حَدَّثَنَا شَيْبَانُ بْنُ فَرُّوخَ حَدَّثَنَا أَبُو عَوَانَةَ عَنْ زَيْدِ بْنِ جُبَيْرٍ قَالَ سَأَلَ رَجُلٌ ابْنَ عُمَرَ مَا يَقْتُلُ الرَّجُلُ مِنْ الدَّوَابِّ وَهُوَ مُحْرِمٌ
قَالَ حَدَّثَتْنِي إِحْدَى نِسْوَةِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ كَانَ يَأْمُرُ بِقَتْلِ الْكَلْبِ الْعَقُورِ وَالْفَأْرَةِ وَالْعَقْرَبِ وَالْحُدَيَّا وَالْغُرَابِ وَالْحَيَّةِ قَالَ وَفِي الصَّلَاةِ أَيْضًا
இப்னு உமர் (ரலி) அவர்களிடம், “இஹ்ராம் பூண்டிருப்பவர் எந்த உயிரினங்களைக் கொல்லலாம்?” என்று ஒருவர் கேட்டார். அதற்கு, “வெறிநாய், எலி, தேள், பருந்து, நீர்க்காகம், பாம்பு ஆகியவற்றைக் கொல்லுமாறு நபி (ஸல்) உத்தரவிட்டிருந்தார்கள் என்று நபி (ஸல்) அவர்களின் துணைவியருள் ஒருவர் என்னிடம் கூறினார்” என்று கூறிவிட்டு, “இவற்றை ஒருவர் தொழுகையில் இருக்கும்போதும் கொல்லலாம்” என்றும் இப்னு உமர் (ரலி) குறிப்பிட்டார்கள்.
அறிவிப்பாளர் : இபுனு உமர் (ரலி) வழியாக ஸைத் பின் ஜுபைர் (ரஹ்)