و حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ حَدَّثَنَا عَبْدَةُ عَنْ هِشَامٍ عَنْ أَبِيهِ عَنْ عَائِشَةَ قَالَتْ:
قَدِمْنَا الْمَدِينَةَ وَهِيَ وَبِيئَةٌ فَاشْتَكَى أَبُو بَكْرٍ وَاشْتَكَى بِلَالٌ فَلَمَّا رَأَى رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ شَكْوَى أَصْحَابِهِ قَالَ اللَّهُمَّ حَبِّبْ إِلَيْنَا الْمَدِينَةَ كَمَا حَبَّبْتَ مَكَّةَ أَوْ أَشَدَّ وَصَحِّحْهَا وَبَارِكْ لَنَا فِي صَاعِهَا وَمُدِّهَا وَحَوِّلْ حُمَّاهَا إِلَى الْجُحْفَةِ
و حَدَّثَنَا أَبُو كُرَيْبٍ حَدَّثَنَا أَبُو أُسَامَةَ وَابْنُ نُمَيْرٍ عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ بِهَذَا الْإِسْنَادِ نَحْوَهُ
நாங்கள் (நாடு துறந்து) மதீனாவிற்கு வந்தபோது, மதீனாவில் பெருநோய் ஏற்பட்டிருந்தது. அபூபக்ரு (ரலி) அவர்களும் பிலால் (ரலி) அவர்களும் நோய்வாய்ப்பட்டனர். தம் தோழர்கள் நோய்வாய்ப்படுவதை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கண்டபோது, “இறைவா! நீ மக்காவை எங்கள் நேசத்திற்குரியதாக ஆக்கியதைப் போன்று, அல்லது அதைவிட அதிகமாக மதீனாவை எங்கள் நேசத்திற்குரியதாக ஆக்குவாயாக! மேலும், இந்நகரை ஆரோக்கியமானதாகவும் ஆக்குவாயாக! இதன் (முகத்தல் அளவைகளான) ‘ஸாஉ’விலும் ‘முத்’துவிலும் எங்களுக்கு நீ வளத்தை வழங்குவாயாக! இங்குள்ள காய்ச்சல் நோயை ‘ஜுஹ்ஃபா’ எனுமிடத்திற்கு இடம்பெயரச் செய்வாயாக!” என்று பிரார்த்தித்தார்கள்.
அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி)