و حَدَّثَنِي يَحْيَى بْنُ مَعِينٍ حَدَّثَنَا مَرْوَانُ بْنُ مُعَاوِيَةَ الْفَزَارِيُّ حَدَّثَنَا يَزِيدُ بْنُ كَيْسَانَ عَنْ أَبِي حَازِمٍ عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ:
جَاءَ رَجُلٌ إِلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ إِنِّي تَزَوَّجْتُ امْرَأَةً مِنْ الْأَنْصَارِ فَقَالَ لَهُ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ هَلْ نَظَرْتَ إِلَيْهَا فَإِنَّ فِي عُيُونِ الْأَنْصَارِ شَيْئًا قَالَ قَدْ نَظَرْتُ إِلَيْهَا قَالَ عَلَى كَمْ تَزَوَّجْتَهَا قَالَ عَلَى أَرْبَعِ أَوَاقٍ فَقَالَ لَهُ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى أَرْبَعِ أَوَاقٍ كَأَنَّمَا تَنْحِتُونَ الْفِضَّةَ مِنْ عُرْضِ هَذَا الْجَبَلِ مَا عِنْدَنَا مَا نُعْطِيكَ وَلَكِنْ عَسَى أَنْ نَبْعَثَكَ فِي بَعْثٍ تُصِيبُ مِنْهُ قَالَ فَبَعَثَ بَعْثًا إِلَى بَنِي عَبْسٍ بَعَثَ ذَلِكَ الرَّجُلَ فِيهِمْ
ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, “நான் அன்ஸாரிப் பெண் ஒருவளை மணமுடிக்கப்போகிறேன்” என்றார். அவரிடம் நபி (ஸல்), “நீர் அந்தப் பெண்ணைப் பார்த்துவிட்டீரா? ஏனெனில், அன்ஸாரி(ப் பெண்)களின் கண்களில் சிறிது (குறை) உள்ளது” என்றார்கள். அதற்கு அவர், “அந்தப் பெண்ணைப் பார்த்து விட்டேன்” என்றார். “எவ்வளவு மணக்கொடை வழங்கி அவளை மணக்கப்போகின்றீர்?” என்று நபி (ஸல்) கேட்டார்கள். அவர், “நான்கு ஊக்கியாக்கள்#” என்றார். நபி (ஸல்), “நான்கு ஊக்கியாக்களா? நீவிர் வெள்ளியை இந்த மலைப் பகுதியிலிருந்து குடைந்தெடுப்பவர்களோ! உமக்கு(உதவித் தொகையாக)க் கொடுப்பதற்கு எம்மிடம் எதுவுமில்லை. ஆயினும், நாம் உம்மை ஒரு படைப் பிரிவுக்கு அனுப்புவோம். அப்போது, போர்ச் செல்வத்திலிருந்து நீர் அதைப் பெற்றுக்கொள்ளக்கூடும்” என்றார்கள்.
அவ்வாறே நபி (ஸல்) ‘பனூ அப்ஸ்’ குலத்தாரை நோக்கி ஒரு படைப் பிரிவை அனுப்பியபோது அவரையும் அவர்களுடன் அனுப்பிவைத்தார்கள்.
அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி)
குறிப்பு :
# ஓர் ஊக்கியா என்பது 122.472 கிராம் வெள்ளி எடைக்கு ஒப்பாகும். நான்கு ஊக்கியா என்பது 489.888 கிராம் வெள்ளிக்கு ஒப்பாகும்.