அத்தியாயம்: 15, பாடம்: 09, ஹதீஸ் எண்: 2079

و حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ يَحْيَى ‏ ‏وَيَحْيَى بْنُ أَيُّوبَ ‏ ‏وَقُتَيْبَةُ ‏ ‏وَابْنُ حُجْرٍ ‏ ‏قَالَ ‏ ‏يَحْيَى بْنُ يَحْيَى ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏و قَالَ ‏ ‏الْآخَرُونَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏إِسْمَعِيلُ بْنُ جَعْفَرٍ ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ اللَّهِ بْنِ دِينَارٍ ‏ ‏أَنَّهُ سَمِعَ ‏ ‏عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ ‏ ‏رَضِيَ اللَّهُ عَنْهُمَا ‏ ‏يَقُولُا ‏

‏قَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏خَمْسٌ مَنْ قَتَلَهُنَّ وَهُوَ حَرَامٌ فَلَا ‏ ‏جُنَاحَ ‏ ‏عَلَيْهِ فِيهِنَّ الْعَقْرَبُ وَالْفَأْرَةُ وَالْكَلْبُ الْعَقُورُ وَالْغُرَابُ وَالْحُدَيَّا ‏

‏وَاللَّفْظُ ‏ ‏لِيَحْيَى بْنِ يَحْيَى

“தேள், எலி, வெறி நாய், நீர்க்காகம், பருந்து ஆகிய ஐந்து உயிரினங்களை ஒருவர் முஹ்ரிமான நிலையில் கொன்றுவிட்டாலும் அவர் மீது எந்தக் குற்றமுமில்லை” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : இபுனு உமர் (ரலி)

அத்தியாயம்: 15, பாடம்: 09, ஹதீஸ் எண்: 2078

و حَدَّثَنَا ‏ ‏هَارُونُ بْنُ عَبْدِ اللَّهِ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ بَكْرٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏ابْنُ جُرَيْجٍ ‏ ‏قَالَ قُلْتُ ‏ ‏لِنَافِعٍ ‏ ‏مَاذَا سَمِعْتَ ‏ ‏ابْنَ عُمَرَ ‏ ‏يُحِلُّ لِلْحَرَامِ قَتْلَهُ مِنْ الدَّوَابِّ ‏ ‏فَقَالَ لِي ‏ ‏نَافِعٌ ‏ ‏قَالَ ‏ ‏عَبْدُ اللَّهِ ‏

‏سَمِعْتُ النَّبِيَّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يَقُولُ ‏ ‏خَمْسٌ مِنْ الدَّوَابِّ لَا ‏ ‏جُنَاحَ ‏ ‏عَلَى مَنْ قَتَلَهُنَّ فِي قَتْلِهِنَّ الْغُرَابُ وَالْحِدَأَةُ وَالْعَقْرَبُ وَالْفَأْرَةُ وَالْكَلْبُ الْعَقُورُ ‏

‏و حَدَّثَنَاه ‏ ‏قُتَيْبَةُ ‏ ‏وَابْنُ رُمْحٍ ‏ ‏عَنْ ‏ ‏اللَّيْثِ بْنِ سَعْدٍ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏شَيْبَانُ بْنُ فَرُّوخَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏جَرِيرٌ يَعْنِي ابْنَ حَازِمٍ ‏ ‏جَمِيعًا ‏ ‏عَنْ ‏ ‏نَافِعٍ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَلِيُّ بْنُ مُسْهِرٍ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏ابْنُ نُمَيْرٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبِي ‏ ‏جَمِيعًا ‏ ‏عَنْ ‏ ‏عُبَيْدِ اللَّهِ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنِي ‏ ‏أَبُو كَامِلٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏حَمَّادٌ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَيُّوبُ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏ابْنُ الْمُثَنَّى ‏ ‏حَدَّثَنَا ‏ ‏يَزِيدُ بْنُ هَارُونَ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏يَحْيَى بْنُ سَعِيدٍ ‏ ‏كُلُّ هَؤُلَاءِ ‏ ‏عَنْ ‏ ‏نَافِعٍ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ عُمَرَ ‏ ‏رَضِيَ اللَّهُ عَنْهُمَا ‏ ‏عَنْ النَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏بِمِثْلِ حَدِيثِ ‏ ‏مَالِكٍ ‏ ‏وَابْنِ جُرَيْجٍ ‏ ‏وَلَمْ يَقُلْ أَحَدٌ مِنْهُمْ عَنْ ‏ ‏نَافعٍ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ عُمَرَ ‏ ‏رَضِيَ اللَّهُ عَنْهُمَا ‏ ‏سَمِعْتُ النَّبِيَّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏إِلَّا ‏ ‏ابْنُ جُرَيْجٍ ‏ ‏وَحْدَهُ ‏ ‏وَقَدْ تَابَعَ ‏ ‏ابْنَ جُرَيْجٍ ‏ ‏عَلَى ذَلِكَ ‏ ‏ابْنُ إِسْحَقَ ‏ ‏و حَدَّثَنِيهِ ‏ ‏فَضْلُ بْنُ سَهْلٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏يَزِيدُ بْنُ هَارُونَ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ إِسْحَقَ ‏ ‏عَنْ ‏ ‏نَافِعٍ ‏ ‏وَعُبَيْدِ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ عُمَرَ ‏ ‏رَضِيَ اللَّهُ عَنْهُمَا ‏ ‏قَالَ سَمِعْتُ ‏ ‏النَّبِيَّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يَقُولُ خَمْسٌ لَا جُنَاحَ فِي قَتْلِ مَا قُتِلَ مِنْهُنَّ فِي الْحَرَمِ ‏ ‏فَذَكَرَ بِمِثْلِهِ

நான் நாஃபிஉ (ரஹ்) அவர்களிடம், “இஹ்ராம் பூண்டிருப்பவருக்கு எந்தெந்த உயிரினங்களைக் கொல்ல அனுமதி உண்டு என்பது குறித்து இப்னு உமர் (ரலி) என்ன கூறினார்கள்?” என்று கேட்டேன். அதற்கு,“நபி (ஸல்) ஐந்து உயிரினங்களை ஒருவர் கொன்றுவிட்டாலும் அதைக் கொன்றதற்காக அவர்மீது எந்தக் குற்றமும் இல்லை; நீர்க்காகம், பருந்து, தேள், எலி, வெறிநாய் ஆகியவைதாம் அவை என்று கூறியதை நான் செவியுற்றுள்ளேன் என்று இப்னு உமர் (ரலி) கூறினார்கள்” என்று நாஃபிஉ (ரஹ்) பதிலளித்தார்கள்.

அறிவிப்பாளர் : இபுனு உமர் (ரலி) வழியாக அப்துல் மலிக் பின் அப்தில் அஸீஸ் பின் ஜுரைஜ் (ரஹ்)

குறிப்பு : மேற்கண்ட ஹதீஸ் இப்னு உமர் (ரலி) அவர்களிடமிருந்து மேலும் ஏழு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது. அவற்றில், “நபி (ஸல்) கூறியதை நான் செவியுற்றேன்” என்று இப்னு உமர் (ரலி) கூறினார்கள் என இப்னு ஜுரைஜ் (ரஹ்) ஒருவரது அறிவிப்பில் மட்டுமே இடம்பெற்றுள்ளது.

இபுனு இஸ்ஹாக் (ரஹ்) வழி அறிவிப்பு “ஐந்து உயிரினங்களில் ஒன்றைப் புனித (ஹரம்) எல்லைக்குள் கொன்றாலும் எந்தக் குற்றமுமில்லை என நபி (ஸல்) கூறியதை நான் செவியுற்றேன் … ” எனத் தொடங்குகிறது.

அத்தியாயம்: 15, பாடம்: 09, ஹதீஸ் எண்: 2077

و حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ يَحْيَى ‏ ‏قَالَ قَرَأْتُ عَلَى ‏ ‏مَالِكٍ ‏ ‏عَنْ ‏ ‏نَافِعٍ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ عُمَرَ ‏ ‏رَضِيَ اللَّهُ عَنْهُمَا ‏

‏أَنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَالَ ‏ ‏خَمْسٌ مِنْ الدَّوَابِّ لَيْسَ عَلَى الْمُحْرِمِ فِي قَتْلِهِنَّ ‏ ‏جُنَاحٌ ‏ ‏الْغُرَابُ وَالْحِدَأَةُ وَالْعَقْرَبُ وَالْفَأْرَةُ وَالْكَلْبُ الْعَقُورُ

“முஹ்ரிமான ஒருவர், நீர்க்காகம், பருந்து, தேள், எலி, வெறிநாய் ஆகிய ஐந்து உயிரினங்களைக் கொன்றால் அவர் மீது குற்றமாகாது” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : இப்னு உமர் (ரலி)

அத்தியாயம்: 15, பாடம்: 09, ஹதீஸ் எண்: 2076

حَدَّثَنَا ‏ ‏شَيْبَانُ بْنُ فَرُّوخَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبُو عَوَانَةَ ‏ ‏عَنْ ‏ ‏زَيْدِ بْنِ جُبَيْرٍ ‏ ‏قَالَ ‏ ‏سَأَلَ رَجُلٌ ‏ ‏ابْنَ عُمَرَ ‏ ‏مَا يَقْتُلُ الرَّجُلُ مِنْ الدَّوَابِّ وَهُوَ مُحْرِمٌ ‏

‏قَالَ حَدَّثَتْنِي ‏ ‏إِحْدَى نِسْوَةِ النَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏أَنَّهُ كَانَ ‏ ‏يَأْمُرُ بِقَتْلِ الْكَلْبِ الْعَقُورِ وَالْفَأْرَةِ وَالْعَقْرَبِ وَالْحُدَيَّا وَالْغُرَابِ وَالْحَيَّةِ قَالَ وَفِي الصَّلَاةِ أَيْضًا

இப்னு உமர் (ரலி) அவர்களிடம், “இஹ்ராம் பூண்டிருப்பவர் எந்த உயிரினங்களைக் கொல்லலாம்?” என்று ஒருவர் கேட்டார். அதற்கு, “வெறிநாய், எலி, தேள், பருந்து, நீர்க்காகம், பாம்பு ஆகியவற்றைக் கொல்லுமாறு நபி (ஸல்) உத்தரவிட்டிருந்தார்கள் என்று நபி (ஸல்) அவர்களின் துணைவியருள் ஒருவர் என்னிடம் கூறினார்” என்று கூறிவிட்டு, “இவற்றை ஒருவர் தொழுகையில் இருக்கும்போதும் கொல்லலாம்” என்றும் இப்னு உமர் (ரலி) குறிப்பிட்டார்கள்.

அறிவிப்பாளர் : இபுனு உமர் (ரலி) வழியாக ஸைத் பின் ஜுபைர் (ரஹ்)

அத்தியாயம்: 15, பாடம்: 09, ஹதீஸ் எண்: 2075

حَدَّثَنَا ‏ ‏أَحْمَدُ بْنُ يُونُسَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏زُهَيْرٌ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏زَيْدُ بْنُ جُبَيْرٍ ‏ ‏أَنَّ رَجُلًا ‏ ‏سَأَلَ ‏ ‏ابْنَ عُمَرَ ‏ ‏مَا يَقْتُلُ الْمُحْرِمُ مِنْ الدَّوَابِّ ‏

‏فَقَالَ أَخْبَرَتْنِي ‏ ‏إِحْدَى نِسْوَةِ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏أَنَّهُ ‏ ‏أَمَرَ أَوْ ‏ ‏أُمِرَ أَنْ يَقْتُلَ الْفَأْرَةَ وَالْعَقْرَبَ وَالْحِدَأَةَ وَالْكَلْبَ الْعَقُورَ وَالْغُرَابَ

இப்னு உமர் (ரலி) அவர்களிடம், “இஹ்ராம் பூண்டிருப்பவர் எந்த உயிரினங்களைக் கொல்லலாம்?” என்று ஒருவர் கேட்டார். அதற்கு அவர்கள், “எலி, தேள், பருந்து, வெறிநாய், நீர்க்காகம் ஆகியவற்றைக் கொல்ல உத்தரவிடப்பட்டது அல்லது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) உத்தரவிட்டார்கள்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் துணைவியருள் ஒருவர் என்னிடம் தெரிவித்தார்” என விடையளித்தார்கள்.

அறிவிப்பாளர் : இபுனு உமர் (ரலி) வழியாக ஸைத் பின் ஜுபைர் (ரஹ்)

அத்தியாயம்: 15, பாடம்: 09, ஹதீஸ் எண்: 2074

حَدَّثَنِي ‏ ‏حَرْمَلَةُ بْنُ يَحْيَى ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏ابْنُ وَهْبٍ ‏ ‏أَخْبَرَنِي ‏ ‏يُونُسُ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ شِهَابٍ ‏ ‏أَخْبَرَنِي ‏ ‏سَالِمُ بْنُ عَبْدِ اللَّهِ ‏ ‏أَنَّ ‏ ‏عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ ‏ ‏رَضِيَ اللَّهُ عَنْهُمَا ‏ ‏قَالَ قَالَتْ ‏ ‏حَفْصَةُ زَوْجُ النَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏

‏قَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏خَمْسٌ مِنْ الدَّوَابِّ كُلُّهَا فَاسِقٌ ‏ ‏لَا حَرَجَ ‏ ‏عَلَى مَنْ قَتَلَهُنَي الْعَقْرَبُ وَالْغُرَابُ وَالْحِدَأَةُ وَالْفَأْرَةُ وَالْكَلْبُ الْعَقُورُ

“உயிரினங்களில் தேள், நீர்க்காகம், பருந்து, எலி, வெறிநாய் ஆகிய ஐந்து உள்ளன. அவற்றில் ஒவ்வொன்றும் தீங்கிழைக்கக்கூடியவை ஆகும். அவற்றைக் கொல்பவர்மீது எந்தக் குற்றமும் இல்லை” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அன்னை ஹஃப்ஸா (ரலி)

அத்தியாயம்: 15, பாடம்: 09, ஹதீஸ் எண்: 2073

و حَدَّثَنِي ‏ ‏زُهَيْرُ بْنُ حَرْبٍ ‏ ‏وَابْنُ أَبِي عُمَرَ ‏ ‏جَمِيعًا ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ عُيَيْنَةَ ‏ ‏قَالَ ‏ ‏زُهَيْرٌ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ ‏ ‏عَنْ ‏ ‏الزُّهْرِيِّ ‏ ‏عَنْ ‏ ‏سَالِمٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِيهِ ‏ ‏رَضِيَ اللَّهُ عَنْهُ ‏
‏عَنْ النَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَالَ ‏ ‏خَمْسٌ لَا ‏ ‏جُنَاحَ ‏ ‏عَلَى مَنْ قَتَلَهُنَّ فِي ‏ ‏الْحَرَمِ ‏ ‏وَالْإِحْرَامِ الْفَأْرَةُ وَالْعَقْرَبُ وَالْغُرَابُ وَالْحِدَأَةُ وَالْكَلْبُ الْعَقُورُ ‏

‏و قَالَ ‏ ‏ابْنُ أَبِي عُمَرَ ‏ ‏فِي رِوَايَتِهِ فِي الْحُرُمِ وَالْإِحْرَامِ

“எலி, தேள், நீர்க்காகம், பருந்து, வெறிநாய் ஆகிய ஐந்து உயிரினங்களைப் புனித (ஹரம்) எல்லைக்கு உள்ளே இஹ்ராம் நிலையிலுள்ள ஒருவர் கொன்றுவிட்டாலும் அவர்மீது குற்றமேதுமில்லை” என்று நபி (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் உமர் (ரலி)

குறிப்பு : இப்னு அபீ உமர் (ரஹ்) வழி அறிவிப்பில் ‘புனித இடங்களில்’ என (பன்மையாக) வந்துள்ளது.

அத்தியாயம்: 15, பாடம்: 09, ஹதீஸ் எண்: 2072

و حَدَّثَنِي ‏ ‏أَبُو الطَّاهِرِ ‏ ‏وَحَرْمَلَةُ ‏ ‏قَالَا أَخْبَرَنَا ‏ ‏ابْنُ وَهْبٍ ‏ ‏أَخْبَرَنِي ‏ ‏يُونُسُ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ شِهَابٍ ‏ ‏عَنْ ‏ ‏عُرْوَةَ بْنِ الزُّبَيْرِ ‏ ‏عَنْ ‏ ‏عَائِشَةَ ‏ ‏رَضِيَ اللَّهُ عَنْهَا ‏ ‏قَالَتْ ‏

‏قَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏خَمْسٌ مِنْ الدَّوَابِّ كُلُّهَا ‏ ‏فَوَاسِقُ ‏ ‏تُقْتَلُ فِي الْحَرَمِ الْغُرَابُ وَالْحِدَأَةُ وَالْكَلْبُ الْعَقُورُ وَالْعَقْرَبُ وَالْفَأْرَةُ

“உயிரினங்களிலெல்லாம் தீங்கிழைக்கக்கூடியவையான நீர்க்காகம், பருந்து, வெறிநாய், தேள், எலி ஆகிய ஐந்தும் புனித (ஹரம்) எல்லைக்கு உள்ளேயும் கொல்லப்படும்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி)

அத்தியாயம்: 15, பாடம்: 09, ஹதீஸ் எண்: 2071

و حَدَّثَنَا ‏ ‏عُبَيْدُ اللَّهِ بْنُ عُمَرَ الْقَوَارِيرِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏يَزِيدُ بْنُ زُرَيْعٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏مَعْمَرٌ ‏ ‏عَنْ ‏ ‏الزُّهْرِيِِ ‏ ‏عَنْ ‏ ‏عُرْوَةَ ‏ ‏عَنْ ‏ ‏عَائِشَةَ ‏ ‏رَضِيَ اللَّهُ عَنْهَا ‏ ‏قَالَتْ ‏

‏قَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏خَمْسٌ ‏ ‏فَوَاسِقُ ‏ ‏يُقْتَلْنَ فِي الْحَرَمِ الْفَأْرَةُ وَالْعَقْرَبُ وَالْغُرَابُ وَالْحُدَيَّا وَالْكَلْبُ الْعَقُورُ ‏
‏و حَدَّثَنَاه ‏ ‏عَبْدُ بْنُ حُمَيْدٍ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏عَبْدُ الرَّزَّاقِ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏مَعْمَرٌ ‏ ‏عَنْ ‏ ‏الزُّهْرِيِّ ‏ ‏بِهَذَا الْإِسْنَادِ قَالَتْ ‏ ‏أَمَرَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏بِقَتْلِ خَمْسِ ‏ ‏فَوَاسِقَ ‏ ‏فِي الْحِلِّ وَالْحَرَمِ ثُمَّ ذَكَرَ بِمِثْلِ حَدِيثِ ‏ ‏يَزِيدَ بْنِ زُرَيْعٍ

“தீங்கிழைக்கக்கூடிய ஐந்து உயிரினங்களான எலி, தேள், நீர்க்காகம், பருந்து, வெறிநாய் ஆகியவை புனித (ஹரம்) எல்லைக்குள் கொல்லப்படும்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி)

குறிப்பு : அப்து இபுனு ஹுமைத் (ரஹ்) வழி அறிவிப்பில் “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) தீங்கிழைக்கக்கூடிய ஐந்து உயிரினங்களைப் புனித (ஹரம்) எல்லைக்குள்ளும் வெளியிலும் கொல்ல உத்தரவிட்டார்கள்” என்று அன்னை ஆயிஷா (ரலி) கூறியதாக ஹதீஸ் தொடங்குகிறது.

அத்தியாயம்: 15, பாடம்: 09, ஹதீஸ் எண்: 2070

و حَدَّثَنَا ‏ ‏أَبُو الرَّبِيعِ الزَّهْرَانِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏حَمَّادٌ وَهُوَ ابْنُ زَيْدٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏هِشَامُ بْنُ عُرْوَةَ ‏ ‏عَنْ ‏ ‏أَبِيهِ ‏ ‏عَنْ ‏ ‏عَائِشَةَ ‏ ‏رَضِيَ اللَّهُ عَنْهَا ‏ ‏قَالَتْ ‏

‏قَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏خَمْسٌ ‏ ‏فَوَاسِقُ ‏ ‏يُقْتَلْنَ فِي الْحَرَمِ الْعَقْرَبُ وَالْفَأْرَةُ وَالْحُدَيَّا وَالْغُرَابُ وَالْكَلْبُ الْعَقُورُ ‏
‏و حَدَّثَنَاه ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏وَأَبُو كُرَيْبٍ ‏ ‏قَالَا حَدَّثَنَا ‏ ‏ابْنُ نُمَيْرٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏هِشَامٌ ‏ ‏بِهَذَا الْإِسْنَادِ

“தீங்கிழைக்கக்கூடிய ஐந்து உயிரினங்களான தேள், எலி, பருந்து, நீர்க்காகம், வெறிநாய் ஆகியவை, புனித (ஹரம்) எல்லைக்குள் கொல்லப்படும்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி)