அத்தியாயம்: 15, பாடம்: 86, ஹதீஸ் எண்: 2441

‏و حَدَّثَنَا ‏ ‏قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏لَيْثٌ ‏ ‏عَنْ ‏ ‏سَعِيدِ بْنِ أَبِي سَعِيدٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي سَعِيدٍ ‏ ‏مَوْلَى ‏ ‏الْمَهْرِيِّ ‏ ‏أَنَّهُ: ‏

جَاءَ ‏ ‏أَبَا سَعِيدٍ الْخُدْرِيَّ ‏ ‏لَيَالِي ‏ ‏الْحَرَّةِ ‏ ‏فَاسْتَشَارَهُ فِي ‏ ‏الْجَلَاءِ ‏ ‏مِنْ ‏ ‏الْمَدِينَةِ ‏ ‏وَشَكَا إِلَيْهِ أَسْعَارَهَا وَكَثْرَةَ عِيَالِهِ وَأَخْبَرَهُ أَنْ لَا صَبْرَ لَهُ عَلَى جَهْدِ ‏ ‏الْمَدِينَةِ ‏ ‏وَلَأْوَائِهَا ‏ ‏فَقَالَ لَهُ وَيْحَكَ لَا آمُرُكَ بِذَلِكَ إِنِّي سَمِعْتُ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يَقُولُ ‏ ‏لَا يَصْبِرُ أَحَدٌ عَلَى ‏ ‏لَأْوَائِهَا ‏ ‏فَيَمُوتَ إِلَّا كُنْتُ لَهُ شَفِيعًا أَوْ شَهِيدًا يَوْمَ الْقِيَامَةِ إِذَا كَانَ مُسْلِمًا

‘அல்ஹர்ரா’ (போர் நடந்த) நாட்களில் நான் அபூஸயீத் அல்குத்ரீ (ரலி) அவர்களிடம் சென்று, நான் மதீனாவிலிருந்து இடம்பெயர்ந்து செல்வது தொடர்பாக ஆலோசனை கேட்டேன். மேலும், அவர்களிடம் (மதீனாவின்) விலைவாசி (உயர்ந்துள்ளது) பற்றியும், எனது பெரிய குடும்பம் பற்றியும் அவர்களிடம் முறையிட்டேன். மதீனாவின் நெருக்கடியையும் பசி பட்டினியையும் சகித்துக்கொண்டு என்னால் இருக்க முடியாது என்றும் தெரிவித்தேன். அப்போது அபூஸயீத் அல்குத்ரீ (ரலி), “உமக்குக் கேடுதான்!. அதற்கு உம்மை நான் அனுமதிக்க மாட்டேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “மதீனாவின் நெருக்கடிகளைச் சகித்துக்கொண்டு இறந்துபோகும் எவருக்கும் மறுமை நாளில் நான் பரிந்துரைப்பவனாக, அல்லது சான்றுரைப்பவனாக இருப்பேன்; அவர் முஸ்லிமாக இருந்தால்!’ என்று கூறியதை நான் கேட்டுள்ளேன்” என்றார்கள்.

அறிவிப்பாளர் : அபூஸயீத் அல்குத்ரீ (ரலி) வழியாக மஹ்ரீயின் முன்னாள் அடிமையான அபூஸயீத் (ரஹ்)


குறிப்பு :

மேற்காணும் அல்ஹர்ரா போர், ஹிஜ்ரீ 63இல் பஸராவின் ஆட்சியாளர் யஸீத் பின் முஆவியாவுக்கும் மதீனாவின் முஸ்லிம்களுக்கும் நடைபெற்ற போராகும். அந்தக் காலகட்டத்தில் மதீனாவில் பஞ்சம் ஏற்பட்டிருந்தது.

Share this Hadith: