அத்தியாயம்: 15, பாடம்: 67, ஹதீஸ் எண்: 2352

‏حَدَّثَنِي ‏ ‏مُحَمَّدُ بْنُ حَاتِمٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ سَعِيدٍ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ جُرَيْجٍ ‏ ‏أَخْبَرَنِي ‏ ‏الْحَسَنُ بْنُ مُسْلِمٍ ‏ ‏عَنْ ‏ ‏طَاوُسٍ ‏ ‏قَالَ: ‏

كُنْتُ مَعَ ‏ ‏ابْنِ عَبَّاسٍ ‏ ‏إِذْ قَالَ ‏ ‏زَيْدُ بْنُ ثَابِتٍ ‏ ‏تُفْتِي أَنْ تَصْدُرَ الْحَائِضُ قَبْلَ أَنْ يَكُونَ آخِرُ عَهْدِهَا ‏ ‏بِالْبَيْتِ ‏ ‏فَقَالَ لَهُ ‏ ‏ابْنُ عَبَّاسٍ ‏ ‏إِمَّا لَا فَسَلْ فُلَانَةَ الْأَنْصَارِيَّةَ هَلْ أَمَرَهَا بِذَلِكَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَالَ فَرَجَعَ ‏ ‏زَيْدُ بْنُ ثَابِتٍ ‏ ‏إِلَى ‏ ‏ابْنِ عَبَّاسٍ ‏ ‏يَضْحَكُ وَهُوَ يَقُولُ مَا أَرَاكَ إِلَّا قَدْ صَدَقْتَ

நான் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களுடன் இருந்தேன். அப்போது அவர்களிடம் ஸைத் பின் ஸாபித் (ரலி), “மாதவிடாய் ஏற்பட்ட பெண் இறுதியாக இறையில்லம் கஅபாவைச் சந்தித்(து தவாஃபுல் வதா செய்)திடாமலேயே புறப்பட்டுச் செல்லலாம் என நீங்கள் தீர்ப்பு வழங்குகின்றீர்களா? (இது சரியா?)” என்று கேட்டார்கள். அதற்கு இப்னு அப்பாஸ் (ரலி), “அவ்வாறில்லை என நீங்கள் கருதினால், இன்ன அன்ஸாரிப் பெண்ணிடம் (சென்று) இவ்வாறு அவருக்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) உத்தரவிட்டார்களா (இல்லையா) எனக் கேளுங்கள்” என்றார்கள். அவ்வாறே ஸைத் பின் ஸாபித் (ரலி) (சென்று, கேட்டுவிட்டுத்) திரும்பிவந்து, “நீங்கள் சொன்னது உண்மை என்று கண்டுகொண்டேன்” என்று சிரித்துக்கொண்டே சொன்னார்கள்.

அறிவிப்பாளர் : இப்னு அப்பாஸ் (ரலி) வழியாக தாவூஸ் பின் கைஸான் (ரஹ்)

Share this Hadith: