அத்தியாயம்: 15, பாடம்: 64, ஹதீஸ் எண்: 2333

‏و حَدَّثَنَا ‏ ‏عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ بْنِ قَعْنَبٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَفْلَحُ ‏ ‏عَنْ ‏ ‏الْقَاسِمِ ‏ ‏عَنْ ‏ ‏عَائِشَةَ ‏ ‏قَالَتْ: ‏

‏فَتَلْتُ ‏ ‏قَلَائِدَ ‏ ‏بُدْنِ ‏ ‏رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏بِيَدَيَّ ثُمَّ ‏ ‏أَشْعَرَهَا ‏ ‏وَقَلَّدَهَا ‏ ‏ثُمَّ بَعَثَ بِهَا إِلَى ‏ ‏الْبَيْتِ ‏ ‏وَأَقَامَ ‏ ‏بِالْمَدِينَةِ ‏ ‏فَمَا حَرُمَ عَلَيْهِ شَيْءٌ كَانَ لَهُ حِلًّا

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் பலி ஒட்டகங்களின் அடையாள மாலைகளை நான் என் கைகளாலேயே திரித்தேன். அந்த மாலைகளை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவற்றின் கழுத்தில் போட்டு, அவற்றுக்கு அடையாளச் சின்னமுமிட்டு, இறையில்லம் கஅபாவிற்கு அவற்றை அனுப்பிவைத்தார்கள். அவர்கள் மதீனாவிலேயே தங்கியிருந்தார்கள். அவர்களுக்கு அனுமதிக்கப்பட்டிருந்த எதுவும் தடை செய்யப்பட்டதாக ஆகவில்லை.

அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி)

Share this Hadith: