و حَدَّثَنَا سَعِيدُ بْنُ مَنْصُورٍ حَدَّثَنَا سُفْيَانُ عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ الْقَاسِمِ عَنْ أَبِيهِ قَالَ سَمِعْتُ عَائِشَةَ تَقُولُ:
كُنْتُ أَفْتِلُ قَلَائِدَ هَدْيِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِيَدَيَّ هَاتَيْنِ ثُمَّ لَا يَعْتَزِلُ شَيْئًا وَلَا يَتْرُكُهُ
நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் பலிப் பிராணிக்குக் கழுத்தில் தொங்கவிடப்படும் அடையாள மாலையை என்னுடைய இவ்விரு கைகளால் திரித்துள்ளேன். (பலிப் பிராணியை அனுப்பிய) பின்னர் (முஹ்ரிமானவரைப் போன்று) எதிலிருந்தும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) விலகி இருக்கவில்லை; (அன்றாட இயல்பு வாழ்வில்) எதையும் அவர்கள் கைவிடவுமில்லை.
அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி)