அத்தியாயம்: 15, பாடம்: 68, ஹதீஸ் எண்: 2366

‏و حَدَّثَنِي ‏ ‏سُرَيْجُ بْنُ يُونُسَ ‏ ‏حَدَّثَنِي ‏ ‏هُشَيْمٌ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏إِسْمَعِيلُ بْنُ أَبِي خَالِدٍ ‏ ‏قَالَ: ‏

قُلْتُ ‏ ‏لِعَبْدِ اللَّهِ بْنِ أَبِي أَوْفَى ‏ ‏صَاحِبِ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏أَدَخَلَ النَّبِيُّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏الْبَيْتَ ‏ ‏فِي عُمْرَتِهِ قَالَ لَا

நான் அப்துல்லாஹ் பின் அபீஅவ்ஃபா (ரலி) அவர்களிடம், “நபி (ஸல்) தமது உம்ராவின்போது இறையில்லம் கஅபாவின் உள்ளே நுழைந்தார்களா?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள் “இல்லை” என்றார்கள்.

அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் அபீஅவ்ஃபா (ரலி) வழியாக இஸ்மாயீல் பின் அபீகாலித் (ரஹ்)

அத்தியாயம்: 15, பாடம்: 68, ஹதீஸ் எண்: 2365

‏حَدَّثَنَا ‏ ‏شَيْبَانُ بْنُ فَرُّوخَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏هَمَّامٌ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَطَاءٌ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ عَبَّاسٍ: ‏

أَنَّ النَّبِيَّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏دَخَلَ ‏ ‏الْكَعْبَةَ ‏ ‏وَفِيهَا سِتُّ سَوَارٍ فَقَامَ عِنْدَ ‏ ‏سَارِيَةٍ ‏ ‏فَدَعَا وَلَمْ يُصَلِّ

நபி (ஸல்) இறையில்லம் கஅபாவிற்குள் நுழைந்தார்கள். அதனுள் ஆறு தூண்கள் இருந்தன. ஒவ்வொரு தூணுக்கு அருகிலும் நின்று அவர்கள் பிரார்த்தித்தார்கள். ஆனால், தொழவில்லை.

அறிவிப்பாளர் : இப்னு அப்பாஸ் (ரலி)

அத்தியாயம்: 15, பாடம்: 68, ஹதீஸ் எண்: 2364

‏حَدَّثَنَا ‏ ‏إِسْحَقُ بْنُ إِبْرَاهِيمَ ‏ ‏وَعَبْدُ بْنُ حُمَيْدٍ ‏ ‏جَمِيعًا ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ بَكْرٍ ‏ ‏قَالَ ‏ ‏عَبْدٌ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ بَكْرٍ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏ابْنُ جُرَيْجٍ ‏ ‏قَالَ قُلْتُ ‏ ‏لِعَطَاءٍ ‏ ‏أَسَمِعْتَ ‏ ‏ابْنَ عَبَّاسٍ ‏ ‏يَقُولُ: ‏

إِنَّمَا أُمِرْتُمْ بِالطَّوَافِ وَلَمْ تُؤْمَرُوا بِدُخُولِهِ قَالَ لَمْ يَكُنْ يَنْهَى عَنْ دُخُولِهِ وَلَكِنِّي سَمِعْتُهُ يَقُولُ أَخْبَرَنِي ‏ ‏أُسَامَةُ بْنُ زَيْدٍ ‏ ‏أَنَّ النَّبِيَّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏لَمَّا دَخَلَ ‏ ‏الْبَيْتَ ‏ ‏دَعَا فِي نَوَاحِيهِ كُلِّهَا وَلَمْ يُصَلِّ فِيهِ حَتَّى خَرَجَ فَلَمَّا خَرَجَ رَكَعَ فِي ‏ ‏قُبُلِ ‏ ‏الْبَيْتِ ‏ ‏رَكْعَتَيْنِ وَقَالَ ‏ ‏هَذِهِ الْقِبْلَةُ قُلْتُ لَهُ مَا نَوَاحِيهَا أَفِي زَوَايَاهَا قَالَ بَلْ فِي كُلِّ قِبْلَةٍ مِنْ ‏ ‏الْبَيْتِ

நான் அதாஉ பின் அபீரபாஹ் (ரஹ்) அவர்களிடம், “நீங்கள் இறையில்லம் கஅபாவைச் சுற்றி (தவாஃப்) வரும்படித்தான் உத்தரவிடப்பட்டுள்ளீர்கள்; கஅபாவின் உள்ளே நுழையுமாறு உங்களுக்கு உத்தரவிடப்படவில்லை என்று இப்னு அப்பாஸ் (ரலி) கூறியதைத் தாங்கள் செவியுற்றீர்களா?” என்று கேட்டேன். அதற்கு அதாஉ (ரஹ்), “கஅபாவிற்குள் நுழைய வேண்டாம் என இப்னு அப்பாஸ் (ரலி) தடை விதிக்கவில்லை. ஆயினும்,

“நபி (ஸல்) இறையில்லம் கஅபாவிற்குள் நுழைந்ததும் அதன் அனைத்துப் பகுதிகளிலும் பிரார்த்தித்துவிட்டு, உள்ளே தொழாமலேயே வெளியேறிவிட்டார்கள். வெளியே வந்ததும் கஅபாவின் (வாசல்) முன் நின்று, இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள். மேலும், ‘இதுவே உங்கள் தொழும் திசை (கிப்லா) ஆகும்’ என்றும் கூறினார்கள்” என்று உஸாமா பின் ஸைத் (ரலி) கூறியதைச் செவியுற்றேன் என்பதாக அதாஉ பின் அபீரபாஹ் (ரஹ்) கூறியதை இப்னு ஜுரைஜ் (ரஹ்) குறிப்பிடுகின்றார். மேலும்,

நான் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம், “அதன் பகுதிகள் என்பவை யாவை? அதன் ஒவ்வொரு மூலையையுமா குறிப்பிடுகிறீர்கள்?” என்று கேட்டேன். அதற்கு இப்னு அப்பாஸ் (ரலி), “இல்லை; இறையில்லத்தின் ஒவ்வொரு திசையிலும் (பிரார்த்தித்தார்கள்)” என்றார்கள் என்பதாக அதாஉ பின் அபீரபாஹ் (ரஹ்) கூறுகின்றார்.

அறிவிப்பாளர் : இப்னு அப்பாஸ் (ரலி) வழியாக அதாஉ பின் அபீரபாஹ் (ரஹ்)

அத்தியாயம்: 15, பாடம்: 68, ஹதீஸ் எண்: 2363

‏و حَدَّثَنِي ‏ ‏حَرْمَلَةُ بْنُ يَحْيَى ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏ابْنُ وَهْبٍ ‏ ‏أَخْبَرَنِي ‏ ‏يُونُسُ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ شِهَابٍ ‏ ‏أَخْبَرَنِي ‏ ‏سَالِمُ بْنُ عَبْدِ اللَّهِ ‏ ‏عَنْ ‏ ‏أَبِيهِ ‏ ‏قَالَ: ‏

رَأَيْتُ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏دَخَلَ ‏ ‏الْكَعْبَةَ ‏ ‏هُوَ ‏ ‏وَأُسَامَةُ بْنُ زَيْدٍ ‏ ‏وَبِلَالٌ ‏ ‏وَعُثْمَانُ بْنُ طَلْحَةَ ‏ ‏وَلَمْ يَدْخُلْهَا مَعَهُمْ أَحَدٌ ثُمَّ أُغْلِقَتْ عَلَيْهِمْ ‏
‏قَالَ ‏ ‏عَبْدُ اللَّهِ بْنُ عُمَرَ ‏ ‏فَأَخْبَرَنِي ‏ ‏بِلَالٌ ‏ ‏أَوْ ‏ ‏عُثْمَانُ بْنُ طَلْحَةَ ‏ ‏أَنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏صَلَّى فِي جَوْفِ ‏ ‏الْكَعْبَةِ ‏ ‏بَيْنَ الْعَمُودَيْنِ الْيَمَانِيَيْنِ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் உஸாமா பின் ஸைத் (ரலி), பிலால் (ரலி), உஸ்மான் பின் தல்ஹா (ரலி) ஆகியோரும் கஅபாவிற்குள் நுழைவதை நான் கண்டேன். அப்போது அந்த நால்வருடன் வேறெவரும் கஅபாவிற்குள் நுழையவில்லை. பின்னர் கஅபா தாழிடப்பட்டுவிட்டது.

என்னிடம் பிலால் (ரலி) அவர்களோ உஸ்மான் பின் தல்ஹா (ரலி) அவர்களோ, “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கஅபாவின் நடுவில் வலப் பக்கமிருக்கும் இரு தூண்களுக்கிடையே தொழுதார்கள்” எனக் குறிப்பிட்டார்கள்.

அறிவிப்பாளர் : இப்னு உமர் (ரலி)

அத்தியாயம்: 15, பாடம்: 68, ஹதீஸ் எண்: 2362

‏و حَدَّثَنَا ‏ ‏قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏لَيْثٌ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏ابْنُ رُمْحٍ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏اللَّيْثُ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ شِهَابٍ ‏ ‏عَنْ ‏ ‏سَالِمٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِيهِ ‏ ‏أَنَّهُ قَالَ: ‏

دَخَلَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏الْبَيْتَ ‏ ‏هُوَ ‏ ‏وَأُسَامَةُ بْنُ زَيْدٍ ‏ ‏وَبِلَالٌ ‏ ‏وَعُثْمَانُ بْنُ طَلْحَةَ ‏ ‏فَأَغْلَقُوا عَلَيْهِمْ فَلَمَّا فَتَحُوا كُنْتُ فِي أَوَّلِ مَنْ ‏ ‏وَلَجَ ‏ ‏فَلَقِيتُ ‏ ‏بِلَالًا ‏ ‏فَسَأَلْتُهُ هَلْ صَلَّى فِيهِ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَالَ نَعَمْ صَلَّى بَيْنَ الْعَمُودَيْنِ الْيَمَانِيَيْنِ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் உஸாமா பின் ஸைத் (ரலி), பிலால் (ரலி), உஸ்மான் பின் தல்ஹா (ரலி) ஆகியோரும் இறையில்லம் கஅபாவினுள் நுழைந்து தாழிட்டுக்கொண்டனர். அவர்கள் கதவைத் திறந்ததும் முதல் ஆளாக நான் உள்ளே புகுந்தேன். அப்போது (வெளியே வந்த) பிலால் (ரலி) அவர்களைச் சந்தித்து, “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கஅபாவினுள் தொழுதார்களா?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “ஆம், வலப் பக்கமிருக்கும் இரு தூண்களுக்கிடையே தொழுதார்கள்” என்று பதிலளித்தார்கள்.

அறிவிப்பாளர் : இப்னு உமர் (ரலி)

அத்தியாயம்: 15, பாடம்: 68, ஹதீஸ் எண்: 2361

‏و حَدَّثَنِي ‏ ‏حُمَيْدُ بْنُ مَسْعَدَةَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏خَالِدٌ يَعْنِي ابْنَ الْحَارِثِ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَبْدُ اللَّهِ بْنُ عَوْنٍ ‏ ‏عَنْ ‏ ‏نَافِعٍ ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ: ‏

أَنَّهُ ‏ ‏انْتَهَى إِلَى ‏ ‏الْكَعْبَةِ ‏ ‏وَقَدْ دَخَلَهَا النَّبِيُّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏وَبِلَالٌ ‏ ‏وَأُسَامَةُ ‏ ‏وَأَجَافَ ‏ ‏عَلَيْهِمْ ‏ ‏عُثْمَانُ بْنُ طَلْحَةَ ‏ ‏الْبَابَ قَالَ فَمَكَثُوا فِيهِ ‏ ‏مَلِيًّا ‏ ‏ثُمَّ فُتِحَ الْبَابُ فَخَرَجَ النَّبِيُّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏وَرَقِيتُ الدَّرَجَةَ فَدَخَلْتُ ‏ ‏الْبَيْتَ ‏ ‏فَقُلْتُ أَيْنَ صَلَّى النَّبِيُّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَالُوا هَا هُنَا قَالَ وَنَسِيتُ أَنْ أَسْأَلَهُمْ كَمْ صَلَّى

நான் (அன்று) கஅபாவிற்குப் போய்ச் சேர்ந்தேன். அங்கு நபி (ஸல்) அவர்களும் பிலால் (ரலி), உஸாமா (ரலி) ஆகியோரும் கஅபாவிற்குள் நுழைந்திருந்தார்கள். உள்ளே சென்றதும் உஸ்மான் பின் தல்ஹா (ரலி) கஅபாவின் தலைவாயிலை மூடிவிட்டார்கள். பிறகு நீண்ட நேரம் அவர்கள் அனைவரும் அதனுள் இருந்தார்கள். பின்னர் கதவு திறக்கப்பட்டபோது நபி (ஸல்) வெளியே வந்தார்கள். நான் படியில் ஏறி கஅபாவிற்கு உள்ளே நுழைந்தேன். (வெளியே வந்துகொண்டிருந்தவர்களிடம்), “நபி (ஸல்) எந்த இடத்தில் தொழுதார்கள்?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள் “இங்கு தான்” என(ஓர் இடத்தைக் காட்டி)க் கூறினார்கள். நான் அவர்களிடம் “நபி (ஸல்) எத்தனை ரக்அத்கள் தொழுதார்கள்?” என்று கேட்க மறந்துவிட்டேன்.

அறிவிப்பாளர் : இப்னு உமர் (ரலி)

அத்தியாயம்: 15, பாடம்: 68, ஹதீஸ் எண்: 2360

‏و حَدَّثَنِي ‏ ‏زُهَيْرُ بْنُ حَرْبٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏يَحْيَى وَهُوَ الْقَطَّانُ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبُو أُسَامَةَ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏ابْنُ نُمَيْرٍ ‏ ‏وَاللَّفْظُ لَهُ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَبْدَةُ ‏ ‏عَنْ ‏ ‏عُبَيْدِ اللَّهِ ‏ ‏عَنْ ‏ ‏نَافِعٍ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ عُمَرَ ‏ ‏قَالَ: ‏

دَخَلَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏الْبَيْتَ ‏ ‏وَمَعَهُ ‏ ‏أُسَامَةُ ‏ ‏وَبِلَالٌ ‏ ‏وَعُثْمَانُ بْنُ طَلْحَةَ ‏ ‏فَأَجَافُوا ‏ ‏عَلَيْهِمْ الْبَابَ طَوِيلًا ثُمَّ فُتِحَ فَكُنْتُ أَوَّلَ مَنْ دَخَلَ فَلَقِيتُ ‏ ‏بِلَالًا ‏ ‏فَقُلْتُ أَيْنَ صَلَّى رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَقَالَ ‏ ‏بَيْنَ الْعَمُودَيْنِ الْمُقَدَّمَيْنِ فَنَسِيتُ أَنْ أَسْأَلَهُ كَمْ صَلَّى رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) (மக்கா வெற்றி நாளில்) இறையில்லம் கஅபாவினுள் நுழைந்தார்கள். அப்போது அவர்களுடன் உஸாமா (ரலி), பிலால் (ரலி), உஸ்மான் பின் தல்ஹா (ரலி) ஆகியோர் இருந்தனர். அவர்கள் அனைவரும் உள்ளே சென்று, தாழிட்டுக்கொண்டு நீண்ட நேரம் தங்கியிருந்தார்கள். பின்னர் கதவு திறக்கப்பட்டபோது, நானே முதல் ஆளாக உள்ளே நுழைந்தேன். அப்போது வெளியே வந்துகொண்டிருந்த பிலால் (ரலி) அவர்களைச் சந்தித்து, “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கஅபாவினுள் எந்த இடத்தில் தொழுதார்கள்?” என்று கேட்டேன். அதற்கு பிலால் (ரலி), “அவ்விரு முன் தூண்களுக்கிடையே” என்று பதிலுரைத்தார்கள். நான் பிலால் (ரலி) அவர்களிடம் “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) எத்தனை (ரக்அத்கள்) தொழுதார்கள்?” என்று கேட்க நான் மறந்துவிட்டேன்.

அறிவிப்பாளர் : இப்னு உமர் (ரலி)

அத்தியாயம்: 15, பாடம்: 68, ஹதீஸ் எண்: 2359

‏حَدَّثَنَا ‏ ‏أَبُو الرَّبِيعِ الزَّهْرَانِيُّ ‏ ‏وَقُتَيْبَةُ بْنُ سَعِيدٍ ‏ ‏وَأَبُو كَامِلٍ الْجَحْدَرِيُّ ‏ ‏كُلُّهُمْ ‏ ‏عَنْ ‏ ‏حَمَّادِ بْنِ زَيْدٍ ‏ ‏قَالَ ‏ ‏أَبُو كَامِلٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏حَمَّادٌ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَيُّوبُ ‏ ‏عَنْ ‏ ‏نَافِعٍ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ عُمَرَ ‏ ‏قَالَ: ‏

قَدِمَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يَوْمَ الْفَتْحِ فَنَزَلَ بِفِنَاءِ ‏ ‏الْكَعْبَةِ ‏ ‏وَأَرْسَلَ إِلَى ‏ ‏عُثْمَانَ بْنِ طَلْحَةَ ‏ ‏فَجَاءَ بِالْمِفْتَحِ فَفَتَحَ الْبَابَ قَالَ ثُمَّ دَخَلَ النَّبِيُّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏وَبِلَالٌ ‏ ‏وَأُسَامَةُ بْنُ زَيْدٍ ‏ ‏وَعُثْمَانُ بْنُ طَلْحَةَ ‏ ‏وَأَمَرَ بِالْبَابِ فَأُغْلِقَ فَلَبِثُوا فِيهِ ‏ ‏مَلِيًّا ‏ ‏ثُمَّ فَتَحَ الْبَابَ فَقَالَ ‏ ‏عَبْدُ اللَّهِ ‏ ‏فَبَادَرْتُ النَّاسَ فَتَلَقَّيْتُ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏خَارِجًا ‏ ‏وَبِلَالٌ ‏ ‏عَلَى إِثْرِهِ فَقُلْتُ ‏ ‏لِبِلَالٍ ‏ ‏هَلْ صَلَّى فِيهِ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَالَ نَعَمْ قُلْتُ أَيْنَ قَالَ بَيْنَ الْعَمُودَيْنِ تِلْقَاءَ وَجْهِهِ قَالَ وَنَسِيتُ أَنْ أَسْأَلَهُ كَمْ صَلَّى ‏

و حَدَّثَنَا ‏ ‏ابْنُ أَبِي عُمَرَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏سُفْيَانُ ‏ ‏عَنْ ‏ ‏أَيُّوبَ السَّخْتِيَانِيِّ ‏ ‏عَنْ ‏ ‏نَافِعٍ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ عُمَرَ ‏ ‏قَالَ ‏ ‏أَقْبَلَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏عَامَ الْفَتْحِ عَلَى نَاقَةٍ ‏ ‏لِأُسَامَةَ بْنِ زَيْدٍ ‏ ‏حَتَّى ‏ ‏أَنَاخَ ‏ ‏بِفِنَاءِ ‏ ‏الْكَعْبَةِ ‏ ‏ثُمَّ دَعَا ‏ ‏عُثْمَانَ بْنَ طَلْحَةَ ‏ ‏فَقَالَ ائْتِنِي بِالْمِفْتَاحِ فَذَهَبَ إِلَى أُمِّهِ فَأَبَتْ أَنْ تُعْطِيَهُ فَقَالَ وَاللَّهِ ‏ ‏لَتُعْطِينِهِ أَوْ لَيَخْرُجَنَّ هَذَا السَّيْفُ مِنْ صُلْبِي قَالَ فَأَعْطَتْهُ إِيَّاهُ فَجَاءَ بِهِ إِلَى النَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَدَفَعَهُ إِلَيْهِ فَفَتَحَ الْبَابَ ثُمَّ ذَكَرَ بِمِثْلِ حَدِيثِ ‏ ‏حَمَّادِ بْنِ زَيْدٍ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) மக்கா வெற்றி நாளில் (ஒட்டகத்தின் மீதமர்ந்தபடி) இறையில்லம் கஅபாவின் முற்றத்தில் வந்து இறங்கினார்கள். பிறகு (கஅபாவின் காவலராயிருந்த) உஸ்மான் பின் தல்ஹா (ரலி) அவர்களிடம் (அவர்களை அழைத்துவரும்படி) ஆளனுப்பினார்கள். உஸ்மான் பின் தல்ஹா (ரலி) சாவியுடன் வந்து கஅபாவின் கதவைத் திறந்தார்கள். பிறகு நபி (ஸல்) அவர்களும் பிலால் (ரலி), உஸாமா பின் ஸைத் (ரலி), உஸ்மான் பின் தல்ஹா (ரலி) ஆகியோரும் கஅபாவிற்குள் நுழைந்தார்கள். உள்ளே நுழைந்ததும் கதவைத் தாழிடும்படி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) உத்தரவிட, அவ்வாறே தாழிடப்பட்டது. பின்னர் அவர்கள் நீண்ட நேரம் அதனுள் தங்கியிருந்துவிட்டுப் பிறகு கதவைத் திறந்தார்கள்.

நான் (இச்செய்தி அறிந்து) மக்களை முந்திக்கொண்டு (கஅபாவிற்குச்) சென்றேன். கஅபாவிலிருந்து வெளியேறிக்கொண்டிருந்த அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை நான் எதிர்கொண்டேன். அவர்களுக்குப் பின்னால் பிலால் (ரலி) வந்தார்கள். உடனே நான் பிலால் (ரலி) அவர்களிடம், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கஅபாவினுள் தொழுதார்களா?” என்று கேட்டேன். அவர்கள் “ஆம்” என்றார்கள். நான் “எந்த இடத்தில்?” என்று கேட்க, அதற்கு பிலால் (ரலி), “இரு தூண்களுக்கிடையே நேராக” என்று கூறினார்கள். “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) எத்தனை ரக்அத்கள் தொழுதார்கள்” என்று அவர்களிடம் கேட்க மறந்துவிட்டேன்.

அறிவிப்பாளர் : இப்னு உமர் (ரலி)


குறிப்பு :

ஸுஃப்யான் (ரஹ்) வழி அறிவிப்பில்,

அல்லாஹ்வின் தூதர் (ஸல்), மக்கா வெற்றி ஆண்டில் உஸாமா பின் ஸைத் (ரலி) அவர்களது ஒட்டகத்தின் மீது (பயணம் செய்து) வந்து, கஅபாவின் முற்றத்தில் ஒட்டகத்தை மண்டியிட்டு அமரச் செய்தார்கள். பிறகு உஸ்மான் பின் தல்ஹா (ரலி) அவர்களை அழைத்(துவரச் செய்)து, “என்னிடம் கஅபாவின் சாவியைக் கொண்டுவாருங்கள்” என்று கூறினார்கள். (சாவியைப் பெறுவதற்காக) உஸ்மான் பின் தல்ஹா (ரலி), தம் அன்னையிடம் சென்றபோது, அவர் அதைத் தர மறுத்தார். அப்போது உஸ்மான் பின் தல்ஹா (ரலி), “அல்லாஹ்வின் மீதாணையாக! அதன் சாவியை என்னிடம் தந்துவிடுங்கள்! இல்லாவிட்டால், என் முதுகந் தண்டிலிருந்து இந்த வாள் வெளியேறும்” என்று கூறினார்கள். பின்னர் அவர் அந்தச் சாவியை உஸ்மான் பின் தல்ஹா (ரலி) அவர்களிடம் கொடுக்க, அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் கொண்டுவந்து அதைக் கொடுத்தார்கள். நபி (ஸல்) அவர்கள் கஅபாவின் கதவைத் திறந்தார்கள் … என்ற தகவல் பதிவாகியுள்ளது.

அத்தியாயம்: 15, பாடம்: 68, ஹதீஸ் எண்: 2358

‏حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ يَحْيَى التَّمِيمِيُّ ‏ ‏قَالَ قَرَأْتُ عَلَى ‏ ‏مَالِكٍ ‏ ‏عَنْ ‏ ‏نَافِعٍ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ عُمَرَ: ‏

أَنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏دَخَلَ ‏ ‏الْكَعْبَةَ ‏ ‏هُوَ ‏ ‏وَأُسَامَةُ ‏ ‏وَبِلَالٌ ‏ ‏وَعُثْمَانُ بْنُ طَلْحَةَ الْحَجَبِيُّ ‏ ‏فَأَغْلَقَهَا عَلَيْهِ ثُمَّ مَكَثَ فِيهَا قَالَ ‏ ‏ابْنُ عُمَرَ ‏ ‏فَسَأَلْتُ ‏ ‏بِلَالًا ‏ ‏حِينَ خَرَجَ مَا صَنَعَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَالَ ‏ ‏جَعَلَ عَمُودَيْنِ عَنْ يَسَارِهِ وَعَمُودًا عَنْ يَمِينِهِ وَثَلَاثَةَ أَعْمِدَةٍ وَرَاءَهُ وَكَانَ ‏ ‏الْبَيْتُ ‏ ‏يَوْمَئِذٍ عَلَى سِتَّةِ أَعْمِدَةٍ ثُمَّ صَلَّى

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் உஸாமா பின் ஸைத் (ரலி), பிலால் (ரலி), உஸ்மான் பின் தல்ஹா அல்ஹஜபீ (ரலி) ஆகியோரும் (மக்கா வெற்றி நாளில்) இறையில்லம் கஅபாவின் உள்ளே நுழைந்தனர். உஸ்மான் தாழிட்டார். அவர்கள் (நீண்ட நேரம்) உள்ளே இருந்தார்கள். பின்னர் பிலால் (ரலி) வெளியே வந்தபோது அவரிடம் நான், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) (உள்ளே) என்ன செய்தார்கள்?” என்று கேட்டேன். அதற்கு பிலால் (ரலி), “இரண்டு தூண்கள் அவர்களுக்கு இடப் பக்கமும் ஒரு தூண் அவர்களுக்கு வலப் பக்கமும் மூன்று தூண்கள் அவர்களுக்குப் பின்புறமும் இருந்த நிலையில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) (நின்று) தொழுதார்கள்” என்று விடையளித்தார்கள். அன்று இறையில்லம் கஅபாவில் ஆறு தூண்கள் இருந்தன.

அறிவிப்பாளர் : இப்னு உமர் (ரலி)