و حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ بْنِ قَعْنَبٍ حَدَّثَنَا أَفْلَحُ يَعْنِي ابْنَ حُمَيْدٍ عَنْ الْقَاسِمِ عَنْ عَائِشَةَ أَنَّهَا قَالَتْ:
اسْتَأْذَنَتْ سَوْدَةُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَيْلَةَ الْمُزْدَلِفَةِ تَدْفَعُ قَبْلَهُ وَقَبْلَ حَطْمَةِ النَّاسِ وَكَانَتْ امْرَأَةً ثَبِطَةً يَقُولُ الْقَاسِمُ وَالثَّبِطَةُ الثَّقِيلَةُ قَالَ فَأَذِنَ لَهَا فَخَرَجَتْ قَبْلَ دَفْعِهِ وَحَبَسَنَا حَتَّى أَصْبَحْنَا فَدَفَعْنَا بِدَفْعِهِ وَلَأَنْ أَكُونَ اسْتَأْذَنْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَمَا اسْتَأْذَنَتْهُ سَوْدَةُ فَأَكُونَ أَدْفَعُ بِإِذْنِهِ أَحَبُّ إِلَيَّ مِنْ مَفْرُوحٍ بِهِ
முஸ்தலிஃபா இரவில் கூட்ட நெரிசல் ஏற்படுவதற்கும் முன்பே (மினாவிற்குப்) புறப்பட்டுச் செல்வதற்கு, ஸவ்தா (ரலி), அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் அனுமதி கேட்டார்கள். ஸவ்தா, கனத்த உடலுடையவராக (மெதுவாக நடப்பவராக) இருந்தார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) ஸவ்தா (ரலி) அவர்களுக்கு அனுமதியளித்தார்கள். எனவே, அவர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) புறப்படுவதற்கு முன்பே (மினாவிற்குப்) புறப்பட்டுச் சென்றார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) எங்களை ஸுப்ஹுவரை அங்கேயே தங்கியிருக்கச் செய்தார்கள். பிறகு அவர்கள் (ஸுப்ஹுத் தொழுதுவிட்டுப்) புறப்படவே நாங்களும் புறப்பட்டோம்.
ஸவ்தா (ரலி), அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் அனுமதி பெற்று, முன்னதாகச் சென்றதைப் போன்று, நானும் அனுமதி பெற்றிருந்தால் வேறெந்த மகிழ்ச்சியையும்விட அது எனக்கு மிகவும் உவப்பானதாய் இருந்திருக்கும்.
அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி)
குறிப்பு :
“இந்த ஹதீஸின் மூலத்தில் இடம்பெற்றுள்ள ‘ஸபிதா’ எனும் சொல்லுக்கு, கனத்த உடலுடையவர் என்று பொருள்” என்பதாக இதன் அறிவிப்பாளரான காசிம் பின் முஹம்மது பின் அபீபக்ரு அஸ்ஸித்தீக் (ரஹ்) கூறுகின்றார்.