و حَدَّثَنَا يَحْيَى بْنُ أَيُّوبَ وَقُتَيْبَةُ بْنُ سَعِيدٍ وَعَلِيُّ بْنُ حُجْرٍ قَالُوا حَدَّثَنَا إِسْمَعِيلُ بْنُ جَعْفَرٍ أَخْبَرَنِي رَبِيعَةُ عَنْ مُحَمَّدِ بْنِ يَحْيَى بْنِ حَبَّانَ عَنْ ابْنِ مُحَيْرِيزٍ أَنَّهُ قَالَ:
دَخَلْتُ أَنَا وَأَبُو صِرْمَةَ عَلَى أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ فَسَأَلَهُ أَبُو صِرْمَةَ فَقَالَ يَا أَبَا سَعِيدٍ هَلْ سَمِعْتَ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَذْكُرُ الْعَزْلَ فَقَالَ نَعَمْ غَزَوْنَا مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ غَزْوَةَ بَلْمُصْطَلِقِ فَسَبَيْنَا كَرَائِمَ الْعَرَبِ فَطَالَتْ عَلَيْنَا الْعُزْبَةُ وَرَغِبْنَا فِي الْفِدَاءِ فَأَرَدْنَا أَنْ نَسْتَمْتِعَ وَنَعْزِلَ فَقُلْنَا نَفْعَلُ وَرَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بَيْنَ أَظْهُرِنَا لَا نَسْأَلُهُ فَسَأَلْنَا رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ لَا عَلَيْكُمْ أَنْ لَا تَفْعَلُوا مَا كَتَبَ اللَّهُ خَلْقَ نَسَمَةٍ هِيَ كَائِنَةٌ إِلَى يَوْمِ الْقِيَامَةِ إِلَّا سَتَكُونُ
حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ الْفَرَجِ مَوْلَى بَنِي هَاشِمٍ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الزِّبْرِقَانِ حَدَّثَنَا مُوسَى بْنُ عُقْبَةَ عَنْ مُحَمَّدِ بْنِ يَحْيَى بْنِ حَبَّانَ بِهَذَا الْإِسْنَادِ فِي مَعْنَى حَدِيثِ رَبِيعَةَ غَيْرَ أَنَّهُ قَالَ فَإِنَّ اللَّهَ كَتَبَ مَنْ هُوَ خَالِقٌ إِلَى يَوْمِ الْقِيَامَةِ
நானும் அபூஸிர்மா (ரஹ்) அவர்களும் அபூஸயீத் அல்குத்ரீ (ரலி) அவர்களிடம் சென்றோம். அப்போது அபூஸிர்மா, “அபூஸயீத் அவர்களே! ‘அஸ்லு’ பற்றித் தாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறியதைச் செவியுற்றுள்ளீர்களா?” என்று கேட்டார்கள். அதற்கு அபூஸயீத் (ரலி), “ஆம்!, நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் பனூ முஸ்தலிக் போரில் கலந்து கொண்டோம். அப்போது, உயர்ந்த அரபு இனப் பெண்களைப் போர்க் கைதிகளாகப் பிடித்தோம். நீண்ட காலம் நாங்கள் பெண்சுகம் கிடைக்கப் பெறாத நிலையில், போரில் பிடிபட்டுள்ள பெண் கைதிகளிடம் சுகம் பெறலாம் என ஆசைப்பட்டோம். ஆனால், உறவின்போது பெண் கைதிகள் கருவுற்றுவிடக் கூடாது என்பதிலும் கவனமாக இருந்தோம்(@). ஆகையால், உடலுறவின்போது இடைமுறிப்பு(அஸ்லு)ச் செய்து கொள்ளத் தீர்மானித்தோம்.
இந்நிலையில் “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) நம்முடன் இருக்கும்போது, அவர்களிடம் கேட்காமல் நாம் ‘அஸ்லு’ச் செய்வதா?” என்று எங்களுக்குள் பேசிக்கொண்டோம். எனவே, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் நாங்கள் (அஸ்லு பற்றிக்) கேட்டோம். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) “அவ்வாறு நீங்கள் (அஸ்லு) செய்யாவிட்டாலும் உங்கள் மீது (குற்றம்) இல்லை. படைக்க வேண்டுமென அல்லாஹ் எழுதிவிட்ட எந்த ஓர் உயிரும் மறுமை நாள்வரை உருவாகியே தீரும்” என்று கூறினார்கள் என்று அபூஸயீத் (ரலி), விவரித்தார்கள்.
அறிவிப்பாளர் : அபூஸயீத் அல்குத்ரீ (ரலி) வழியாக அப்துல்லாஹ் பின் முஹைரீஸ் (ரஹ்)
குறிப்புகள் :
மூஸா பின் உக்பா (ரஹ்) வழி அறிவிப்பில், “…ஏனெனில், அல்லாஹ் மறுமை நாள்வரை தான் படைக்கவிருப்பவற்றை எழுதி (முடித்து)விட்டான்” என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள் என்று இடம்பெற்றுள்ளது.
($) உடலுறவின்போது இடைமுறிப்பு (அஸ்லு) என்பது அந்தக் கால அரபியர்களிடம் இயல்பாக வழக்கிலிருந்த, மருந்தில்லாக் கருத்தடை முறையாகும். உடலுறவின்போது ஆணின் விந்து, பெண்ணின் கருவறைக்குச் சென்றுவிடாமலிருக்க உடலுறவின் இடையிலேயே ஆண் விலகிக் கொள்வதற்கு ‘அஸ்லு’ என்று சொல்லப்படும்.
(@) பெண் கைதிகள் கருவுற்றுவிட்டால் அவர்களுக்கான ஈட்டுத்தொகை பெற்றுக்கொண்டு விடுதலை செய்ய முடியாது.