حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ الْقَعْنَبِيُّ وَيَحْيَى بْنُ يَحْيَى وَقُتَيْبَةُ بْنُ سَعِيدٍ أَمَّا الْقَعْنَبِيُّ فَقَالَ قَرَأْتُ عَلَى مَالِكِ بْنِ أَنَسٍ وَأَمَّا قُتَيْبَةُ فَقَالَ حَدَّثَنَا مَالِكٌ و قَالَ يَحْيَى وَاللَّفْظُ لَهُ قُلْتُ لِمَالِكٍ أَحَدَّثَكَ ابْنُ شِهَابٍ عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ:
أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ دَخَلَ مَكَّةَ عَامَ الْفَتْحِ وَعَلَى رَأْسِهِ مِغْفَرٌ فَلَمَّا نَزَعَهُ جَاءَهُ رَجُلٌ فَقَالَ ابْنُ خَطَلٍ مُتَعَلِّقٌ بِأَسْتَارِ الْكَعْبَةِ فَقَالَ اقْتُلُوهُ فَقَالَ مَالِكٌ نَعَمْ
நான் மாலிக் பின் அனஸ் (ரஹ்) அவர்களிடம், “நபி (ஸல்) மக்கா வெற்றி ஆண்டில் (இஹ்ராம் இல்லாத நிலையில்) தலையில் இரும்புத் தொப்பியுடன் மக்காவினுள் நுழைந்தார்கள். அதை அவர்கள் கழற்றியபோது ஒருவர் வந்து, ‘இப்னு கத்தல் (அபயம் வேண்டி) கஅபாவின் திரைகளைப் பிடித்துக்கொண்டிருக்கின்றான்’ என்று கூறினார். அப்போது நபி (ஸல்) ‘அவனைக் கொன்றுவிடுங்கள்’ என உத்தரவிட்டார்கள் என அனஸ் (ரலி) அவர்களிடமிருந்து இப்னு ஷிஹாப் (ரஹ்) தங்களுக்கு அறிவித்தார்களா?” என்று கேட்டேன். அதற்கு மாலிக் பின் அனஸ் (ரஹ்) “ஆம்” என்றார்கள்.
அறிவிப்பாளர் : அனஸ் (ரலி) வழியாக யஹ்யா பின் யஹ்யா (ரஹ்)