அத்தியாயம்: 15, பாடம்: 84, ஹதீஸ் எண்: 2421

‏و حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏وَالْحَسَنُ الْحُلْوَانِيُّ ‏ ‏قَالَا حَدَّثَنَا ‏ ‏أَبُو أُسَامَةَ ‏ ‏عَنْ ‏ ‏مُسَاوِرٍ الْوَرَّاقِ ‏ ‏قَالَ حَدَّثَنِي ‏ ‏وَفِي رِوَايَةِ ‏ ‏الْحُلْوَانِيِّ ‏ ‏قَالَ سَمِعْتُ ‏ ‏جَعْفَرَ بْنَ عَمْرِو بْنِ حُرَيْثٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِيهِ ‏ ‏قَالَ: ‏

كَأَنِّي أَنْظُرُ إِلَى رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏عَلَى الْمِنْبَرِ ‏ ‏وَعَلَيْهِ عِمَامَةٌ سَوْدَاءُ قَدْ أَرْخَى طَرَفَيْهَا بَيْنَ كَتِفَيْهِ ‏


وَلَمْ يَقُلْ ‏ ‏أَبُو بَكْرٍ ‏ ‏عَلَى الْمِنْبَرِ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) (மக்கா வெற்றி நாளில்) தலையில் கறுப்புத் தலைப்பாகை கட்டி, அதன் இரு ஓரங்களையும் தம் தோள்களுக்குமிடையே தொங்கவிட்டவர்களாகச் சொற்பொழிவு மேடை மீதிருந்ததை இப்போதும் என் மனக்கண்ணால் காண்கின்றேன்.

அறிவிப்பாளர் : அம்ரு பின் ஹுரைஸ் (ரலி)


குறிப்பு :

அபூபக்ரு பின் அபீஷைபா (ரஹ்) வழி அறிவிப்பில் “சொற்பொழிவு மேடை மீதிருந்ததை…“ எனும் குறிப்பு இடம்பெறவில்லை.

அத்தியாயம்: 15, பாடம்: 84, ஹதீஸ் எண்: 2420

‏حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ يَحْيَى ‏ ‏وَإِسْحَقُ بْنُ إِبْرَاهِيمَ ‏ ‏قَالَا أَخْبَرَنَا ‏ ‏وَكِيعٌ ‏ ‏عَنْ ‏ ‏مُسَاوِرٍ الْوَرَّاقِ ‏ ‏عَنْ ‏ ‏جَعْفَرِ بْنِ عَمْرِو بْنِ حُرَيْثٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِيهِ: ‏

أَنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏خَطَبَ النَّاسَ وَعَلَيْهِ عِمَامَةٌ سَوْدَاءُ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) (மக்கா வெற்றி நாளில்) தலையில் கறுப்புத் தலைப்பாகை கட்டிய நிலையில் மக்களுக்கு உரை நிகழ்த்தினார்கள்.

அறிவிப்பாளர் : அம்ரு பின் ஹுரைஸ் (ரலி)

அத்தியாயம்: 15, பாடம்: 84, ஹதீஸ் எண்: 2419

‏حَدَّثَنَا ‏ ‏عَلِيُّ بْنُ حَكِيمٍ الْأَوْدِيُّ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏شَرِيكٌ ‏ ‏عَنْ ‏ ‏عَمَّارٍ الدُّهْنِيِّ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي الزُّبَيْرِ ‏ ‏عَنْ ‏ ‏جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ: ‏

أَنَّ النَّبِيَّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏دَخَلَ يَوْمَ فَتْحِ ‏ ‏مَكَّةَ ‏ ‏وَعَلَيْهِ عِمَامَةٌ سَوْدَاءُ

நபி (ஸல்) மக்கா வெற்றி நாளில் தலையில் கறுப்புத் தலைப்பாகையுடன் (மக்காவினுள்) நுழைந்தார்கள்.

அறிவிப்பாளர் : ஜாபிர் (ரலி)

அத்தியாயம்: 15, பாடம்: 84, ஹதீஸ் எண்: 2418

‏حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ يَحْيَى التَّمِيمِيُّ ‏ ‏وَقُتَيْبَةُ بْنُ سَعِيدٍ الثَّقَفِيُّ ‏ ‏و قَالَ ‏ ‏يَحْيَى ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏و قَالَ ‏ ‏قُتَيْبَةُ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏مُعَاوِيَةُ بْنُ عَمَّارٍ الدُّهْنِيُّ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي الزُّبَيْرِ ‏ ‏عَنْ ‏ ‏جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ الْأَنْصَارِيِّ: ‏

أَنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏دَخَلَ ‏ ‏مَكَّةَ ‏ ‏وَقَالَ ‏ ‏قُتَيْبَةُ ‏ ‏دَخَلَ يَوْمَ فَتْحِ ‏ ‏مَكَّةَ ‏ ‏وَعَلَيْهِ عِمَامَةٌ سَوْدَاءُ بِغَيْرِ إِحْرَامٍ ‏


وَفِي رِوَايَةِ ‏ ‏قُتَيْبَةَ ‏ ‏قَالَ حَدَّثَنَا ‏ ‏أَبُو الزُّبَيْرِ ‏ ‏عَنْ ‏ ‏جَابِرٍ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) இஹ்ராமின்றி தலையில் கறுப்புத் தலைப்பாகை அணிந்த நிலையில் மக்காவிற்குள் நுழைந்தார்கள்.

அறிவிப்பாளர் : ஜாபிர் (ரலி)


குறிப்பு :

குதைபா (ரஹ்) வழி அறிவிப்பில், “மக்காவின் வெற்றி நாளில் நுழைந்தார்கள்” என்ற கூடுதல் தகவலுடன் இடம் பெற்றுள்ளது.

அத்தியாயம்: 15, பாடம்: 84, ஹதீஸ் எண்: 2417

‏حَدَّثَنَا ‏ ‏عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ الْقَعْنَبِيُّ ‏ ‏وَيَحْيَى بْنُ يَحْيَى ‏ ‏وَقُتَيْبَةُ بْنُ سَعِيدٍ ‏ ‏أَمَّا ‏ ‏الْقَعْنَبِيُّ ‏ ‏فَقَالَ قَرَأْتُ عَلَى ‏ ‏مَالِكِ بْنِ أَنَسٍ ‏ ‏وَأَمَّا ‏ ‏قُتَيْبَةُ ‏ ‏فَقَالَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏مَالِكٌ ‏ ‏و قَالَ ‏ ‏يَحْيَى ‏ ‏وَاللَّفْظُ لَهُ قُلْتُ ‏ ‏لِمَالِكٍ ‏ ‏أَحَدَّثَكَ ‏ ‏ابْنُ شِهَابٍ ‏ ‏عَنْ ‏ ‏أَنَسِ بْنِ مَالِكٍ: ‏

أَنَّ النَّبِيَّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏دَخَلَ ‏ ‏مَكَّةَ ‏ ‏عَامَ الْفَتْحِ وَعَلَى رَأْسِهِ ‏ ‏مِغْفَرٌ ‏ ‏فَلَمَّا نَزَعَهُ جَاءَهُ رَجُلٌ فَقَالَ ‏ ‏ابْنُ خَطَلٍ ‏ ‏مُتَعَلِّقٌ بِأَسْتَارِ ‏ ‏الْكَعْبَةِ ‏ ‏فَقَالَ اقْتُلُوهُ فَقَالَ ‏ ‏مَالِكٌ ‏ ‏نَعَمْ

நான் மாலிக் பின் அனஸ் (ரஹ்) அவர்களிடம், “நபி (ஸல்) மக்கா வெற்றி ஆண்டில் (இஹ்ராம் இல்லாத நிலையில்) தலையில் இரும்புத் தொப்பியுடன்  மக்காவினுள் நுழைந்தார்கள். அதை அவர்கள் கழற்றியபோது ஒருவர் வந்து, ‘இப்னு கத்தல் (அபயம் வேண்டி) கஅபாவின் திரைகளைப் பிடித்துக்கொண்டிருக்கின்றான்’ என்று கூறினார். அப்போது நபி (ஸல்) ‘அவனைக் கொன்றுவிடுங்கள்’ என உத்தரவிட்டார்கள் என அனஸ் (ரலி) அவர்களிடமிருந்து இப்னு ஷிஹாப் (ரஹ்) தங்களுக்கு அறிவித்தார்களா?” என்று கேட்டேன். அதற்கு மாலிக் பின் அனஸ் (ரஹ்) “ஆம்” என்றார்கள்.

அறிவிப்பாளர் : அனஸ் (ரலி) வழியாக யஹ்யா பின் யஹ்யா (ரஹ்)