حَدَّثَنَا عَمْرُو بْنُ عَلِيٍّ حَدَّثَنَا عَبْدُ الْأَعْلَى حَدَّثَنَا هِشَامُ بْنُ أَبِي عَبْدِ اللَّهِ عَنْ أَبِي الزُّبَيْرِ عَنْ جَابِرٍ:
أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ رَأَى امْرَأَةً فَأَتَى امْرَأَتَهُ زَيْنَبَ وَهِيَ تَمْعَسُ مَنِيئَةً لَهَا فَقَضَى حَاجَتَهُ ثُمَّ خَرَجَ إِلَى أَصْحَابِهِ فَقَالَ إِنَّ الْمَرْأَةَ تُقْبِلُ فِي صُورَةِ شَيْطَانٍ وَتُدْبِرُ فِي صُورَةِ شَيْطَانٍ فَإِذَا أَبْصَرَ أَحَدُكُمْ امْرَأَةً فَلْيَأْتِ أَهْلَهُ فَإِنَّ ذَلِكَ يَرُدُّ مَا فِي نَفْسِهِ
حَدَّثَنَا زُهَيْرُ بْنُ حَرْبٍ حَدَّثَنَا عَبْدُ الصَّمَدِ بْنُ عَبْدِ الْوَارِثِ حَدَّثَنَا حَرْبُ بْنُ أَبِي الْعَالِيَةِ حَدَّثَنَا أَبُو الزُّبَيْرِ عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ رَأَى امْرَأَةً فَذَكَرَ بِمِثْلِهِ غَيْرَ أَنَّهُ قَالَ فَأَتَى امْرَأَتَهُ زَيْنَبَ وَهِيَ تَمْعَسُ مَنِيئَةً وَلَمْ يَذْكُرْ تُدْبِرُ فِي صُورَةِ شَيْطَانٍ
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) (ஒரு முறை கவர்ச்சியான) ஒரு பெண்ணைப் பார்த்தார்கள். உடனே (பிறருக்குப் படிப்பினைக்காக) அவர்கள் தம் துணைவி ஸைனப் (ரலி) அவர்களிடம் சென்றார்கள். அப்போது அவர் தமக்குரிய ஒரு தோலைப் பதனிட்டுக் கொண்டிருந்தார். அவரிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) தமது தேவையை நிறைவேற்றிவிட்டுப் பிறகு தம் தோழர்களிடம் வந்து, “ஒரு பெண் (கவர்ச்சி காட்டி நடந்து வந்தால்) ஷைத்தானின் (தூண்டிவிடும்) கோலத்தில் எதிர் வருகின்றாள்; ஷைத்தானின் (தூண்டிவிடும்) கோலத்திலேயே திரும்பிச் செல்கின்றாள். எனவே, உங்களில் ஒருவரது பார்வை ஒரு பெண்ணின் மீது விழுந்து(இச்சையைக் கிளறி)விட்டால், உடனே அவர் தம் துணைவியிடம் செல்லட்டும். ஏனெனில், அது, அவரது மனத்தில் தோன்றிய (தவறான) இச்சையைப் போக்கிவிடும்” என்று கூறினார்கள்.
அறிவிப்பாளர் : ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி)
குறிப்பு :
ஹர்பிப்னு அபில் ஆலியா (ரஹ்) வழி அறிவிப்பு, “நபி (ஸல்) ஒரு (கவர்ச்சியான) பெண்ணைப் பார்த்தார்கள் …” என ஆரம்பமாகிறது. மேலும் அதில், “நபியவர்கள் உடனே தம் துணைவியார் ஸைனப் (ரலி) அவர்களிடம் சென்றார்கள். அப்போது அவர் -(தமக்கான எனும் குறிப்பின்றி)- ஒரு தோலைப் பதனிட்டுக்கொண்டிருந்தார்” என்று மட்டுமே காணப்படுகிறது. அத்துடன், “ஷைத்தானின் (தூண்டிவிடும்) கோலத்திலேயே அந்தப் பெண் திரும்பிச் செல்கிறாள்” எனும் சொற்றொடர் இடம்பெறவில்லை.