و حَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى قَالَ قَرَأْتُ عَلَى مَالِكٍ ح و حَدَّثَنَا قُتَيْبَةُ عَنْ مَالِكٍ فِيمَا قُرِئَ عَلَيْهِ عَنْ أَبِي النَّضْرِ عَنْ نَافِعٍ مَوْلَى أَبِي قَتَادَةَ عَنْ أَبِي قَتَادَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ
أَنَّهُ كَانَ مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ حَتَّى إِذَا كَانَ بِبَعْضِ طَرِيقِ مَكَّةَ تَخَلَّفَ مَعَ أَصْحَابٍ لَهُ مُحْرِمِينَ وَهُوَ غَيْرُ مُحْرِمٍ فَرَأَى حِمَارًا وَحْشِيًّا فَاسْتَوَى عَلَى فَرَسِهِ فَسَأَلَ أَصْحَابَهُ أَنْ يُنَاوِلُوهُ سَوْطَهُ فَأَبَوْا عَلَيْهِ فَسَأَلَهُمْ رُمْحَهُ فَأَبَوْا عَلَيْهِ فَأَخَذَهُ ثُمَّ شَدَّ عَلَى الْحِمَارِ فَقَتَلَهُ فَأَكَلَ مِنْهُ بَعْضُ أَصْحَابِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَأَبَى بَعْضُهُمْ فَأَدْرَكُوا رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَسَأَلُوهُ عَنْ ذَلِكَ فَقَالَ إِنَّمَا هِيَ طُعْمَةٌ أَطْعَمَكُمُوهَا اللَّهُ
و حَدَّثَنَا قُتَيْبَةُ عَنْ مَالِكٍ عَنْ زَيْدِ بْنِ أَسْلَمَ عَنْ عَطَاءِ بْنِ يَسَارٍ عَنْ أَبِي قَتَادَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ فِي حِمَارِ الْوَحْشِ مِثْلَ حَدِيثِ أَبِي النَّضْرِ غَيْرَ أَنَّ فِي حَدِيثِ زَيْدِ بْنِ أَسْلَمَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ هَلْ مَعَكُمْ مِنْ لَحْمِهِ شَيْءٌ
நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் (ஒரு பயணத்தில்) இருந்தேன். மக்கா செல்லும் சாலை ஒன்றில் நான் இருந்தபோது, இஹ்ராம் பூண்டிருந்த என் தோழர்கள் சிலருடன் பின்தங்கிவிட்டேன். அப்போது நான் இஹ்ராம் பூண்டிருக்கவில்லை. இந்நிலையில் நான் (வழியில்) காட்டுக் கழுதையொன்றைக் கண்டு, எனது குதிரைமேல் அமர்ந்தேன். அப்போது என் தோழர்களிடம் என் சாட்டையை எடுத்துத் தரும்படிக் கேட்டேன். அவர்கள் (இஹ்ராம் பூண்டிருந்ததால் அதை எடுத்துத் தர) மறுத்துவிட்டார்கள். அவர்களிடம் எனது ஈட்டியை எடுத்துத் தரும்படிக் கேட்டேன். அதற்கும் அவர்கள் மறுத்துவிட்டார்கள். ஆகவே, நானே (இறங்கி) அதையெடுத்து அந்தக் கழுதையைத் தாக்கிக் கொன்றேன். நபித்தோழர்களில் சிலர் அதிலிருந்து உண்டார்கள். வேறுசிலர் (உண்ண) மறுத்துவிட்டனர். நபித்தோழர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் போய்ச் சேர்ந்தபோது, அதைப் பற்றி அவர்களிடம் கேட்டார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “இதுவெல்லாம் அல்லாஹ் உங்களுக்கு உண்ணக் கொடுத்த உணவாகும்” என்று விடையளித்தார்கள்.
அறிவிப்பாளர் : அபூகத்தாதா (ரலி)
குறிப்பு : ஸைதிப்னு அஸ்லம் (ரஹ்) வழி அறிவிப்பில், “உங்களிடம் அதன் இறைச்சியிலிருந்து ஏதேனும் (எனக்கு எஞ்சி) உள்ளதா?” என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கேட்டார்கள் என்று இடம்பெற்றுள்ளது.