அத்தியாயம்: 15, பாடம்: 41, ஹதீஸ் எண்: 2232

‏و حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏وَزُهَيْرُ بْنُ حَرْبٍ ‏ ‏جَمِيعًا ‏ ‏عَنْ ‏ ‏وَكِيعٍ ‏ ‏قَالَ ‏ ‏أَبُو بَكْرٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏وَكِيعٌ ‏ ‏عَنْ ‏ ‏سُفْيَانَ ‏ ‏عَنْ ‏ ‏إِبْرَاهِيمَ بْنِ عَبْدِ الْأَعْلَى ‏ ‏عَنْ ‏ ‏سُوَيْدِ بْنِ غَفَلَةَ ‏ ‏قَالَ

‏رَأَيْتُ ‏ ‏عُمَرَ ‏ ‏قَبَّلَ الْحَجَرَ وَالْتَزَمَهُ وَقَالَ رَأَيْتُ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏بِكَ ‏ ‏حَفِيًّا 

‏و حَدَّثَنِيهِ ‏ ‏مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَبْدُ الرَّحْمَنِ ‏ ‏عَنْ ‏ ‏سُفْيَانَ ‏ ‏بِهَذَا الْإِسْنَادِ قَالَ ‏ ‏وَلَكِنِّي رَأَيْتُ ‏ ‏أَبَا الْقَاسِمِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏بِكَ ‏ ‏حَفِيًّا ‏ ‏وَلَمْ يَقُلْ وَالْتَزَمَهُ

உமர் (ரலி) ஹஜருல் அஸ்வதில் முகம் பதித்து முத்தமிட்டு, “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) உன்னிடம் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்ததை நான் கண்டேன். (எனவே உன்னை நான் முத்தமிடுகிறேன்)” என்றார்கள்.

அறிவிப்பாளர் : உமர் (ரலி) வழியாக ஸுவைத் பின் ஃகஃபலா (ரஹ்)


குறிப்பு :

முஹம்மது பின் முஸன்னா (ரஹ்) வழி அறிவிப்பில், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை ‘அபுல் காஸிம்’ என்று உமர் (ரலி) குறிப்பிட்டார்கள் என்று இடம் பெற்றுள்ளது; “முகம் பதித்தார்கள்” எனும் குறிப்பு இடம்பெறவில்லை.

அத்தியாயம்: 15, பாடம்: 41, ஹதீஸ் எண்: 2231

‏و حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ يَحْيَى ‏ ‏وَأَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏وَزُهَيْرُ بْنُ حَرْبٍ ‏ ‏وَابْنُ نُمَيْرٍ ‏ ‏جَمِيعًا ‏ ‏عَنْ ‏ ‏أَبِي مُعَاوِيَةَ ‏ ‏قَالَ ‏ ‏يَحْيَى ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏أَبُو مُعَاوِيَةَ ‏ ‏عَنْ ‏ ‏الْأَعْمَشِ ‏ ‏عَنْ ‏ ‏إِبْرَاهِيمَ ‏ ‏عَنْ ‏ ‏عَابِسِ بْنِ رَبِيعَةَ ‏ ‏قَالَ

‏رَأَيْتُ ‏ ‏عُمَرَ ‏ ‏يُقَبِّلُ الْحَجَرَ وَيَقُولُ ‏ ‏إِنِّي لَأُقَبِّلُكَ وَأَعْلَمُ أَنَّكَ حَجَرٌ وَلَوْلَا أَنِّي رَأَيْتُ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يُقَبِّلُكَ لَمْ أُقَبِّلْكَ

உமர் (ரலி) ஹஜருல் அஸ்வதை முத்தமிட்டுவிட்டு, “நீ ஒரு கல் என்பதை நான் அறிந்துகொண்டே உன்னை முத்தமிடுகின்றேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) உன்னை முத்தமிடுவதை நான் கண்டிராவிட்டால் உன்னை முத்தமிட்டிருக்கமாட்டேன்” என்று கூறியதை நான் கண்டேன்.

அறிவிப்பாளர் : உமர் (ரலி) வழியாக ஆபிஸ் பின் ரபீஆ (ரஹ்)

அத்தியாயம்: 15, பாடம்: 41, ஹதீஸ் எண்: 2230

‏حَدَّثَنَا‏ ‏خَلَفُ بْنُ هِشَامٍ ‏وَالْمُقَدَّمِيُّ ‏وَأَبُو كَامِلٍ ‏وَقُتَيْبَةُ بْنُ سَعِيدٍ ‏كُلُّهُمْ ‏عَنْ ‏‏حَمَّادٍ ‏قَالَ ‏خَلَفٌ ‏حَدَّثَنَا ‏حَمَّادُ بْنُ زَيْدٍ ‏عَنْ ‏عَاصِمٍ الْأَحْوَلِ ‏عَنْ ‏عَبْدِ اللَّهِ بْنِ سَرْجِسَ ‏قَالَ: ‏

