அத்தியாயம்: 15, பாடம்: 43, ஹதீஸ் எண்: 2239

حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ يَحْيَى ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبُو مُعَاوِيَةَ ‏ ‏عَنْ ‏ ‏هِشَامِ بْنِ عُرْوَةَ ‏ ‏عَنْ ‏ ‏أَبِيهِ ‏ ‏عَنْ ‏ ‏عَائِشَةَ ‏ ‏قَالَ: ‏

قُلْتُ لَهَا إِنِّي لَأَظُنُّ رَجُلًا لَوْ لَمْ يَطُفْ بَيْنَ ‏ ‏الصَّفَا ‏ ‏وَالْمَرْوَةِ ‏ ‏مَا ضَرَّهُ قَالَتْ لِمَ قُلْتُ لِأَنَّ اللَّهَ تَعَالَى يَقُولُ ‏(إِنَّ ‏ ‏الصَّفَا ‏ ‏وَالْمَرْوَةَ ‏ ‏مِنْ شَعَائِرِ اللَّهِ …) ‏ ‏إِلَى آخِرِ الْآيَةِ فَقَالَتْ ‏ ‏مَا أَتَمَّ اللَّهُ حَجَّ امْرِئٍ وَلَا عُمْرَتَهُ لَمْ يَطُفْ بَيْنَ ‏ ‏الصَّفَا ‏ ‏وَالْمَرْوَةِ ‏ ‏وَلَوْ كَانَ كَمَا تَقُولُ لَكَانَ فَلَا ‏ ‏جُنَاحَ ‏ ‏عَلَيْهِ أَنْ لَا يَطَّوَّفَ بِهِمَا وَهَلْ تَدْرِي فِيمَا كَانَ ذَاكَ إِنَّمَا كَانَ ذَاكَ أَنَّ ‏ ‏الْأَنْصَارَ ‏ ‏كَانُوا ‏ ‏يُهِلُّونَ ‏ ‏فِي الْجَاهِلِيَّةِ لِصَنَمَيْنِ عَلَى شَطِّ الْبَحْرِ يُقَالُ لَهُمَا ‏ ‏إِسَافٌ ‏ ‏وَنَائِلَةُ ‏ ‏ثُمَّ يَجِيئُونَ فَيَطُوفُونَ بَيْنَ ‏ ‏الصَّفَا ‏ ‏وَالْمَرْوَةِ ‏ ‏ثُمَّ يَحْلِقُونَ فَلَمَّا جَاءَ الْإِسْلَامُ كَرِهُوا أَنْ يَطُوفُوا بَيْنَهُمَا لِلَّذِي كَانُوا يَصْنَعُونَ فِي الْجَاهِلِيَّةِ قَالَتْ فَأَنْزَلَ اللَّهُ عَزَّ وَجَلَّ (إِنَّ ‏ ‏الصَّفَا ‏ ‏وَالْمَرْوَةَ ‏ ‏مِنْ شَعَائِرِ اللَّهِ …) إِلَى آخِرِهَا قَالَتْ فَطَافُوا

நான் (என் சிற்றன்னை) ஆயிஷா (ரலி) அவர்களிடம், “ஒருவர் ஸஃபா-மர்வாவுக்கிடையே சுற்றிவராவிட்டாலும் அவர்மீது குற்றமில்லை என்று நான் கருதுகிறேன்” என்றேன். ஆயிஷா (ரலி), “எதனால் (அப்படிக் கருதுகின்றாய்)?” என்று கேட்டார்கள். நான், “ஏனெனில், அல்லாஹ், ‘ஸஃபாவும் மர்வாவும் அல்லாஹ்வின் சின்னங்களில் உள்ளவை ஆகும். எனவே, யார் அந்த (கஅபா) ஆலயத்தில் ஹஜ்ஜோ உம்ராவோ செய்கிறாரோ, அவர்மீது அவ்விரண்டையும் சுற்றிவருவது குற்றமன்று’ (2:158) என்று கூறுகின்றான் …” என்று அந்த வசனத்தின் இறுதிவரை கூறினேன்.

அதற்கு ஆயிஷா (ரலி), “ஸஃபா-மர்வாவுக்கிடையே சுற்றிவராதவரின் ஹஜ்ஜையோ உம்ராவையோ அல்லாஹ் முழுமையாக்கமாட்டான். ‘அவ்விரண்டையும் சுற்றாமல் இருப்பது குற்றமில்லை’ என்றிருந்தால்தான் நீ கூறும் கருத்து சரியாகும். (“சுற்றுவது குற்றமன்று“ என்றல்லவா குர்ஆனில் வந்துள்ளது.) இந்த வசனம் ஏன் அருளப்பெற்றதென உனக்குத் தெரியுமா? அறியாமைக் காலத்தில் அன்ஸாரிகள் கடலோரத்தில் அமைந்திருந்த ‘இசாஃப்’, ‘நாயிலா’ ஆகிய இரு சிலைகளுக்காக இஹ்ராம் புனைந்துவந்து, ஸஃபா-மர்வாவுக்கிடையே சுற்றுவர்; பின்னர் தலையை மழித்துக் கொள்வர். இஸ்லாம் வந்தபோது, அவ்விரண்டுக்குமிடையே சுற்றிவருவதை அறியாமைக் கால வழிபாடு எனக் கருதி அதை அன்ஸாரிகள் வெறுத்தனர். அப்போது வல்லமையும் மாண்புமுள்ள அல்லாஹ் ‘ஸஃபாவும் மர்வாவும் அல்லாஹ்வின் சின்னங்கள்’ என்று தொடங்கும் (2:158ஆவது) வசனத்தை இறுதிவரை அருளினான். எனவே, அன்ஸாரிகள் (ஸஃபா-மர்வாவுக்கிடையே) சுற்றிவந்தனர்” என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி) வழியாக உர்வா பின் அஸ்ஸுபைர் (ரஹ்)

Share this Hadith: