அத்தியாயம்: 15, பாடம்: 86, ஹதீஸ் எண்: 2446

‏حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ يَحْيَى ‏ ‏قَالَ قَرَأْتُ عَلَى ‏ ‏مَالِكٍ ‏ ‏عَنْ ‏ ‏قَطَنِ بْنِ وَهْبِ بْنِ عُوَيْمِرِ بْنِ الْأَجْدَعِ ‏ ‏عَنْ ‏ ‏يُحَنَّسَ ‏ ‏مَوْلَى ‏ ‏الزُّبَيْرِ ‏ ‏أَخْبَرَهُ: ‏

أَنَّهُ كَانَ جَالِسًا عِنْدَ ‏ ‏عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ ‏ ‏فِي الْفِتْنَةِ فَأَتَتْهُ مَوْلَاةٌ لَهُ تُسَلِّمُ عَلَيْهِ فَقَالَتْ إِنِّي أَرَدْتُ الْخُرُوجَ يَا ‏ ‏أَبَا عَبْدِ الرَّحْمَنِ ‏ ‏اشْتَدَّ عَلَيْنَا الزَّمَانُ فَقَالَ لَهَا ‏ ‏عَبْدُ اللَّهِ ‏ ‏اقْعُدِي ‏ ‏لَكَاعِ ‏ ‏فَإِنِّي سَمِعْتُ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يَقُولُ ‏ ‏لَا يَصْبِرُ عَلَى ‏ ‏لَأْوَائِهَا ‏ ‏وَشِدَّتِهَا أَحَدٌ إِلَّا كُنْتُ لَهُ شَهِيدًا أَوْ شَفِيعًا يَوْمَ الْقِيَامَةِ

குழப்பமானதொரு காலகட்டத்தில் நான் அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அருகில் அமர்ந்திருந்தேன். அப்போது அவர்களிடம் அவர்களுடைய அடிமைப் பெண்களில் ஒருவர் வந்து ஸலாம் சொல்லிவிட்டு, “அபூஅப்திர் ரஹ்மான் அவர்களே! நெருக்கடியான ஒரு காலகட்டம் நமக்கு ஏற்பட்டுள்ளது. எனவே, நான் (மதீனாவிலிருந்து) வெளியேற விரும்புகின்றேன்” என்று கூறினார். அப்போது அப்துல்லாஹ் பின் உமர் (ரலி), “பேதைப் பெண்ணே! உட்கார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “மதீனாவின் இடர்பாடுகளையும் கஷ்ட-நஷ்டங்களையும் சகித்துக்கொள்ளும் எவருக்கும் மறுமை நாளில் நான் சான்றுரைப்பவனாக, அல்லது பரிந்துரைப்பவனாக இருப்பேன்’ என்று கூறியதை நான் கேட்டுள்ளேன்” என்றார்கள்.

அறிவிப்பாளர் : இப்னு உமர் (ரலி) வழியாக யுஹன்னஸ் பின் அபீமூஸா (ரஹ்)


குறிப்பு :

ஹஜ்ஜாஜ் இப்னு யூஸுஃபின் இராணுவம், இப்னுஸ் ஸுபைர் (ரலி) அவர்களை முற்றுகையிட்டபோது மேற்காணும் உரையாடல் நடைபெற்றது.

Share this Hadith: