அத்தியாயம்: 15, பாடம்: 45, ஹதீஸ் எண்: 2247

‏و حَدَّثَنَا ‏ ‏إِسْحَقُ بْنُ إِبْرَاهِيمَ ‏ ‏وَعَلِيُّ بْنُ خَشْرَمٍ ‏ ‏كِلَاهُمَا ‏ ‏عَنْ ‏ ‏عِيسَى بْنِ يُونُسَ ‏ ‏قَالَ ‏ ‏ابْنُ خَشْرَمٍ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏عِيسَى ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ جُرَيْجٍ ‏ ‏أَخْبَرَنِي ‏ ‏عَطَاءٌ ‏ ‏أَخْبَرَنِي ‏ ‏ابْنُ عَبَّاسٍ: ‏

أَنَّ النَّبِيَّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏أَرْدَفَ ‏ ‏الْفَضْلَ ‏ ‏مِنْ ‏ ‏جَمْعٍ ‏ ‏قَالَ فَأَخْبَرَنِي ‏ ‏ابْنُ عَبَّاسٍ ‏ ‏أَنَّ ‏ ‏الْفَضْلَ ‏ ‏أَخْبَرَهُ أَنَّ النَّبِيَّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏لَمْ يَزَلْ يُلَبِّي حَتَّى رَمَى ‏ ‏جَمْرَةَ الْعَقَبَةِ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) முஸ்தலிஃபாவிலிருந்து புறப்பட்டபோது, தமது வாகனத்தில் தமக்குப் பின்னால் (என் சகோதரர்) ஃபள்லு பின் அப்பாஸ் (ரலி) அவர்களை ஏற்றிக்கொண்டார்கள். ஃபள்லு பின் அப்பாஸ் (ரலி), “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) (துல்ஹஜ் பத்தாவது நாளில்) ஜம்ரத்துல் அகபாவில் கல்லெறியும்வரை தல்பியாச் சொல்லிக்கொண்டிருந்தார்கள்” என என்னிடம் தெரிவித்தார்கள்.

அறிவிப்பாளர் : இப்னு அப்பாஸ் (ரலி)

Share this Hadith: