அத்தியாயம்: 15, பாடம்: 08, ஹதீஸ் எண்: 2067

حَدَّثَنِي ‏ ‏زُهَيْرُ بْنُ حَرْبٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ سَعِيدٍ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ جُرَيْجٍ ‏ ‏أَخْبَرَنِي ‏ ‏مُحَمَّدُ بْنُ الْمُنْكَدِرِ ‏ ‏عَنْ ‏ ‏مُعَاذِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ عُثْمَانَ التَّيْمِيِّ ‏ ‏عَنْ ‏ ‏أَبِيهِ ‏ ‏قَالَ ‏

‏كُنَّا مَعَ ‏ ‏طَلْحَةَ بْنِ عُبَيْدِ اللَّهِ ‏ ‏وَنَحْنُ ‏ ‏حُرُمٌ ‏ ‏فَأُهْدِيَ لَهُ طَيْرٌ ‏ ‏وَطَلْحَةُ ‏ ‏رَاقِدٌ فَمِنَّا مَنْ أَكَلَ وَمِنَّا مَنْ ‏ ‏تَوَرَّعَ ‏ ‏فَلَمَّا اسْتَيْقَظَ ‏ ‏طَلْحَةُ ‏ ‏وَفَّقَ ‏ ‏مَنْ أَكَلَهُ وَقَالَ ‏ ‏أَكَلْنَاهُ مَعَ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ

நாங்கள் (உம்ராப் பயணமொன்றில்) தல்ஹா பின் உபைதில்லாஹ் (ரலி) அவர்களுடன் இருந்தோம்; நாங்கள் இஹ்ராம் பூண்டிருந்தோம். அப்போது தல்ஹா (ரலி) அவர்களுக்காக (வேட்டையாடப்பட்ட) ஒரு பறவை அன்பளிப்பாக வழங்கப்பட்டது. அவர்களோ உறங்கிக்கொண்டிருந்தார்கள். எங்களில் சிலர் அதைச் சாப்பிட்டனர். வேறுசிலர் (சந்தேகம் ஏற்பட்டதால் சாப்பிடாமல்) பேணுதலாக இருந்துவிட்டனர். தல்ஹா (ரலி) உறக்கத்திலிருந்து விழித்தபோது, அதைச் சாப்பிட்டவர்களின் செயலைச் சரி கண்டார்கள். மேலும், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் நாங்கள் இ(வ்வாறு வேட்டையாடப்பட்ட)தைச் சாப்பிட்டிருக்கிறோம்” என்று கூறினார்கள்.

அறிவிப்பாளார் : தல்ஹா பின் உபைதுல்லாஹ் (ரலி) வழியாக அப்துர் ரஹ்மான் பின் உஸ்மான் அத்தைமீ (ரஹ்)

அத்தியாயம்: 15, பாடம்: 08, ஹதீஸ் எண்: 2066

حَدَّثَنَا ‏ ‏عَبْدُ اللَّهِ بْنُ عَبْدِ الرَّحْمَنِ الدَّارِمِيُّ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏يَحْيَى بْنُ حَسَّانَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏مُعَاوِيَةُ وَهُوَ ابْنُ سَلَّامٍ ‏ ‏أَخْبَرَنِي ‏ ‏يَحْيَى ‏ ‏أَخْبَرَنِي ‏ ‏عَبْدُ اللَّهِ بْنُ أَبِي قَتَادَةَ ‏ ‏أَنَّ ‏ ‏أَبَاهُ ‏ ‏رَضِيَ اللَّهُ عَنْهُ ‏ ‏أَخْبَرَهُ ‏

‏أَنَّهُ غَزَا مَعَ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏غَزْوَةَ ‏ ‏الْحُدَيْبِيَةِ ‏ ‏قَالَ فَأَهَلُّوا بِعُمْرَةٍ غَيْرِي قَالَ فَاصْطَدْتُ حِمَارَ وَحْشٍ فَأَطْعَمْتُ أَصْحَابِي وَهُمْ مُحْرِمُونَ ثُمَّ أَتَيْتُ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَأَنْبَأْتُهُ أَنَّ عِنْدَنَا مِنْ لَحْمِهِ فَاضِلَةً فَقَالَ ‏ ‏كُلُوهُ وَهُمْ مُحْرِمُونَ ‏

‏حَدَّثَنَا ‏ ‏أَحْمَدُ بْنُ عَبْدَةَ الضَّبِّيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏فُضَيْلُ بْنُ سُلَيْمَانَ النُّمَيْرِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبُو حَازِمٍ ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ اللَّهِ بْنِ أَبِي قَتَادَةَ ‏ ‏عَنْ ‏ ‏أَبِيهِ ‏ ‏رَضِيَ اللَّهُ عَنْهُ ‏ ‏أَنَّهُمْ خَرَجُوا مَعَ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏وَهُمْ مُحْرِمُونَ ‏ ‏وَأَبُو قَتَادَةَ ‏ ‏مُحِلٌّ ‏ ‏وَسَاقَ الْحَدِيثَ وَفِيهِ فَقَالَ هَلْ مَعَكُمْ مِنْهُ شَيْءٌ قَالُوا مَعَنَا رِجْلُهُ قَالَ فَأَخَذَهَا رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَأَكَلَهَا ‏ ‏و حَدَّثَنَاه ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبُو الْأَحْوَصِ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏قُتَيْبَةُ ‏ ‏وَإِسْحَقُ ‏ ‏عَنْ ‏ ‏جَرِيرٍ ‏ ‏كِلَاهُمَا ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ الْعَزِيزِ بْنِ رُفَيْعٍ ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ اللَّهِ بْنِ أَبِي قَتَادَةَ ‏ ‏قَالَ ‏ ‏كَانَ ‏ ‏أَبُو قَتَادَةَ ‏ ‏فِي نَفَرٍ مُحْرِمِينَ ‏ ‏وَأَبُو قَتَادَةَ ‏ ‏مُحِلٌّ ‏ ‏وَاقْتَصَّ الْحَدِيثَ وَفِيهِ قَالَ هَلْ أَشَارَ إِلَيْهِ إِنْسَانٌ مِنْكُمْ أَوْ أَمَرَهُ بِشَيْءٍ قَالُوا لَا يَا رَسُولَ اللَّهِ قَالَ فَكُلُوا

நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் சேர்ந்து ஹுதைபிய்யா (ஒப்பந்தப்) போருக்குச் சென்றேன். அப்போது மக்களில் என்னைத் தவிர, மற்ற அனைவரும் உம்ராவிற்காக இஹ்ராம் பூண்டிருந்தனர். நான் (வழியில்) ஒரு காட்டுக் கழுதையை வேட்டையாடி என் தோழர்களுக்கு உண்ணக் கொடுத்தேன். அப்போது அவர்கள் அனைவரும் இஹ்ராம் பூண்டிருந்தனர். பிறகு நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்று “எங்களிடம் அதன் இறைச்சியில் சிறிதளவு எஞ்சியுள்ளது” என்று சொன்னேன். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “உண்ணுங்கள்’ என்றார்கள். அப்போது அவர்கள் அனைவரும் இஹ்ராம் பூண்டிருந்தனர்.

அறிவிப்பாளர் : அபூகத்தாதா (ரலி)

குறிப்புகள் : அபூஹாஸிம் (ரஹ்) வழி அறிவிப்பு, “நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் இஹ்ராம் பூண்டவர்களாகப் புறப்பட்டோம். நான் இஹ்ராம் பூணாமலிருந்தேன் …” என்று தொடங்குகிறது. மேலும் அதில், “அ(ந்த மாமிசத்)தில் ஏதேனும் உங்களிடம் எஞ்சி உள்ளதா?” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கேட்டார்கள். நாங்கள், “அதன் கால் எங்களிடம் உள்ளது” என்றோம். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அதை வாங்கி உண்டார்கள்” என்றும் இடம்பெற்றுள்ளது.

அப்துல் அஸீஸ் பின் ருஃபைஉ (ரஹ்) வழி அறிவிப்பு, “நான் இஹ்ராம் பூண்டிருந்த ஒரு குழுவினருடன் இருந்தேன். அப்போது நான் இஹ்ராம் பூணாதிருந்தேன் …” என்று தொடங்குகிறது. மேலும், “உங்களில் யாரேனும் ஒருவர் (அதைக் கொல்லுமாறு) அவருக்கு சைகை செய்தாரா? அல்லது உத்தரவிட்டாரா?” என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கேட்டார்கள். அவர்கள், “இல்லை, அல்லாஹ்வின் தூதரே!” என்றனர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “அவ்வாறாயின் உண்ணுங்கள்” என்றார்கள் எனவும் இடம்பெற்றுள்ளது.

அத்தியாயம்: 15, பாடம்: 08, ஹதீஸ் எண்: 2065

حَدَّثَنِي ‏ ‏أَبُو كَامِلٍ الْجَحْدَرِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبُو عَوَانَةَ ‏ ‏عَنْ ‏ ‏عُثْمَانَ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ مَوْهَبٍ ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ اللَّهِ بْنِ أَبِي قَتَادَةَ ‏ ‏عَنْ ‏ ‏أَبِيهِ ‏ ‏رَضِيَ اللَّهُ عَنْهُ ‏ ‏قَالَ ‏

‏خَرَجَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏حَاجًّا وَخَرَجْنَا مَعَهُ قَالَ فَصَرَفَ مِنْ أَصْحَابِهِ فِيهِمْ ‏ ‏أَبُو قَتَادَةَ ‏ ‏فَقَالَ خُذُوا سَاحِلَ الْبَحْرِ حَتَّى تَلْقَوْنِي قَالَ فَأَخَذُوا سَاحِلَ الْبَحْرِ فَلَمَّا انْصَرَفُوا قِبَلَ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏أَحْرَمُوا كُلُّهُمْ إِلَّا ‏ ‏أَبَا قَتَادَةَ ‏ ‏فَإِنَّهُ لَمْ يُحْرِمْ فَبَيْنَمَا هُمْ يَسِيرُونَ إِذْ رَأَوْا حُمُرَ وَحْشٍ فَحَمَلَ عَلَيْهَا ‏ ‏أَبُو قَتَادَةَ ‏ ‏فَعَقَرَ مِنْهَا أَتَانًا فَنَزَلُوا فَأَكَلُوا مِنْ لَحْمِهَا قَالَ فَقَالُوا أَكَلْنَا لَحْمًا وَنَحْنُ مُحْرِمُونَ قَالَ فَحَمَلُوا مَا بَقِيَ مِنْ لَحْمِ ‏ ‏الْأَتَانِ ‏ ‏فَلَمَّا أَتَوْا رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَالُوا يَا رَسُولَ اللَّهِ إِنَّا كُنَّا أَحْرَمْنَا وَكَانَ ‏ ‏أَبُو قَتَادَةَ ‏ ‏لَمْ يُحْرِمْ فَرَأَيْنَا حُمُرَ وَحْشٍ فَحَمَلَ عَلَيْهَا ‏ ‏أَبُو قَتَادَةَ ‏ ‏فَعَقَرَ مِنْهَا أَتَانًا فَنَزَلْنَا فَأَكَلْنَا مِنْ لَحْمِهَا فَقُلْنَا نَأْكُلُ لَحْمَ صَيْدٍ وَنَحْنُ مُحْرِمُونَ فَحَمَلْنَا مَا بَقِيَ مِنْ لَحْمِهَا فَقَالَ ‏ ‏هَلْ مِنْكُمْ أَحَدٌ أَمَرَهُ أَوْ أَشَارَ إِلَيْهِ بِشَيْءٍ قَالَ قَالُوا لَا قَالَ فَكُلُوا مَا بَقِيَ مِنْ لَحْمِهَا ‏

‏و حَدَّثَنَاه ‏ ‏مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى ‏ ‏حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏شُعْبَةُ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنِي ‏ ‏الْقَاسِمُ بْنُ زَكَرِيَّاءَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عُبَيْدُ اللَّهِ ‏ ‏عَنْ ‏ ‏شَيْبَانَ ‏ ‏جَمِيعًا ‏ ‏عَنْ ‏ ‏عُثْمَانَ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ مَوْهَبٍ ‏ ‏بِهَذَا الْإِسْنَادِ ‏ ‏فِي رِوَايَةِ ‏ ‏شَيْبَانَ ‏ ‏فَقَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏أَمِنْكُمْ أَحَدٌ أَمَرَهُ أَنْ يَحْمِلَ عَلَيْهَا أَوْ أَشَارَ إِلَيْهَا ‏ ‏وَفِي رِوَايَةِ ‏ ‏شُعْبَةَ ‏ ‏قَالَ أَشَرْتُمْ أَوْ أَعَنْتُمْ أَوْ أَصَدْتُمْ ‏ ‏قَالَ ‏ ‏شُعْبَةُ ‏ ‏لَا أَدْرِي قَالَ أَعَنْتُمْ ‏ ‏أَوْ أَصَدْتُمْ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) ஹஜ் செய்வதற்காகப் புறப்பட்டார்கள். அவர்களுடன் நாங்களும் புறப்பட்டோம். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) தம் தோழர்களில் சிலரை வேறு வழியில் திருப்பிவிட்டார்கள். அவர்களில் நானும் ஒருவன். அப்போது, “கடற்கரை வழியாகச் செல்லுங்கள்; நாம் சந்திப்போம்” என்று கூறினார்கள். அவ்வாறே நபித்தோழர்கள் கடற்கரை வழியாகச் செல்லத் தொடங்கினர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் நபித்தோழர்கள் வந்து சேர்ந்தபோது, என்னைத் தவிர அவர்கள் அனைவரும் இஹ்ராம் பூண்டிருந்தனர். நான் இஹ்ராம் பூண்டிருக்கவில்லை. இவ்வாறு அவர்கள் சென்றுகொண்டிருந்தபோது, காட்டுக் கழுதைகளைக் கண்டனர். அவற்றை நான் தாக்கி, ஒரு பெட்டைக் கழுதையின் காலை வெட்டி(அதை வேட்டையாடி)னேன்.
பிறகு அவர்கள் (ஓரிடத்தில்) இறங்கி அதன் இறைச்சியைச் சாப்பிட்டனர்; “நாம் இஹ்ராம் பூண்ட நிலையில் (வேட்டைப் பிராணியின்) இறைச்சியைச் சாப்பிட்டுவிட்டோமே” என்று கூறினர்.

பிறகு அந்தக் கழுதையின் இறைச்சியில் எஞ்சியுள்ளதை எடுத்துக்கொண்டு, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்று “அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் இஹ்ராம் பூண்டிருந்தோம்; அபூகத்தாதா இஹ்ராம் பூண்டிருக்கவில்லை. இந்நிலையில் நாங்கள் (வழியில்) காட்டுக் கழுதையைக் கண்டோம். அபூகத்தாதா அவற்றைத் தாக்கி, ஒரு பெட்டைக் கழுதையின் காலை வெட்டி(வேட்டை யாடி)னார். பின்னர் நாங்கள் (ஓரிடத்தில்) இறங்கி அதன் இறைச்சியிலிருந்து சிறிதளவை உண்டோம். பிறகு, ‘வேட்டையாடப்பெற்ற பிராணியின் இறைச்சியை இஹ்ராம் பூண்டிருந்த நிலையில் சாப்பிடுகிறோமே’ என்று (எங்களிடையே) பேசிக்கொண்டோம். பிறகு அதன் இறைச்சியில் எஞ்சியதை எடுத்துவந்திருக்கிறோம்” என்று கூறினர்.

அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “உங்களில் எவரேனும் அதைத் தாக்குமாறு அவரைப் பணித்தாரா, அல்லது அதை நோக்கி சைகை ஏதும் செய்தாரா?” என்று கேட்டார்கள். அதற்கு நபித்தோழர்கள் ‘இல்லை’ என்றனர். “அப்படியானால் அதன் எஞ்சிய இறைச்சியை நீங்கள் உண்ணுங்கள்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அபூகத்தாதா (ரலி) வழியாக அவருடைய மகன் அப்துல்லாஹ் (ரஹ்)

குறிப்புகள் : ஷைபான் (ரஹ்) வழி அறிவிப்பில், “உங்களில் யாரேனும் அதைத் தாக்குமாறு அவரைத் தூண்டினாரா, அல்லது தாக்குமாறு சைகை செய்தாரா?” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கேட்டார்கள் என இடம்பெற்றுள்ளது.

ஷுஅபா (ரஹ்) வழி அறிவிப்பில் “நீங்கள் சைகை செய்தீர்களா, அல்லது (அவருக்கு) உதவி செய்தீர்களா, அல்லது நீங்களே வேட்டையாடினீர்களா?” என்று கேட்டார்கள் எனக் காணப்படுகிறது.

“அல்லாஹ்வின் தூதர் (ஸல்), நீங்கள் (அவருக்கு) உதவி செய்தீர்களா என்று கேட்டார்களா? அல்லது நீங்கள் வேட்டையாடினீர்களா என்று கேட்டார்களா” என்று எனக்குச் சரியாக நினைவில்லை என்று ஷுஅபா (ரஹ்) கூறுகின்றார்.

அத்தியாயம்: 15, பாடம்: 08, ஹதீஸ் எண்: 2064

و حَدَّثَنَا ‏ ‏صَالِحُ بْنُ مِسْمَارٍ السُّلَمِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏مُعَاذُ بْنُ هِشَامٍ ‏ ‏حَدَّثَنِي ‏ ‏أَبِي ‏ ‏عَنْ ‏ ‏يَحْيَى بْنِ أَبِي كَثِيرٍ ‏ ‏حَدَّثَنِي ‏ ‏عَبْدُ اللَّهِ بْنُ أَبِي قَتَادَةَ ‏ ‏قَالَ ‏

‏انْطَلَقَ أَبِي مَعَ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏عَامَ ‏ ‏الْحُدَيْبِيَةِ ‏ ‏فَأَحْرَمَ أَصْحَابُهُ وَلَمْ يُحْرِمْ وَحُدِّثَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏أَنَّ عَدُوًّا ‏ ‏بِغَيْقَةَ ‏ ‏فَانْطَلَقَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَالَ فَبَيْنَمَا أَنَا مَعَ أَصْحَابِهِ يَضْحَكُ بَعْضُهُمْ إِلَى بَعْضٍ إِذْ نَظَرْتُ فَإِذَا أَنَا بِحِمَارِ وَحْشٍ فَحَمَلْتُ عَلَيْهِ فَطَعَنْتُهُ ‏ ‏فَأَثْبَتُّهُ ‏ ‏فَاسْتَعَنْتُهُمْ فَأَبَوْا أَنْ يُعِينُونِي فَأَكَلْنَا مِنْ لَحْمِهِ وَخَشِينَا أَنْ نُقْتَطَعَ فَانْطَلَقْتُ أَطْلُبُ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏أَرْفَعُ فَرَسِي ‏ ‏شَأْوًا ‏ ‏وَأَسِيرُ شَأْوًا فَلَقِيتُ رَجُلًا مِنْ ‏ ‏بَنِي غِفَارٍ ‏ ‏فِي جَوْفِ اللَّيْلِ فَقُلْتُ أَيْنَ لَقِيتَ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَالَ تَرَكْتُهُ ‏ ‏بِتَعْهِنَ ‏ ‏وَهُوَ ‏ ‏قَائِلٌ ‏ ‏السُّقْيَا ‏ ‏فَلَحِقْتُهُ فَقُلْتُ يَا رَسُولَ اللَّهِ إِنَّ أَصْحَابَكَ يَقْرَءُونَ عَلَيْكَ السَّلَامَ وَرَحْمَةَ اللَّهِ وَإِنَّهُمْ قَدْ خَشُوا أَنْ يُقْتَطَعُوا دُونَكَ انْتَظِرْهُمْ فَانْتَظَرَهُمْ فَقُلْتُ يَا رَسُولَ اللَّهِ إِنِّي أَصَدْتُ وَمَعِي مِنْهُ فَاضِلَةٌ فَقَالَ النَّبِيُّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏لِلْقَوْمِ ‏ ‏كُلُوا وَهُمْ مُحْرِمُونَ

ஹுதைபியா ஒப்பந்தம் நடந்த ஆண்டில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் நானும் சென்றேன். என் தோழர்கள் இஹ்ராம் பூண்டிருந்தனர். நான் இஹ்ராம் பூண்டிருக்கவில்லை. ‘ஃகைகா’ எனுமிடத்தில் எதிரிகள் இருப்பதாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்குச் செய்தி எட்டியது. எனவே, (எதிரிகளை எதிர்கொள்ள) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) (முன்னே) சென்றார்கள். நான் மற்ற நபித்தோழர்களுடன் (பின் சென்றுகொண்டு) இருந்தபோது, அவர்கள் ஒருவரை யொருவர் பார்த்துச் சிரிக்கலாயினர். நான் கூர்ந்து கவனித்தபோது, ஒரு காட்டுக் கழுதை எனக்குத் தென்பட்டது. உடனே நான் அதை ஈட்டியால் தாக்கி (ஓடவிடாமல்) நிறுத்திவிட்டேன். என் தோழர்களிடம் உதவி கோரினேன். (இஹ்ராம் பூண்டிருந்ததால்) அவர்கள் எனக்கு உதவ மறுத்துவிட்டனர். பிறகு அதன் இறைச்சியை நாங்கள் உண்டோம். இந்நிலையில் (எங்களுக்கு முன்னால் சென்று கொண்டிருந்த) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைப் பிரிந்துவிடுவோமோ என்று நாங்கள் அஞ்சினோம். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைத் தேடி எனது குதிரையைச் சிறிது நேரம் விரைவாகவும் சிறிது நேரம் மெதுவாகவும் ஓட்டிச் சென்றேன். நள்ளிரவில் (வழியில்) நான் ‘பனூ ஃகிஃபார்’ குலத்தைச் சேர்ந்த ஒருவரைச் சந்தித்தபோது, “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை எந்த இடத்தில் கண்டீர்?” என்று கேட்டேன். அதற்கு அவர், “அவர்களை ‘தஅஹின்’ எனும் நீர்நிலையருகே (கண்டு)விட்டுவந்தேன். அப்போது அவர்கள் ‘ஸுக்யா’ எனும் சிற்றூரில் மதிய ஓய்வெடுக்கப் போய்க்கொண்டிருந்தார்கள்” என்று கூறினார்.

நான் அவர்களைச் சென்றடைந்து, “அல்லாஹ்வின் தூதரே! உங்கள் தோழர்கள் உங்களுக்கு ஸலாம் கூறினர். பயணத்தில் உங்களைப் பிரிந்துவிடுவோமோ என்று அவர்கள் அஞ்சினர். (எனவே, அவர்கள் வந்துசேரும்வரை) அவர்களுக்காக நீங்கள் காத்திருங்கள்” என்றேன். அவ்வாறே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) காத்திருந்தார்கள். தொடர்ந்து நான், “அல்லாஹ்வின் தூதரே! நான் (ஒரு காட்டுக் கழுதையை) வேட்டையாடினேன். என்னிடம் அதில் சிறிதளவு எஞ்சியுள்ளது” என்று கூறினேன். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) (தம்முடனிருந்த) மக்களிடம், “உண்ணுங்கள்” என்றார்கள். அப்போது அம்மக்கள் இஹ்ராம் பூண்டிருந்தனர்.

அறிவிப்பாளர் : அபூகத்தாதா (ரலி) வழியாக அவருடைய மகன் அப்துல்லாஹ் (ரஹ்)

அத்தியாயம்: 15, பாடம்: 08, ஹதீஸ் எண்: 2063

و حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ يَحْيَى ‏ ‏قَالَ قَرَأْتُ عَلَى ‏ ‏مَالِكٍ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏قُتَيْبَةُ ‏ ‏عَنْ ‏ ‏مَالِكٍ ‏ ‏فِيمَا قُرِئَ عَلَيْهِ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي النَّضْرِ ‏ ‏عَنْ ‏ ‏نَافِعٍ ‏ ‏مَوْلَى ‏ ‏أَبِي قَتَادَةَ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي قَتَادَةَ ‏ ‏رَضِيَ اللَّهُ عَنْهُ ‏

‏أَنَّهُ كَانَ مَعَ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏حَتَّى إِذَا كَانَ بِبَعْضِ طَرِيقِ ‏ ‏مَكَّةَ ‏ ‏تَخَلَّفَ مَعَ أَصْحَابٍ لَهُ مُحْرِمِينَ وَهُوَ غَيْرُ مُحْرِمٍ فَرَأَى حِمَارًا وَحْشِيًّا فَاسْتَوَى عَلَى فَرَسِهِ فَسَأَلَ أَصْحَابَهُ أَنْ يُنَاوِلُوهُ سَوْطَهُ فَأَبَوْا عَلَيْهِ فَسَأَلَهُمْ رُمْحَهُ فَأَبَوْا عَلَيْهِ فَأَخَذَهُ ثُمَّ شَدَّ عَلَى الْحِمَارِ فَقَتَلَهُ فَأَكَلَ مِنْهُ بَعْضُ ‏ ‏أَصْحَابِ النَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏وَأَبَى بَعْضُهُمْ فَأَدْرَكُوا رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَسَأَلُوهُ عَنْ ذَلِكَ فَقَالَ ‏ ‏إِنَّمَا هِيَ ‏ ‏طُعْمَةٌ ‏ ‏أَطْعَمَكُمُوهَا اللَّهُ ‏
‏و حَدَّثَنَا ‏ ‏قُتَيْبَةُ ‏ ‏عَنْ ‏ ‏مَالِكٍ ‏ ‏عَنْ ‏ ‏زَيْدِ بْنِ أَسْلَمَ ‏ ‏عَنْ ‏ ‏عَطَاءِ بْنِ يَسَارٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي قَتَادَةَ ‏ ‏رَضِيَ اللَّهُ عَنْهُ ‏ ‏فِي حِمَارِ الْوَحْشِ مِثْلَ حَدِيثِ ‏ ‏أَبِي النَّضْرِ ‏ ‏غَيْرَ أَنَّ فِي حَدِيثِ ‏ ‏زَيْدِ بْنِ أَسْلَمَ ‏ ‏أَنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَالَ هَلْ مَعَكُمْ مِنْ لَحْمِهِ شَيْءٌ

நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் (ஒரு பயணத்தில்) இருந்தேன். மக்கா செல்லும் சாலை ஒன்றில் நான் இருந்தபோது, இஹ்ராம் பூண்டிருந்த என் தோழர்கள் சிலருடன் பின்தங்கிவிட்டேன். அப்போது நான் இஹ்ராம் பூண்டிருக்கவில்லை. இந்நிலையில் நான் (வழியில்) காட்டுக் கழுதையொன்றைக் கண்டு, எனது குதிரைமேல் அமர்ந்தேன். அப்போது என் தோழர்களிடம் என் சாட்டையை எடுத்துத் தரும்படிக் கேட்டேன். அவர்கள் (இஹ்ராம் பூண்டிருந்ததால் அதை எடுத்துத் தர) மறுத்துவிட்டார்கள். அவர்களிடம் எனது ஈட்டியை எடுத்துத் தரும்படிக் கேட்டேன். அதற்கும் அவர்கள் மறுத்துவிட்டார்கள். ஆகவே, நானே (இறங்கி) அதையெடுத்து அந்தக் கழுதையைத் தாக்கிக் கொன்றேன். நபித்தோழர்களில் சிலர் அதிலிருந்து உண்டார்கள். வேறுசிலர் (உண்ண) மறுத்துவிட்டனர். நபித்தோழர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் போய்ச் சேர்ந்தபோது, அதைப் பற்றி அவர்களிடம் கேட்டார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “இதுவெல்லாம் அல்லாஹ் உங்களுக்கு உண்ணக் கொடுத்த உணவாகும்” என்று விடையளித்தார்கள்.

அறிவிப்பாளர் : அபூகத்தாதா (ரலி)

குறிப்பு : ஸைதிப்னு அஸ்லம் (ரஹ்) வழி அறிவிப்பில், “உங்களிடம் அதன் இறைச்சியிலிருந்து ஏதேனும் (எனக்கு எஞ்சி) உள்ளதா?” என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கேட்டார்கள் என்று இடம்பெற்றுள்ளது.

அத்தியாயம்: 15, பாடம்: 08, ஹதீஸ் எண்: 2062

و حَدَّثَنَا ‏ ‏قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏سُفْيَانُ ‏ ‏عَنْ ‏ ‏صَالِحِ بْنِ كَيْسَانَ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏ابْنُ أَبِي عُمَرَ ‏ ‏وَاللَّفْظُ لَهُ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏سُفْيَانُ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏صَالِحُ بْنُ كَيْسَانَ ‏ ‏قَالَ سَمِعْتُ ‏ ‏أَبَا مُحَمَّدٍ ‏ ‏مَوْلَى ‏ ‏أَبِي قَتَادَةَ ‏ ‏يَقُولُ سَمِعْتُ ‏ ‏أَبَا قَتَادَةَ ‏ ‏يَقُولُا ‏

‏خَرَجْنَا مَعَ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏حَتَّى إِذَا كُنَّا ‏ ‏بِالْقَاحَةِ ‏ ‏فَمِنَّا الْمُحْرِمُ وَمِنَّا غَيْرُ الْمُحْرِمِ إِذْ بَصُرْتُ بِأَصْحَابِي يَتَرَاءَوْنَ شَيْئًا فَنَظَرْتُ فَإِذَا حِمَارُ وَحْشٍ فَأَسْرَجْتُ فَرَسِي وَأَخَذْتُ رُمْحِي ثُمَّ رَكِبْتُ فَسَقَطَ مِنِّي سَوْطِي فَقُلْتُ لِأَصْحَابِي وَكَانُوا مُحْرِمِينَ نَاوِلُونِي السَّوْطَ فَقَالُوا وَاللَّهِ لَا نُعِينُكَ عَلَيْهِ بِشَيْءٍ فَنَزَلْتُ فَتَنَاوَلْتُهُ ثُمَّ رَكِبْتُ فَأَدْرَكْتُ الْحِمَارَ مِنْ خَلْفِهِ وَهُوَ وَرَاءَ ‏ ‏أَكَمَةٍ ‏ ‏فَطَعَنْتُهُ بِرُمْحِي ‏ ‏فَعَقَرْتُهُ ‏ ‏فَأَتَيْتُ بِهِ أَصْحَابِي فَقَالَ بَعْضُهُمْ كُلُوهُ وَقَالَ بَعْضُهُمْ لَا تَأْكُلُوهُ وَكَانَ النَّبِيُّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏أَمَامَنَا فَحَرَّكْتُ فَرَسِي فَأَدْرَكْتُهُ فَقَالَ ‏ ‏هُوَ حَلَالٌ فَكُلُوهُ

நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் (ஹஜ்ஜுக்காகப்) புறப்பட்டுச் சென்றோம். எங்களில் இஹ்ராம் பூண்டவர்களும் இஹ்ராம் பூணாதவர்களும் இருந்தனர். (நான் இஹ்ராம் பூண்டிருக்கவில்லை.) நாங்கள் (மதீனாவிற்கு அருகிலுள்ள) ‘அல்காஹா’ எனுமிடத்தில் இருந்தபோது, என் தோழர்கள் எதையோ உன்னிப்பாகக் கவனிப்பதைக் கண்டேன். நான் கூர்ந்து பார்த்தபோது ஒரு காட்டுக் கழுதை தென்பட்டது. உடனே நான் என் குதிரையின் சேணத்தைப் பூட்டி, எனது ஈட்டியை எடுத்துக்கொண்டு (குதிரையில்) ஏறினேன். அப்போது என் (கையிலிருந்து) சாட்டை கீழே விழுந்துவிட்டது. அதை எடுத்துத் தருமாறு என் தோழர்களிடம் கேட்டேன். அவர்கள் இஹ்ராம் பூண்டிருப்பதால், “அல்லாஹ்வின் மீதாணையாக! இந்த விஷயத்தில் உமக்கு எந்த உதவியும் செய்ய மாட்டோம்” என்று கூறிவிட்டார்கள். எனவே, நானே இறங்கி அதை எடுத்துக்கொண்டு (குதிரையில்) ஏறி, மணல் மேட்டுக்கு அப்பாலிருந்த அந்தக் கழுதைக்குப் பின்னால் (மறைந்து) சென்று, அதை நோக்கி என் ஈட்டியை எறிந்தேன். பிறகு அதை அறுத்து என் தோழர்களிடம் கொண்டுவந்தேன். அப்போது அவர்களில் சிலர் “உண்ணுங்கள்” என்றனர். வேறு சிலர் “உண்ணாதீர்கள்” என்றனர். அப்போது நபி (ஸல்) எங்களுக்கு முன்னால் (சென்று ஓரிடத்தில் தங்கி) இருந்தார்கள். ஆகவே, நான் எனது குதிரையை முடுக்கி, அவர்களிடம் போ(ய் அதை இஹ்ராம் பூண்டவர்கள் உண்பதைப் பற்றி வினவி)னேன். அதற்கு நபி (ஸல்), “அது அனுமதிக்கப்பெற்றதுதான். எனவே, அதை உண்ணுங்கள்” என்று அனுமதித்தார்கள்.

அறிவிப்பாளர் : அபூகத்தாதா (ரலி)

அத்தியாயம்: 15, பாடம்: 08, ஹதீஸ் எண்: 2061

و حَدَّثَنِي ‏ ‏زُهَيْرُ بْنُ حَرْبٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ سَعِيدٍ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ جُرَيْجٍ ‏ ‏قَالَ أَخْبَرَنِي ‏ ‏الْحَسَنُ بْنُ مُسْلِمٍ ‏ ‏عَنْ ‏ ‏طَاوُسٍ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ عَبَّاسٍ ‏ ‏رَضِيَ اللَّهُ عَنْهُمَا ‏ ‏قَالَ ‏

‏قَدِمَ ‏ ‏زَيْدُ بْنُ أَرْقَمَ ‏ ‏فَقَالَ لَهُ ‏ ‏عَبْدُ اللَّهِ بْنُ عَبَّاسٍ ‏ ‏يَسْتَذْكِرُهُ كَيْفَ أَخْبَرْتَنِي عَنْ لَحْمِ صَيْدٍ أُهْدِيَ إِلَى رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏وَهُوَ حَرَامٌ قَالَ قَالَ أُهْدِيَ لَهُ عُضْوٌ مِنْ لَحْمِ صَيْدٍ فَرَدَّهُ فَقَالَ ‏ ‏إِنَّا لَا نَأْكُلُهُ إِنَّا ‏ ‏حُرُمٌ

ஸைத் பின் அர்கம் (ரலி) (என்னிடம்) வந்தபோது, “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) இஹ்ராம் பூண்டிருந்த வேளையில், அவர்களுக்கு வேட்டைப் பிராணியின் இறைச்சி அன்பளிப்பாக வழங்கப்பட்டது குறித்து எனக்கு நீங்கள் எவ்வாறு அறிவித்தீர்கள்?” என நினைவுபடுத்துமாறு கேட்டேன். அதற்கு அவர்கள், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு வேட்டைப் பிராணியின் இறைச்சியில் ஒரு பகுதி அன்பளிப்பாக வழங்கப்பட்டது. அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்)“நாம் இதை உண்ணமாட்டோம். (ஏனெனில்) நாம் இஹ்ராம் பூண்டிருக்கின்றோம்’ என்று கூறினார்கள்” என்றார்கள்.

அறிவிப்பாளர் : இபுனு அப்பாஸ் (ரலி)

அத்தியாயம்: 15, பாடம்: 08, ஹதீஸ் எண்: 2060

و حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏وَأَبُو كُرَيْبٍ ‏ ‏قَالَا حَدَّثَنَا ‏ ‏أَبُو مُعَاوِيَةَ ‏ ‏عَنْ ‏ ‏الْأَعْمَشِ ‏ ‏عَنْ ‏ ‏حَبِيبِ بْنِ أَبِي ثَابِتٍ ‏ ‏عَنْ ‏ ‏سَعِيدِ بْنِ جُبَيْرٍ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ عَبَّاسٍ ‏ ‏رَضِيَ اللَّهُ عَنْهُمَا ‏ ‏قَالَ ‏
‏أَهْدَى ‏ ‏الصَّعْبُ بْنُ جَثَّامَةَ ‏ ‏إِلَى النَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏حِمَارَ وَحْشٍ وَهُوَ مُحْرِمٌ فَرَدَّهُ عَلَيْهِ وَقَالَ ‏ ‏لَوْلَا أَنَّا مُحْرِمُونَ لَقَبِلْنَاهُ مِنْكَ ‏

‏و حَدَّثَنَاه ‏ ‏يَحْيَى بْنُ يَحْيَى ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏الْمُعْتَمِرُ بْنُ سُلَيْمَانَ ‏ ‏قَالَ سَمِعْتُ ‏ ‏مَنْصُورًا ‏ ‏يُحَدِّثُ عَنْ ‏ ‏الْحَكَمِ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى ‏ ‏وَابْنُ بَشَّارٍ ‏ ‏قَالَا حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏شُعْبَةُ ‏ ‏عَنْ ‏ ‏الْحَكَمِ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏عُبَيْدُ اللَّهِ بْنُ مُعَاذٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبِي ‏ ‏حَدَّثَنَا ‏ ‏شُعْبَةُ ‏ ‏جَمِيعًا ‏ ‏عَنْ ‏ ‏حَبِيبٍ ‏ ‏عَنْ ‏ ‏سَعِيدِ بْنِ جُبَيْرٍ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ عَبَّاسٍ ‏ ‏رَضِيَ اللَّهُ عَنْهُمَا ‏ ‏فِي رِوَايَةِ ‏ ‏مَنْصُورٍ ‏ ‏عَنْ ‏ ‏الْحَكَمِ ‏ ‏أَهْدَى ‏ ‏الصَّعْبُ بْنُ جَثَّامَةَ ‏ ‏إِلَى النَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏رِجْلَ حِمَارِ وَحْشٍ ‏ ‏وَفِي رِوَايَةِ ‏ ‏شُعْبَةَ ‏ ‏عَنْ ‏ ‏الْحَكَمِ ‏ ‏عَجُزَ ‏ ‏حِمَارِ وَحْشٍ يَقْطُرُ دَمًا ‏ ‏وَفِي رِوَايَةِ ‏ ‏شُعْبَةَ ‏ ‏عَنْ ‏ ‏حَبِيبٍ ‏ ‏أُهْدِيَ لِلنَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏شِقُّ ‏ ‏حِمَارِ وَحْشٍ فَرَدَّهُ

நபி (ஸல்) இஹ்ராம் பூண்டிருந்தபோது, அவர்களுக்கு ஸஅப் பின் ஜஸ்ஸாமா (ரலி) ஒரு காட்டுக் கழுதையை அன்பளிப்பாக வழங்கினார்கள். நபியவர்கள் அதை ஏற்க மறுத்துவிட்டார்கள். மேலும், “நாம் இஹ்ராம் பூண்டிருக்காவிட்டால், அதை உம்மிடமிருந்து ஏற்றிருப்போம்” என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் : இபுனு அப்பாஸ் (ரலி)

குறிப்பு : மன்ஸூர் பின் அல்முஅதமிர் (ரஹ்) வழி அறிவிப்பில், “நபி (ஸல்) அவர்களுக்கு ஸஅப் பின் ஜஸ்ஸாமா (ரலி), காட்டுக் கழுதையின் ஒரு காலை அன்பளிப்பாக வழங்கினார்கள்” என்று காணப்படுகிறது. ஷுஅபா (ரஹ்) வழி அறிவிப்பில் “ரத்தம் சொட்டிக்கொண்டிருந்த காட்டுக் கழுதையின் பின் சப்பையை … ” என்று இடம் பெற்றுள்ளது. அல் ஹகம் (ரஹ்) வழி அறிவிப்பில் “நபி (ஸல்) அவர்களுக்குக் காட்டுக் கழுதையின் விலாப் பகுதி அன்பளிப்பாக வழங்கப்பட்டது. அவர்கள் அதை ஏற்க மறுத்துவிட்டார்கள்” என்று இடம்பெற்றுள்ளது.

அத்தியாயம்: 15, பாடம்: 08, ஹதீஸ் எண்: 2059

حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ يَحْيَى ‏ ‏قَالَ قَرَأْتُ عَلَى ‏ ‏مَالِكٍ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ شِهَابٍ ‏ ‏عَنْ ‏ ‏عُبَيْدِ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ عَبَّاسٍ ‏ ‏عَنْ ‏ ‏الصَّعْبِ بْنِ جَثَّامَةَ اللَّيْثِيِّ ‏
‏أَنَّهُ أَهْدَى لِرَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏حِمَارًا وَحْشِيًّا وَهُوَ ‏ ‏بِالْأَبْوَاءِ ‏ ‏أَوْ ‏ ‏بِوَدَّانَ ‏ ‏فَرَدَّهُ عَلَيْهِ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَالَ فَلَمَّا أَنْ رَأَى رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏مَا فِي وَجْهِي قَالَ ‏ ‏إِنَّا لَمْ نَرُدَّهُ عَلَيْكَ إِلَّا أَنَّا ‏ ‏حُرُمٌ ‏

‏حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ يَحْيَى ‏ ‏وَمُحَمَّدُ بْنُ رُمْحٍ ‏ ‏وَقُتَيْبَةُ ‏ ‏جَمِيعًا ‏ ‏عَنْ ‏ ‏اللَّيْثِ بْنِ سَعْدٍ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏عَبْدُ بْنُ حُمَيْدٍ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏عَبْدُ الرَّزَّاقِ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏مَعْمَرٌ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏حَسَنٌ الْحُلْوَانِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏يَعْقُوبُ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبِي ‏ ‏عَنْ ‏ ‏صَالِحٍ ‏ ‏كُلُّهُمْ ‏ ‏عَنْ ‏ ‏الزُّهْرِيِّ ‏ ‏بِهَذَا الْإِسْنَادِ ‏ ‏أَهْدَيْتُ لَهُ حِمَارَ وَحْشٍ كَمَا قَالَ ‏ ‏مَالِكٌ ‏ ‏وَفِي حَدِيثِ ‏ ‏اللَّيْثِ ‏ ‏وَصَالِحٍ ‏ ‏أَنَّ ‏ ‏الصَّعْبَ بْنَ جَثَّامَةَ ‏ ‏أَخْبَرَهُ ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ يَحْيَى ‏ ‏وَأَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏وَعَمْرٌو النَّاقِدُ ‏ ‏قَالُوا حَدَّثَنَا ‏ ‏سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ ‏ ‏عَنْ ‏ ‏الزُّهْرِيِّ ‏ ‏بِهَذَا الْإِسْنَادِ وَقَالَ ‏ ‏أَهْدَيْتُ لَهُ مِنْ لَحْمِ حِمَارِ وَحْشٍ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) (மக்காவிற்கும் மதீனாவிற்கும் இடையிலுள்ள) ‘அல்அப்வா’ அல்லது ‘வத்தான்’ எனுமிடத்தில் இருந்தபோது, நான் அவர்களுக்கு ஒரு காட்டுக் கழுதையை அன்பளிப்பாக வழங்கினேன். அவர்கள் அதை ஏற்க மறுத்துவிட்டார்கள். எனது முகத்தில் ஏற்பட்ட(மாற்றத்)தை அவர்கள் கண்டுவிட்டு, “நாம் இஹ்ராம் பூண்டிருப்பதால்தான் இதை ஏற்க மறுத்தோம்” என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் : இபுனு அப்பாஸ் (ரலி) வழியாக ஸஅப் பின் ஜஸ்ஸாமா அல்லைஸீ (ரலி)

குறிப்பு : ஸுஃப்யான் பின் உயைனா (ரஹ்) வழி அறிவிப்பில், “நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்குக் காட்டுக் கழுதையின் இறைச்சியை அன்பளிப்பாக வழங்கினேன்” என ஸஅப் பின் ஜஸ்ஸாமா (ரலி) கூறினார்கள் என இடம்பெற்றுள்ளது.