அத்தியாயம்: 16, பாடம்: 21, ஹதீஸ் எண்: 2598

‏و حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ نُمَيْرٍ ‏ ‏وَأَبُو كُرَيْبٍ ‏ ‏قَالَا حَدَّثَنَا ‏ ‏أَبُو أُسَامَةَ ‏ ‏عَنْ ‏ ‏عُمَرَ بْنِ حَمْزَةَ ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ الرَّحْمَنِ بْنِ سَعْدٍ ‏ ‏قَالَ سَمِعْتُ ‏ ‏أَبَا سَعِيدٍ الْخُدْرِيَّ ‏ ‏يَقُولُ ‏

‏قَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏إِنَّ مِنْ أَعْظَمِ الْأَمَانَةِ عِنْدَ اللَّهِ يَوْمَ الْقِيَامَةِ الرَّجُلَ ‏ ‏يُفْضِي ‏ ‏إِلَى امْرَأَتِهِ ‏ ‏وَتُفْضِي إِلَيْهِ ثُمَّ يَنْشُرُ سِرَّهَا ‏


وَقَالَ ‏ ‏ابْنُ نُمَيْرٍ ‏ ‏إِنَّ أَعْظَمَ

“அல்லாஹ்வின் பார்வையில் மறுமை நாளில் மாபெரும் நம்பிக்கைத் துரோகம் என்பது யாதெனில், கணவனும் மனைவியும் உடலுறவில் ஈடுபட்டு, பின்னர் அவளது இரகசியத்தை அவன் (மக்களிடையே) பரப்புவதேயாகும்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அபூஸயீத் அல்குத்ரீ


குறிப்பு :

“மாபெரும் நம்பிக்கைத் துரோகம் என்பது …” என்று இப்னு நுமைர் (ரஹ்) கூறுகின்றார்.