حَدَّثَنَا خَلَفُ بْنُ هِشَامٍ وَالْمُقَدَّمِيُّ وَأَبُو كَامِلٍ وَقُتَيْبَةُ بْنُ سَعِيدٍ كُلُّهُمْ عَنْ حَمَّادٍ قَالَ خَلَفٌ حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ عَنْ عَاصِمٍ الْأَحْوَلِ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ سَرْجِسَ قَالَ:
رَأَيْتُ الْأَصْلَعَ يَعْنِي عُمَرَ بْنَ الْخَطَّابِ يُقَبِّلُ الْحَجَرَ وَيَقُولُ وَاللَّهِ إِنِّي لَأُقَبِّلُكَ وَإِنِّي أَعْلَمُ أَنَّكَ حَجَرٌ وَأَنَّكَ لَا تَضُرُّ وَلَا تَنْفَعُ وَلَوْلَا أَنِّي رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَبَّلَكَ مَا قَبَّلْتُكَ
وَفِي رِوَايَةِ الْمُقَدَّمِيِّ وَأَبِي كَامِلٍ رَأَيْتُ الْأُصَيْلِعَ
உமர் (ரலி) ஹஜருல் அஸ்வதை முத்தமிடும்போது, “அல்லாஹ்வின் மீதாணை! நீ தீமையோ நன்மையோ செய்ய முடியாத ஒரு கல் என்பதை நான் அறிந்து கொண்டே உன்னை முத்தமிடுகின்றேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) உன்னை முத்தமிடுவதை நான் கண்டிராவிட்டால் உன்னை முத்தமிட்டிருக்கமாட்டேன்” என்று கூறியதை நான் பார்த்தேன்.
அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் சர்ஜிஸ் (ரலி)
குறிப்பு :
இந்த ஹதீஸில் உமர் (ரலி) அவர்களை ‘வழுக்கைத் தலையர்’ என்று அறிவிப்பாளர் குறிப்பிடுகின்றார்.
முஹம்மத் பின் அபீபக்ரு அல்முகத்தமீ (ரஹ்), அபூகாமில் (ரஹ்) ஆகியோரது அறிவிப்பில் உமர் (ரலி), ‘சின்ன வழுக்கைத் தலையர்’ என்று குறிப்பிடப்படுகின்றார்.