و حَدَّثَنَا إِسْحَقُ بْنُ إِبْرَاهِيمَ وَعَبْدُ بْنُ حُمَيْدٍ جَمِيعًا عَنْ الْعَقَدِيِّ قَالَ عَبْدٌ أَخْبَرَنَا عَبْدُ الْمَلِكِ بْنُ عَمْرٍو حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ جَعْفَرٍ عَنْ إِسْمَعِيلَ بْنِ مُحَمَّدٍ عَنْ عَامِرِ بْنِ سَعْدٍ:
أَنَّ سَعْدًا رَكِبَ إِلَى قَصْرِهِ بِالْعَقِيقِ فَوَجَدَ عَبْدًا يَقْطَعُ شَجَرًا أَوْ يَخْبِطُهُ فَسَلَبَهُ فَلَمَّا رَجَعَ سَعْدٌ جَاءَهُ أَهْلُ الْعَبْدِ فَكَلَّمُوهُ أَنْ يَرُدَّ عَلَى غُلَامِهِمْ أَوْ عَلَيْهِمْ مَا أَخَذَ مِنْ غُلَامِهِمْ فَقَالَ مَعَاذَ اللَّهِ أَنْ أَرُدَّ شَيْئًا نَفَّلَنِيهِ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَأَبَى أَنْ يَرُدَّ عَلَيْهِمْ
ஸஅத் பின் அபீவக்காஸ் (ரலி) (மதீனாவிற்கு அருகில்) ‘அகீக்’ எனுமிடத்திலிருந்த தமது பண்ணை வீட்டிற்கு வாகனத்தில் புறப்பட்டார்கள். (வழியில்) அடிமையொருவர் ஒரு மரத்தை வெட்டிக்கொண்டிருப்பதையோ இலைகளைப் பறித்துக்கொண்டிருப்பதையோ கண்டார்கள். உடனே (அவரைப் பிடித்து) அவரது மேலாடையைக் கழற்றிக்கொண்டார்கள். அவர்கள் (தமது பண்ணை வீட்டிற்கு) வந்துசேர்ந்தபோது அந்த அடிமையின் குடும்பத்தினர் அவர்களிடம் வந்து, தங்கள் அடிமையிடமிருந்து கைப்பற்றியதை அந்த அடிமையிடமோ தங்களிடமோ திரும்பித் தருமாறு கேட்டார்கள். அப்போது ஸஅத் (ரலி), “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) எனக்கு வெகுமதியாக வழங்கிய எதையும் திருப்பித் தருவதிலிருந்து நான் அல்லாஹ்விடம் பாதுகாப்புக் கோருகின்றேன்” எனக் கூறி, அவர்களிடம் அதைத் தர மறுத்துவிட்டார்கள்.
அறிவிப்பாளர் : ஸஅத் பின் அபீவக்காஸ் (ரலி) வழியாக அன்னாரின் மகன் ஆமிர் பின் ஸஅத் (ரஹ்)