‏رَأَيْتُ الْأَصْلَعَ‏ ‏يَعْنِي ‏عُمَرَ بْنَ الْخَطَّابِ ‏يُقَبِّلُ الْحَجَرَ وَيَقُولُ وَاللَّهِ ‏إِنِّي لَأُقَبِّلُكَ وَإِنِّي أَعْلَمُ أَنَّكَ حَجَرٌ وَأَنَّكَ لَا تَضُرُّ وَلَا تَنْفَعُ وَلَوْلَا أَنِّي رَأَيْتُ رَسُولَ اللَّهِ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏قَبَّلَكَ مَا قَبَّلْتُكَ

‏وَفِي رِوَايَةِ ‏ ‏الْمُقَدَّمِيِّ ‏ ‏وَأَبِي كَامِلٍ ‏ ‏رَأَيْتُ ‏ ‏الْأُصَيْلِعَ

உமர் (ரலி) ஹஜருல் அஸ்வதை முத்தமிடும்போது, “அல்லாஹ்வின் மீதாணை! நீ தீமையோ நன்மையோ செய்ய முடியாத ஒரு கல் என்பதை நான் அறிந்து கொண்டே உன்னை முத்தமிடுகின்றேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) உன்னை முத்தமிடுவதை நான் கண்டிராவிட்டால் உன்னை முத்தமிட்டிருக்கமாட்டேன்” என்று கூறியதை நான் பார்த்தேன்.

அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் சர்ஜிஸ் (ரலி)


குறிப்பு :

இந்த ஹதீஸில் உமர் (ரலி) அவர்களை ‘வழுக்கைத் தலையர்’ என்று அறிவிப்பாளர் குறிப்பிடுகின்றார்.

முஹம்மத் பின் அபீபக்ரு அல்முகத்தமீ (ரஹ்), அபூகாமில் (ரஹ்) ஆகியோரது அறிவிப்பில் உமர் (ரலி), ‘சின்ன வழுக்கைத் தலையர்’ என்று குறிப்பிடப்படுகின்றார்.

அத்தியாயம்: 15, பாடம்: 41, ஹதீஸ் எண்: 2229

‏و حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ أَبِي بَكْرٍ الْمُقَدَّمِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏حَمَّادُ بْنُ زَيْدٍ ‏ ‏عَنْ ‏ ‏أَيُّوبَ ‏ ‏عَنْ ‏ ‏نَافِعٍ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ عُمَرَ

‏أَنَّ ‏ ‏عُمَرَ ‏ ‏قَبَّلَ الْحَجَرَ وَقَالَ ‏ ‏إِنِّي لَأُقَبِّلُكَ وَإِنِّي لَأَعْلَمُ أَنَّكَ حَجَرٌ وَلَكِنِّي رَأَيْتُ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يُقَبِّلُكَ

(என் தந்தை) உமர் (ரலி), ஹஜருல் அஸ்வதை முத்தமிட்டுவிட்டு, “நீ ஒரு கல் என்பதை நான் நன்கு அறிவேன். ஆயினும், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) உன்னை முத்தமிடுவதை நான் கண்டேன். எனவே நானும் உன்னை முத்தமிடுகின்றேன்” என்றார்கள்.

அறிவிப்பாளர் : இப்னு உமர் (ரலி)

அத்தியாயம்: 15, பாடம்: 41, ஹதீஸ் எண்: 2228

‏و حَدَّثَنِي ‏ ‏حَرْمَلَةُ بْنُ يَحْيَى ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏ابْنُ وَهْبٍ ‏ ‏أَخْبَرَنِي ‏ ‏يُونُسُ ‏ ‏وَعَمْرٌو ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنِي ‏ ‏هَارُونُ بْنُ سَعِيدٍ الْأَيْلِيُّ ‏ ‏حَدَّثَنِي ‏ ‏ابْنُ وَهْبٍ ‏ ‏أَخْبَرَنِي ‏ ‏عَمْرٌو ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ شِهَابٍ ‏ ‏عَنْ ‏ ‏سَالِمٍ ‏ ‏أَنَّ ‏ ‏أَبَاهُ ‏ ‏حَدَّثَهُ قَالَ :

قَبَّلَ ‏ ‏عُمَرُ بْنُ الْخَطَّابِ ‏ ‏الْحَجَرَ ثُمَّ قَالَ ‏ ‏أَمَ وَاللَّهِ ‏ ‏لَقَدْ عَلِمْتُ أَنَّكَ حَجَرٌ وَلَوْلَا أَنِّي رَأَيْتُ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يُقَبِّلُكَ مَا قَبَّلْتُكَ

‏زَادَ ‏ ‏هَارُونُ ‏ ‏فِي رِوَايَتِهِ ‏ ‏قَالَ ‏ ‏عَمْرٌو ‏ ‏وَحَدَّثَنِي ‏ ‏بِمِثْلِهَا ‏ ‏زَيْدُ بْنُ أَسْلَمَ ‏ ‏عَنْ ‏ ‏أَبِيهِ ‏ ‏أَسْلَمَ

(என் தந்தை) உமர் பின் அல்கத்தாப் (ரலி) ஹஜருல் அஸ்வதை முத்தமிட்டுவிட்டு, “அல்லாஹ்வின் மீதாணையாக! நீ ஒரு கல் என்பதை நான் அறிவேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) உன்னை முத்தமிடுவதை நான் கண்டிராவிட்டால் உன்னை முத்தமிட்டிருக்கமாட்டேன்” என்றார்கள்.

அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் உமர் (ரலி)