و حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ حَدَّثَنَا أَبُو أُسَامَةَ حَدَّثَنَا هِشَامُ بْنُ عُرْوَةَ أَخْبَرَنِي أَبِي قَالَ:
قُلْتُ لِعَائِشَةَ مَا أَرَى عَلَيَّ جُنَاحًا أَنْ لَا أَتَطَوَّفَ بَيْنَ الصَّفَا وَالْمَرْوَةِ قَالَتْ لِمَ قُلْتُ لِأَنَّ اللَّهَ عَزَّ وَجَلَّ يَقُولُ (إِنَّ الصَّفَا وَالْمَرْوَةَ مِنْ شَعَائِرِ اللَّهِ…) الْآيَةَ فَقَالَتْ لَوْ كَانَ كَمَا تَقُولُ لَكَانَ فَلَا جُنَاحَ عَلَيْهِ أَنْ لَا يَطَّوَّفَ بِهِمَا إِنَّمَا أُنْزِلَ هَذَا فِي أُنَاسٍ مِنْ الْأَنْصَارِ كَانُوا إِذَا أَهَلُّوا أَهَلُّوا لِمَنَاةَ فِي الْجَاهِلِيَّةِ فَلَا يَحِلُّ لَهُمْ أَنْ يَطَّوَّفُوا بَيْنَ الصَّفَا وَالْمَرْوَةِ فَلَمَّا قَدِمُوا مَعَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لِلْحَجِّ ذَكَرُوا ذَلِكَ لَهُ فَأَنْزَلَ اللَّهُ تَعَالَى هَذِهِ الْآيَةَ فَلَعَمْرِي مَا أَتَمَّ اللَّهُ حَجَّ مَنْ لَمْ يَطُفْ بَيْنَ الصَّفَا وَالْمَرْوَةِ
நான் (என் சிற்றன்னை) ஆயிஷா (ரலி) அவர்களிடம், “நான் (ஹஜ்ஜின்போது) ஸஃபா-மர்வாவுக்கிடையே சுற்றிவராமல் இருப்பதில் என்மீது குற்றமேதுமில்லை என்று கருதுகின்றேன்” என்றேன். ஆயிஷா (ரலி) அவர்கள், “எதனால் (அப்படிக் கருதுகின்றாய்)?” என்று கேட்டார்கள். நான், “ஏனெனில் அல்லாஹ், ‘ஸஃபாவும் மர்வாவும் அல்லாஹ்வின் சின்னங்கள். அவ்விரண்டையும் சுற்றிவருவது குற்றமன்று’ (2:158) என்று கூறுகின்றான்” என்றேன். அதற்கு ஆயிஷா (ரலி), “அவ்விரண்டையும் சுற்றாமலிருப்பது குற்றமில்லை என்றிருந்தால்தான் நீ கருதுவது சரியாகும். அன்ஸாரிகள் சிலர் தொடர்பாகவே இந்த வசனம் அருளப்பெற்றது. அவர்கள் அறியாமைக் காலத்தில் இஹ்ராம் புனைந்தால் ‘மனாத்’ எனும் சிலைக்காக இஹ்ராம் புனைபவர்களாய் இருந்தனர். அவர்கள் (இஸ்லாத்தை ஏற்ற பின்னர்) ஸஃபா-மர்வாவுக்கிடையே சுற்றிவருவது அனுமதிக்கப்பட்டதல்ல எனக் கருதினர்.
நபி (ஸல்) அவர்களுடன் (பிற்காலத்தில்) அவர்கள் ஹஜ்ஜுக்காக வந்தபோது அதைப் பற்றி நபியவர்களிடம் தெரிவித்தனர். அப்போதுதான் அல்லாஹ் இந்த (2:158ஆவது) வசனத்தை அருளினான். என் ஆயுள் மீது அறுதியாக! ஸஃபா-மர்வாவுக்கிடையே சுற்றிவராதவரின் ஹஜ்ஜை அல்லாஹ் முழுமையாக்குவதில்லை” என்று கூறினார்கள்.
அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி) வழியாக உர்வா பின் அஸ்ஸுபைர் (ரஹ்)