அத்தியாயம்: 16, பாடம்: 12, ஹதீஸ் எண்: 2552

‏حَدَّثَنَا ‏ ‏ابْنُ أَبِي عُمَرَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏سُفْيَانُ ‏ ‏عَنْ ‏ ‏يَزِيدَ بْنِ كَيْسَانَ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي حَازِمٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي هُرَيْرَةَ ‏ ‏قَالَ: ‏

كُنْتُ عِنْدَ النَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَأَتَاهُ رَجُلٌ فَأَخْبَرَهُ أَنَّهُ تَزَوَّجَ امْرَأَةً مِنْ ‏ ‏الْأَنْصَارِ ‏ ‏فَقَالَ لَهُ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏أَنَظَرْتَ إِلَيْهَا قَالَ لَا قَالَ فَاذْهَبْ فَانْظُرْ إِلَيْهَا فَإِنَّ فِي أَعْيُنِ ‏ ‏الْأَنْصَارِ ‏ ‏شَيْئًا

நான் (ஒரு முறை) நபி (ஸல்) அருகில் இருந்தபோது அவர்களிடம் ஒருவர் வந்து, தாம் அன்ஸாரிகளில் ஒரு பெண்ணை மணமுடிக்கப்போவதாகத் தெரிவித்தார். அவரிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “நீர் அந்தப் பெண்ணைப் பார்த்துவிட்டீரா?” என்று கேட்டார்கள். அதற்கு அவர் “இல்லை” என்றார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “அவ்வாறாயின், நீர் சென்று அவளைப் பார்த்துக்கொள்ளும்! ஏனெனில், அன்ஸாரி(ப் பெண்)களின் கண்களில் சிறிது (குறை) உண்டு” என்று சொன்னார்கள்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி)

Share this Hadith: