எனக்குத் தெரியவில்லை” என்று முஸ்லிம் அல்குர்ரீ (ரஹ்) கூறினார்கள் என இடம்பெற்றுள்ளது.

Share this Hadith: