அத்தியாயம்: 15, பாடம்: 86, ஹதீஸ் எண்: 2448

‏و حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ أَيُّوبَ ‏ ‏وَقُتَيْبَةُ ‏ ‏وَابْنُ حُجْرٍ ‏ ‏جَمِيعًا ‏ ‏عَنْ ‏ ‏إِسْمَعِيلَ بْنِ جَعْفَرٍ ‏ ‏عَنْ ‏ ‏الْعَلَاءِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ ‏ ‏عَنْ ‏ ‏أَبِيهِ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي هُرَيْرَةَ: ‏

أَنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَالَ ‏ ‏لَا يَصْبِرُ عَلَى ‏ ‏لَأْوَاءِ ‏ ‏الْمَدِينَةِ ‏ ‏وَشِدَّتِهَا أَحَدٌ مِنْ أُمَّتِي إِلَّا كُنْتُ لَهُ شَفِيعًا يَوْمَ الْقِيَامَةِ أَوْ شَهِيدًا ‏


و حَدَّثَنَا ‏ ‏ابْنُ أَبِي عُمَرَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏سُفْيَانُ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي هَارُونَ مُوسَى بْنِ أَبِي عِيسَى ‏ ‏أَنَّهُ سَمِعَ ‏ ‏أَبَا عَبْدِ اللَّهِ الْقَرَّاظَ ‏ ‏يَقُولُ سَمِعْتُ ‏ ‏أَبَا هُرَيْرَةَ ‏ ‏يَقُولُ ‏ ‏قَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏بِمِثْلِهِ ‏ ‏و حَدَّثَنِي ‏ ‏يُوسُفُ بْنُ عِيسَى ‏ ‏حَدَّثَنَا ‏ ‏الْفَضْلُ بْنُ مُوسَى ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏هِشَامُ بْنُ عُرْوَةَ ‏ ‏عَنْ ‏ ‏صَالِحِ بْنِ أَبِي صَالِحٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِيهِ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي هُرَيْرَةَ ‏ ‏قَالَ ‏ ‏قَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏لَا يَصْبِرُ أَحَدٌ عَلَى ‏ ‏لَأْوَاءِ ‏ ‏الْمَدِينَةِ ‏ ‏بِمِثْلِهِ

“என் சமுதாயத்தாரில் மதீனாவின் இடர்பாடுகளையும் கஷ்ட-நஷ்டங்களையும் சகித்துக் கொள்பவருக்காக மறுமை நாளில் பரிந்துரைப்பவனாக, அல்லது சான்றுரைப்பவனாக நான் இருப்பேன்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி)

அத்தியாயம்: 15, பாடம்: 86, ஹதீஸ் எண்: 2447

‏و حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ رَافِعٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏ابْنُ أَبِي فُدَيْكٍ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏الضَّحَّاكُ ‏ ‏عَنْ ‏ ‏قَطَنٍ الْخُزَاعِيِّ ‏ ‏عَنْ ‏ ‏يُحَنَّسَ ‏ ‏مَوْلَى ‏ ‏مُصْعَبٍ ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ ‏ ‏قَالَ: ‏

سَمِعْتُ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يَقُولُ ‏ ‏مَنْ صَبَرَ عَلَى ‏ ‏لَأْوَائِهَا ‏ ‏وَشِدَّتِهَا كُنْتُ لَهُ شَهِيدًا أَوْ شَفِيعًا يَوْمَ الْقِيَامَةِ ‏ ‏يَعْنِي ‏ ‏الْمَدِينَةَ

“மதீனாவின் இடர்பாடுகளையும் கஷ்ட-நஷ்டங்களையும் சகித்துக்கொண்டவருக்காக மறுமை நாளில் நான் சான்றுரைப்பவனாக, அல்லது பரிந்துரைப்பவனாக இருப்பேன்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்..

அறிவிப்பாளர் : இப்னு உமர் (ரலி)

அத்தியாயம்: 15, பாடம்: 86, ஹதீஸ் எண்: 2446

‏حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ يَحْيَى ‏ ‏قَالَ قَرَأْتُ عَلَى ‏ ‏مَالِكٍ ‏ ‏عَنْ ‏ ‏قَطَنِ بْنِ وَهْبِ بْنِ عُوَيْمِرِ بْنِ الْأَجْدَعِ ‏ ‏عَنْ ‏ ‏يُحَنَّسَ ‏ ‏مَوْلَى ‏ ‏الزُّبَيْرِ ‏ ‏أَخْبَرَهُ: ‏

أَنَّهُ كَانَ جَالِسًا عِنْدَ ‏ ‏عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ ‏ ‏فِي الْفِتْنَةِ فَأَتَتْهُ مَوْلَاةٌ لَهُ تُسَلِّمُ عَلَيْهِ فَقَالَتْ إِنِّي أَرَدْتُ الْخُرُوجَ يَا ‏ ‏أَبَا عَبْدِ الرَّحْمَنِ ‏ ‏اشْتَدَّ عَلَيْنَا الزَّمَانُ فَقَالَ لَهَا ‏ ‏عَبْدُ اللَّهِ ‏ ‏اقْعُدِي ‏ ‏لَكَاعِ ‏ ‏فَإِنِّي سَمِعْتُ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يَقُولُ ‏ ‏لَا يَصْبِرُ عَلَى ‏ ‏لَأْوَائِهَا ‏ ‏وَشِدَّتِهَا أَحَدٌ إِلَّا كُنْتُ لَهُ شَهِيدًا أَوْ شَفِيعًا يَوْمَ الْقِيَامَةِ

குழப்பமானதொரு காலகட்டத்தில் நான் அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அருகில் அமர்ந்திருந்தேன். அப்போது அவர்களிடம் அவர்களுடைய அடிமைப் பெண்களில் ஒருவர் வந்து ஸலாம் சொல்லிவிட்டு, “அபூஅப்திர் ரஹ்மான் அவர்களே! நெருக்கடியான ஒரு காலகட்டம் நமக்கு ஏற்பட்டுள்ளது. எனவே, நான் (மதீனாவிலிருந்து) வெளியேற விரும்புகின்றேன்” என்று கூறினார். அப்போது அப்துல்லாஹ் பின் உமர் (ரலி), “பேதைப் பெண்ணே! உட்கார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “மதீனாவின் இடர்பாடுகளையும் கஷ்ட-நஷ்டங்களையும் சகித்துக்கொள்ளும் எவருக்கும் மறுமை நாளில் நான் சான்றுரைப்பவனாக, அல்லது பரிந்துரைப்பவனாக இருப்பேன்’ என்று கூறியதை நான் கேட்டுள்ளேன்” என்றார்கள்.

அறிவிப்பாளர் : இப்னு உமர் (ரலி) வழியாக யுஹன்னஸ் பின் அபீமூஸா (ரஹ்)


குறிப்பு :

ஹஜ்ஜாஜ் இப்னு யூஸுஃபின் இராணுவம், இப்னுஸ் ஸுபைர் (ரலி) அவர்களை முற்றுகையிட்டபோது மேற்காணும் உரையாடல் நடைபெற்றது.

அத்தியாயம்: 15, பாடம்: 86, ஹதீஸ் எண்: 2445

‏حَدَّثَنِي ‏ ‏زُهَيْرُ بْنُ حَرْبٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عُثْمَانُ بْنُ عُمَرَ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏عِيسَى بْنُ حَفْصِ بْنِ عَاصِمٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏نَافِعٌ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ عُمَرَ ‏ ‏قَالَ: ‏

سَمِعْتُ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يَقُولُ ‏ ‏مَنْ صَبَرَ عَلَى ‏ ‏لَأْوَائِهَا ‏ ‏كُنْتُ لَهُ شَفِيعًا أَوْ شَهِيدًا يَوْمَ الْقِيَامَةِ

“மதீனாவின் இடர்பாடுகளைச் சகித்துக்கொண்டவருக்காக மறுமை நாளில் நான் பரிந்துரைப்பவனாக, அல்லது சான்றுரைப்பவனாக இருப்பேன்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : இப்னு உமர் (ரலி)

அத்தியாயம்: 15, பாடம்: 86, ஹதீஸ் எண்: 2444

‏و حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَبْدَةُ ‏ ‏عَنْ ‏ ‏هِشَامٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِيهِ ‏ ‏عَنْ ‏ ‏عَائِشَةَ ‏ ‏قَالَتْ: ‏

قَدِمْنَا ‏ ‏الْمَدِينَةَ ‏ ‏وَهِيَ وَبِيئَةٌ فَاشْتَكَى ‏ ‏أَبُو بَكْرٍ ‏ ‏وَاشْتَكَى ‏ ‏بِلَالٌ ‏ ‏فَلَمَّا رَأَى رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏شَكْوَى أَصْحَابِهِ قَالَ ‏ ‏اللَّهُمَّ حَبِّبْ إِلَيْنَا ‏ ‏الْمَدِينَةَ ‏ ‏كَمَا حَبَّبْتَ ‏ ‏مَكَّةَ ‏ ‏أَوْ أَشَدَّ وَصَحِّحْهَا وَبَارِكْ لَنَا فِي ‏ ‏صَاعِهَا ‏ ‏وَمُدِّهَا ‏ ‏وَحَوِّلْ ‏ ‏حُمَّاهَا ‏ ‏إِلَى الْجُحْفَةِ ‏


و حَدَّثَنَا ‏ ‏أَبُو كُرَيْبٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبُو أُسَامَةَ ‏ ‏وَابْنُ نُمَيْرٍ ‏ ‏عَنْ ‏ ‏هِشَامِ بْنِ عُرْوَةَ ‏ ‏بِهَذَا الْإِسْنَادِ ‏ ‏نَحْوَهُ

நாங்கள் (நாடு துறந்து) மதீனாவிற்கு வந்தபோது, மதீனாவில் பெருநோய் ஏற்பட்டிருந்தது. அபூபக்ரு (ரலி) அவர்களும் பிலால் (ரலி) அவர்களும் நோய்வாய்ப்பட்டனர். தம் தோழர்கள் நோய்வாய்ப்படுவதை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கண்டபோது, “இறைவா! நீ மக்காவை எங்கள் நேசத்திற்குரியதாக ஆக்கியதைப் போன்று, அல்லது அதைவிட அதிகமாக மதீனாவை எங்கள் நேசத்திற்குரியதாக ஆக்குவாயாக! மேலும், இந்நகரை ஆரோக்கியமானதாகவும் ஆக்குவாயாக! இதன் (முகத்தல் அளவைகளான) ‘ஸாஉ’விலும் ‘முத்’துவிலும் எங்களுக்கு நீ வளத்தை வழங்குவாயாக! இங்குள்ள காய்ச்சல் நோயை ‘ஜுஹ்ஃபா’ எனுமிடத்திற்கு இடம்பெயரச் செய்வாயாக!” என்று பிரார்த்தித்தார்கள்.

அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி)

அத்தியாயம்: 15, பாடம்: 86, ஹதீஸ் எண்: 2443

‏و حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَلِيُّ بْنُ مُسْهِرٍ ‏ ‏عَنْ ‏ ‏الشَّيْبَانِيِّ ‏ ‏عَنْ ‏ ‏يُسَيْرِ بْنِ عَمْرٍو ‏ ‏عَنْ ‏ ‏سَهْلِ بْنِ حُنَيْفٍ ‏ ‏قَالَ: ‏

أَهْوَى رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏بِيَدِهِ إِلَى ‏ ‏الْمَدِينَةِ ‏ ‏فَقَالَ ‏ ‏إِنَّهَا حَرَمٌ آمِنٌ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) தமது கரத்தால் மதீனாவைச் சுட்டிக்காட்டி, “இது பாதுகாப்பான புனித நகரம்” என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் : ஸஹ்லு பின் ஹுனைஃப் (ரலி)

அத்தியாயம்: 15, பாடம்: 86, ஹதீஸ் எண்: 2442

‏حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏وَمُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ نُمَيْرٍ ‏ ‏وَأَبُو كُرَيْبٍ ‏ ‏جَمِيعًا ‏ ‏عَنْ ‏ ‏أَبِي أُسَامَةَ ‏ ‏وَاللَّفْظُ ‏ ‏لِأَبِي بَكْرٍ ‏ ‏وَابْنِ نُمَيْرٍ ‏ ‏قَالَا حَدَّثَنَا ‏ ‏أَبُو أُسَامَةَ ‏ ‏عَنْ ‏ ‏الْوَلِيدِ بْنِ كَثِيرٍ ‏ ‏حَدَّثَنِي ‏ ‏سَعِيدُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ ‏ ‏أَنَّ ‏ ‏عَبْدَ الرَّحْمَنِ ‏ ‏حَدَّثَهُ عَنْ ‏ ‏أَبِيهِ ‏ ‏أَبِي سَعِيدٍ: ‏

أَنَّهُ سَمِعَ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يَقُولُ ‏ ‏إِنِّي حَرَّمْتُ مَا بَيْنَ ‏ ‏لَابَتَيِ الْمَدِينَةِ ‏ ‏كَمَا حَرَّمَ ‏ ‏إِبْرَاهِيمُ ‏ ‏مَكَّةَ ‏


قَالَ ثُمَّ كَانَ ‏ ‏أَبُو سَعِيدٍ ‏ ‏يَأْخُذُ وَقَالَ ‏ ‏أَبُو بَكْرٍ ‏ ‏يَجِدُ أَحَدَنَا فِي يَدِهِ الطَّيْرُ فَيَفُكُّهُ مِنْ يَدِهِ ثُمَّ يُرْسِلُهُ

“இப்ராஹீம் (அலை) மக்காவைப் புனித நகரமாக அறிவித்ததைப் போன்று நான் மதீனாவின் இரு மலைகளுக்கு இடைப்பட்ட பகுதியைப் புனிதமானதாக அறிவிக்கின்றேன்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அபூஸயீத் அல்குத்ரீ (ரலி)


குறிப்பு :

“என் தந்தை, எவரது கையிலாவது (மதீனத்துப்) பறவை இருக்கக் கண்டால், உடனே அவரது கரத்திலிருந்து அதை விடுவித்துப் பறக்க விட்டுவிடுவார்கள்” என்று அபூஸயீத் அல்குத்ரீ (ரலி) அவர்களின் மகன் அப்துர் ரஹ்மான் குறிப்பிடுகின்றார்.

அத்தியாயம்: 15, பாடம்: 86, ஹதீஸ் எண்: 2441

‏و حَدَّثَنَا ‏ ‏قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏لَيْثٌ ‏ ‏عَنْ ‏ ‏سَعِيدِ بْنِ أَبِي سَعِيدٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي سَعِيدٍ ‏ ‏مَوْلَى ‏ ‏الْمَهْرِيِّ ‏ ‏أَنَّهُ: ‏

جَاءَ ‏ ‏أَبَا سَعِيدٍ الْخُدْرِيَّ ‏ ‏لَيَالِي ‏ ‏الْحَرَّةِ ‏ ‏فَاسْتَشَارَهُ فِي ‏ ‏الْجَلَاءِ ‏ ‏مِنْ ‏ ‏الْمَدِينَةِ ‏ ‏وَشَكَا إِلَيْهِ أَسْعَارَهَا وَكَثْرَةَ عِيَالِهِ وَأَخْبَرَهُ أَنْ لَا صَبْرَ لَهُ عَلَى جَهْدِ ‏ ‏الْمَدِينَةِ ‏ ‏وَلَأْوَائِهَا ‏ ‏فَقَالَ لَهُ وَيْحَكَ لَا آمُرُكَ بِذَلِكَ إِنِّي سَمِعْتُ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يَقُولُ ‏ ‏لَا يَصْبِرُ أَحَدٌ عَلَى ‏ ‏لَأْوَائِهَا ‏ ‏فَيَمُوتَ إِلَّا كُنْتُ لَهُ شَفِيعًا أَوْ شَهِيدًا يَوْمَ الْقِيَامَةِ إِذَا كَانَ مُسْلِمًا

‘அல்ஹர்ரா’ (போர் நடந்த) நாட்களில் நான் அபூஸயீத் அல்குத்ரீ (ரலி) அவர்களிடம் சென்று, நான் மதீனாவிலிருந்து இடம்பெயர்ந்து செல்வது தொடர்பாக ஆலோசனை கேட்டேன். மேலும், அவர்களிடம் (மதீனாவின்) விலைவாசி (உயர்ந்துள்ளது) பற்றியும், எனது பெரிய குடும்பம் பற்றியும் அவர்களிடம் முறையிட்டேன். மதீனாவின் நெருக்கடியையும் பசி பட்டினியையும் சகித்துக்கொண்டு என்னால் இருக்க முடியாது என்றும் தெரிவித்தேன். அப்போது அபூஸயீத் அல்குத்ரீ (ரலி), “உமக்குக் கேடுதான்!. அதற்கு உம்மை நான் அனுமதிக்க மாட்டேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “மதீனாவின் நெருக்கடிகளைச் சகித்துக்கொண்டு இறந்துபோகும் எவருக்கும் மறுமை நாளில் நான் பரிந்துரைப்பவனாக, அல்லது சான்றுரைப்பவனாக இருப்பேன்; அவர் முஸ்லிமாக இருந்தால்!’ என்று கூறியதை நான் கேட்டுள்ளேன்” என்றார்கள்.

அறிவிப்பாளர் : அபூஸயீத் அல்குத்ரீ (ரலி) வழியாக மஹ்ரீயின் முன்னாள் அடிமையான அபூஸயீத் (ரஹ்)


குறிப்பு :

மேற்காணும் அல்ஹர்ரா போர், ஹிஜ்ரீ 63இல் பஸராவின் ஆட்சியாளர் யஸீத் பின் முஆவியாவுக்கும் மதீனாவின் முஸ்லிம்களுக்கும் நடைபெற்ற போராகும். அந்தக் காலகட்டத்தில் மதீனாவில் பஞ்சம் ஏற்பட்டிருந்தது.

அத்தியாயம்: 15, பாடம்: 86, ஹதீஸ் எண்: 2440

‏و حَدَّثَنَا ‏ ‏زُهَيْرُ بْنُ حَرْبٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏إِسْمَعِيلُ ابْنُ عُلَيَّةَ ‏ ‏عَنْ ‏ ‏عَلِيِّ بْنِ الْمُبَارَكِ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ أَبِي كَثِيرٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبُو سَعِيدٍ ‏ ‏مَوْلَى ‏ ‏الْمَهْرِيِّ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ: ‏

أَنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَالَ ‏ ‏اللَّهُمَّ بَارِكْ لَنَا فِي ‏ ‏صَاعِنَا ‏ ‏وَمُدِّنَا ‏ ‏وَاجْعَلْ مَعَ الْبَرَكَةِ بَرَكَتَيْنِ ‏


و حَدَّثَنَاه ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عُبَيْدُ اللَّهِ بْنُ مُوسَى ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏شَيْبَانُ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنِي ‏ ‏إِسْحَقُ بْنُ مَنْصُورٍ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏عَبْدُ الصَّمَدِ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏حَرْبٌ يَعْنِي ابْنَ شَدَّادٍ ‏ ‏كِلَاهُمَا ‏ ‏عَنْ ‏ ‏يَحْيَى بْنِ أَبِي كَثِيرٍ ‏ ‏بِهَذَا الْإِسْنَادِ ‏ ‏مِثْلَهُ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “இறைவா! எங்கள் (முகத்தல் அளவைகளான) ‘ஸாஉ’விலும் ‘முத்’துவிலும் எங்களுக்கு வளத்தை ஏற்படுத்துவாயாக! இப்போதுள்ள வளத்துடன் இன்னும் இரு (மடங்கு) வளத்தைத் தருவாயாக!” என்று பிரார்த்தித்தார்கள்.

அறிவிப்பாளர் : அபூஸயீத் அல்குத்ரீ (ரலி